விஸ்வரூபம் திரைப்பட சர்ச்சை: பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண கருணாநிதி வேண்டுகோள்

விஸ்வரூபம் திரைப்பட சர்ச்சை: பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண கருணாநிதி வேண்டுகோள்
27-01-2013
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கலைஞானி கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்‘ திரைப்படம் தொடர்பாக; தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர்  ரிபாயி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைப்போல; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், கலைஞானி கமல்ஹாசனும், இஸ்லாமிய சமுதாயத்திடம் பாசமும் பற்றும் மதிப்பும் மரியாதையும் உடையவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.


உலகில் எந்தவொரு பகுதியிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெறும் விமர்சனங்களையோ கிளர்ச்சிகளையோ, நானும் என் தலைமையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகமும் என்றைக்கும் ஆதரித்தது இல்லை, அவற்றை எதிர்த்தே குரல் கொடுத்திருக்கிறோம். இஸ்லாமிய சமூகத்தினர்க்கும், பிற சமூகத்தினர்க்கும் இடையே நல்லுறவு என்றைக்கும் பட்டுப்போகாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலே நான் மிகுந்த அக்கறை உடையவன் என்பதை எவரும் மறுக்க முடியாது.


அந்த அடிப்படையில் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள சர்ச்சையை, மேலும் நீட்டிக்காமல், ஜனநாயக ரீதியான பேச்சுவார்த்தை - கலந்தாலோசனை மூலமாக, முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். சட்டம் - ஒழுங்கு அமைதியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பிலுள்ள தமிழக அரசும் அதற்கு ஒத்துழைத்திட வேண்டும். இவ்வாறு கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous News Next News
New Vision
New Vision