திருச்சி – திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயிலை நாகர்கோவில் வரை நீட்டித்து இயக்க நெல்லை எம்.பியிடம் கோரிக்கை

திருச்சி – திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயிலை நாகர்கோவில் வரை நீட்டித்து இயக்க நெல்லை எம்.பியிடம் கோரிக்கை
14-09-2013
திருச்சி – திருநெல்வேலி பகல் நேர இன்டர்சிட்டி ரயிலை 22627-22628 நாகர்கோவில் வரை நீட்டித்து இயக்க நடவடிக்கை எடுக்குமாறு ராதாபுரம் நான்குநேரி தாலுகா ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கும், நெல்லை எம்.பிக்கும் கோரிக்கை மனு அளிக்கபட்டது. இது குறித்து சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் கூறியதாவது,

திருநெல்வேலி மாவட்டத்தில் தென்பகுதியில் அமைந்துள்ள தாலுகாக்கள் ராதாபுரம் மற்றும் நான்குநேரி ஆகும். இந்த இரண்டு தாலுகாவில் நான்குநேரி தாலுகாவில் உள்ள மக்கள் தொகை 2,25,457 ஆகவும் ராதாபுரம் தாலுகாவில் உள்ள மக்கள் தொகை 3,02,268 ஆகவும் உள்ளது. வள்ளியூர் டவுன் திருநெல்வேலி மாவட்டத்தில் விரைவாக வளர்ந்து வரும் ஒன்று டவுன் ஆகும். வள்ளியூர் டவுன் திருநெல்வேலி மற்றும் நாகர்கோவிக்கும் இடைப்பட்ட இடத்தில் அமைந்துள்ளது. வள்ளியூர் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் அதிக அளவில் காற்று மூலமாக மின்சாரம் தயாரிக்கும் காற்றாடிகள் அதிக அளவில் உள்ளன. ராதாபுரம் மற்றும் நான்குநேரி தாலுகாவில் உள்ள ஐந்து லட்ச மக்கள் ரயில் போக்குவரத்துக்கு வள்ளியூர் மற்றும் நான்குநேரி ரயில் நிலையத்தையே நம்பி உள்ளனர். இந்த இரண்டு ரயில் நிலையங்கள் திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்ப்பட்டு வருகிறது. இதனால் இந்த ரயில் நிலையங்கள் கோட்ட அதிகாரிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்த தாலுகா பயணிகள் திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருச்சி போன்ற இடங்களுக்கு வேலைவாய்ப்பிற்காகவும், மேற்கல்விக்காகவும், வணிக சம்மந்தமாகவும் தினசரி ஆயிரகணக்காகவர்கள் பயணிக்கின்றனர். 

மதுரையில் உயர்நீதி மன்றம், வேலைவாய்ப்பு அலுவலகமும், திருநெல்வேலியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம், பல்கலைகழகம் மற்றும் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு தினசரி நூற்றுகணக்காக பயணிகள் இந்த இரண்டு தாலுகாவிலிருந்து பயணிக்கின்றனர். இந்த தாலுகாவில் உள்ள பொதுமக்கள் தங்கள் மாவட்ட தலைநகரான திருநெல்வேலியில் உள்ள மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்துக்கு தினசிரி அலுவலக பணிக்காகவும், திருநெல்வேலியில் உள்ள கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி சம்மந்தமாகவும் மற்றும் பல்வேறு பணிகள் நிமித்தம் திருநெல்வேலிக்கு பயணிக்கின்றனர். வள்ளியூரிலிருந்து காலை 8:10 மணிக்கு நாகர்கோவில் - கோவை பயணிகள் ரயிலை அடுத்து மாலை 6:15 மணிக்கு தான் திருநெல்வேலி, மதுரை மார்க்கம் கன்னியாகுமரி – சென்னை தினசரி ரயில் வசதி உள்ளது. இதைபோல் மறுமார்க்கம் மதுரை, திருச்சியிலிருந்து அதிகாலையிலிருந்து மதியம் வரை எந்த ஒரு தினசரி ரயில் வசதியும் இல்லை என்பது குறிப்பிடதக்கது. பகல் நேரங்களில் சுமார் 10 மணி நேரம் இரண்டு மார்க்கங்களிலும் எந்த ஒரு தினசரி ரயிலும் இல்லாதததால் வள்ளியூர் ரயில் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. திருநெல்வேலி – நாகர்கோவில் ரயில்வழித்தடம் 02-04-1981-ம் ஆண்டு துவங்கப்பட்டு இன்றுவரை 33 ஆண்டுகளாக பகலில் பத்து மணிநேரம் ஒரு தினசரி ரயில் கூட இயக்காமல் இந்தவழித்தடம் உள்ளது. பல கோடிகள் செலவு செய்து ரயில் வழித்தடம் அமைத்தும் கூடுதல் ரயில்கள் இயக்காமல் இருப்பது எந்த காரணத்துக்காக ரயில்வழித்தடம் அமைக்கப்பட்டதோ அதன் நோக்கம் நிறைவேறாமலே உள்ளது. ரயில்வே துறை அதிகாரிகள்இந்த தடத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த பகுதி பயணிகள் விரும்புகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரிந்து 1 நவம்பர் 1956 –அன்று தாய்தமிழகத்துடன் இணைந்தது. கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தின் கடைகோடி மாவட்டம் ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லையாக திருநெல்வேலி மாவட்டம் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தமிழகத்துக்கு ஓர் ரயில் இயக்கப்பட்டால் இந்த ரயில் நெல்லை மாவட்டத்தின் வள்ளியூர், நான்குநேரி, திருநெல்வேலி போன்ற முக்கிய பகுதிகளை கடந்தே செல்கிறது. இவ்வாறு இயக்கப்படுவதால் நெல்லை மாவட்டத்தின் வள்ளியூர், நான்குநேரி போன்ற பகுதிகளுக்கு நெரடியாக ரயில் வசதி கிடைக்கிறது. குமரி மாவட்டத்திலிருந்தும் நெல்லை மாவட்ட தென் பகுதியிலிருந்தும் அவர்களின் சொந்த மாநிலத்தின் பல பகுதிகளுக்கு செல்ல பத்து மணிநேரம் எந்த ஒரு தினசரி ரயில் இல்லாமல் தற்போது உள்ளது. தமிழகத்தின் குமரி மற்றும் நெல்லை மாவட்ட ரயில்வழித்தடங்கள் அணைத்தும் திருவனந்தபுரம் கோட்டத்தில் இருப்பதாலேயே இந்த தடத்தில் புதிய ரயில்கள் இயக்க கோட்ட அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுப்பதில்லை என்ற கருத்து இந்த பகுதி மக்களிடம் பரவலாக உள்ளது.

கடந்த 2012 ரயில் பட்ஜெட்டில் திருச்சி – திருநெல்வேலி வழி தடத்தில் 22627-22628 என்ற எண் கொண்ட பகல் நேர தினசரி இன்டர்சிட்டி ரயில் அறிவிக்கபட்டு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் திருச்சியிலிருந்து காலையில் 7:15க்கு புறப்பட்டு திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்ப்பட்டி, வாஞ்சி மணியாச்சி வழியாக மதியம் 1:00 மணிக்கு திருநெல்வேலி வந்து சேர்ந்து மதியம் திருநெல்வேலியிருந்து 2:15க்கு புறப்பட்டு இரவு திருச்சிக்கு 8:00 மணிக்கு செல்கிறது. இந்த ரயில் பகல்நேர ரயிலாக இருப்பதால் ராதாபுரம் மற்றும் நான்குநேரி தாலுகா வியாபாரிகளுக்கு மதுரை, விருதுநகர் சந்தையிலிருந்து சரக்கு போக்குவரத்துக்கு மிகவும் பயனள்ளதாக இருக்கும். இந்த ரயிலை ராதாபுரம் மற்றும் நான்குநேரி தாலுகா மக்களின் நலன் கருதி நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்து இயக்க நடவடிக்கை எடுக்குமாறு ராதாபுரம் நான்குநேரி தாலுகா ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை நெல்லை எம்.பியிடம் வைக்கபட்டுள்ளது.

வள்ளியூரில் நிறுத்தம்:
இந்த ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்து இயக்கும் பட்சத்தில் வள்ளியூர் மற்றும் நான்குநேரி ரயில் நிலையத்தில் நிரந்தரமாக நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நெல்லை எம்.பியும் நடவடிக்கை எடுத்து இந்த ரயில் நீட்டிப்பு செய்யும் பட்சத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய நிறுத்தங்களில் நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார்கள்.


S.RajKumar M.A,
President,
Radhapuram Nanguneri Taluk Rail Passenger Association,
128 Main Road,
Vallioor,
Pin-627117,
Tirunelveli District
Tamilnadu.
Mobile 9443184380

0/Post a Comment/Comments

Previous News Next News
New Vision
New Vision