விஸ்வரூபம் படம்: ரஜினிகாந்த் அறிக்கைக்கு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் பதில்

விஸ்வரூபம் படம்: ரஜினிகாந்த் அறிக்கைக்கு 
முஸ்லிம் முன்னேற்றக்கழகம் பதில்
26-01-2013
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாது:- இஸ்லாமியர்களின் நண்பராக விளங்கும் ரஜினிகாந்த் தனது ஆருயிர் நண்பர் கமலஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்டிருக்கும் தடையை கவனத்தில் கொண்டு, இஸ்லாமிய சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியிருக்கிறார்.

ரஜினிகாந்த் பண்பட்ட மனிதர், ஆன்மீகவாதி, யாரையும் காயப்படுத்தும்படி பேசாதவர். அவரது திரைப்படங்களில் கூட எந்த ஒரு தனி மனிதரையும் சமூகத்தையும் தாக்கி வசனமோ காட்சிகளோ இடம் பெறாது. 1998-ம் ஆண்டு கோவை மாநகரில் தொடர் குண்டுகள் வெடித்து தமிழகமே பதற்றமாக இருந்த சமயத்தில், சீனாவில் சுற்றுப் பயணத்தில் இருந்த ரஜினிகாந்த் பாதியிலேயே சென்னைக்கு திரும்பி வந்தார்.
எனது அருமை இஸ்லாமிய சகோதரர்கள் இந்தப் பாதக செயலை செய்திருக்கமாட்டார்கள் என்று கூறி தமிழகத்தை சூழ்ந்திருந்த பதற்றம் தணிய காரணமாக இருந்தார். அன்று அவரது ஆதரவான குரல், முஸ்லிம்களுக்கு, வெந்த புண்ணில் மருந்திடுவதாக அமைந்தது. இன்றும் அதை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம். கமலஹாசனும் முஸ்லிம் சமூகத்தின் மீது நட்பும் சகோதர வாஞ்சையும் கொண்டவர்தான் என்பதை நாங்கள் அறிவோம். அவர், முற்போக்கு சிந்தனைக் கொண்டவர். பிறரது உணர்வுகளைப் புரிந்து கொள்பவர். 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து கமலஹாசன், பிரதமர் நரசிம்மராவை நேரில் சந்தித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்தார் என்பதையும் நாங்கள் மறக்கவில்லை.

இப்போதும் நாங்கள் கமலஹாசனை எதிரியாகக் கருதவில்லை. அவர் எடுத்திருக்கும் திரைப்படம் ஏற்படுத்தப்போகும் பாதிப்பைக் கருத்தில் கொண்டுதான் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம். விஸ்வரூபம் படம் தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து கமலஹாசன் ஏதேதோ கூறுகிறார். முதலில் கலாச்சார பயங்கரவாதத்தை எதிர்கொள்வேன் என்றார். இப்போது முதுகில் குத்திவிட்டார்கள் என்கிறார். தேசப்பக்தி உள்ள முஸ்லிம்கள் எதிர்க்கமாட்டார்கள் என்கிறார்.
முஸ்லிம்களை கொச்சைப்படுத்த கமல் எடுத்திருக்கும் விஸ்வரூபம் படப்பிரச்சினை கருத்து தீவிரவாதமாகவே பார்க்கிறோம். படத்தை பார்க்க காலத்தை நீட்டித்தார். படத்தை இறுதிவரை பார்த்தப்பின் அதிர்ச்சி அடைந்ததால் அவருடன் மேலும் ஏதும் பேசாமல் கிளம்பினோம். அவர் மீது எங்களுக்கு இருந்த நம்பிக்கையை படம் தகர்த்து விட்டது.

இந்தப் படத்தில் எந்த மாச்சரியங்களும் இடம் பெறாது என்றும், கமலுடன் நடந்த முதல் இரண்டு சந்திப்புகளில் அடிப்படையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்காது நம்பிக்கையும் எங்களுக்கு ஏற்பட்டது. ஆனால் அவருடைய அலுவலகத்தில் இந்த படத்தை நாங்கள் பார்த்தபோது அங்குலம் அங்குலமாக படம் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு விரோதமாகவும் அனைத்து காட்சிகளும், கதாபாத்திரங்களும் ஒரு வெறுப்பு பிரசாரமாகவே அமைந்திருந்தது. இதன் காரணமாகத்தான் இப்படத்தை தடை செய்ய தமிழக அரசிடம் கோரினோம்.

படத்தை பார்த்த பின்னர் நாங்கள் படத்திற்கு கமலிடம் நற்சான்றிதழ் எதுவும் தரவில்லை. தேசப்பற்று இருக்கின்ற காரணத்தால்தான், நாட்டில் ஏதும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது என்ற அக்கறையில்தான் களத்தில் இறங்கினோம். எனவே கமலஹாசன் கருத்தை த.மு.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கமலஹாசனும் முஸ்லிம் சமூகத்தின் மீது நட்பும் சகோதர வாஞ்சையும் கொண்டவர்தான் என்பதை நாங்கள் அறிவோம். அவர், முற்போக்கு சிந்தனைக் கொண்டவர். பிறரது உணர்வுகளைப் புரிந்து கொள்பவர். 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து கமலஹாசன், பிரதமர் நரசிம்மராவை நேரில் சந்தித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்தார் என்பதையும் நாங்கள் மறக்கவில்லை. இப்போதும் நாங்கள் கமலஹாசனை எதிரியாகக் கருதவில்லை. அவர் எடுத்திருக்கும் திரைப்படம் ஏற்படுத்தப்போகும் பாதிப்பைக் கருத்தில் கொண்டுதான் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம்.
நாங்கள் விஸ்வரூபம் திரைப்படம் விஷயத்தில் பொறுமைக் காத்தோம். மூன்று மாதங்களுக்கு முன்னரே திரைப்படத்தை காண்பிக்கும்படி கேட்டுக் கொண்டோம். அவர் காலம் தாழ்த்திக் கொண்டே வந்தார். திரையிட வெகு சமீபமாகத்தான் படத்தைப் போட்டுக் காண்பித்தார்.

படத்தில் அவர் சித்தரிக்கும் காட்சிகள் எங்களைக் கவலையுறச் செய்தது. உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் விரும்பத்தகாத செயல்கள் காரணமாக முஸ்லிம்களாகிய நாங்கள் ஏற்கனவே மனவேதனை அடைந்திருக்கிறோம். காயம் பட்டிருக்கும் எங்களை ஒரு நண்பராக இருந்து கொண்டு கமலஹாசன் இப்படியானதொரு திரைப்படத்தை எடுத்திருப்பதுதான் எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. சினிமாவைக் கொண்டு ஒரு சமூகத்தைக் குற்றவாளியாக சித்தரிக்க முடியும். இதை ஏன் கமலஹாசன் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் எங்கள் வருத்தம். இதனை ரஜினிகாந்த் பரிசீலிக்க வேண்டும். விஸ்வரூபம் படம் குறித்த ரஜினிகாந்த் ஆலோசனைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விஸ்வரூபம் படம் தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து கமலஹாசன் ஏதேதோ கூறுகிறார். முதலில் கலாச்சார பயங்கரவாதத்தை எதிர்கொள்வேன் என்றார். இப்போது முதுகில் குத்தி விட்டார்கள் என்கிறார். தேசப்பக்தி உள்ள முஸ்லிம்கள் எதிர்க்கமாட்டார்கள் என்கிறார். 

0/Post a Comment/Comments

Previous News Next News
New Vision
New Vision