ரஷ்ய தேர்தல்: கோவாவில் வசிக்கும் ரஷ்ய மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்

New Vision
ரஷ்ய தேர்தல்: கோவாவில் வசிக்கும் ரஷ்ய மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்

ரஷியா நாட்டில் 450 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்ற கீழ்சபை இயங்கி வருகிறது. ‘டுமா’ என்றழைக்கப்படும் இந்த கீழ்சபைக்கு வரும் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.இந்தியாவின் பல பகுதிகளில் ரஷியா நாட்டைச் சேர்ந்த பலர் வசித்து வருகின்றனர். குறிப்பாக, இந்தியாவின் புகழ்மிக்க கடற்கரை நகரமாக விளங்கும் சுற்றுலாத்தளமான கோவாவில் ரஷியா நாட்டைச் சேர்ந்த பல குடும்பங்கள் இங்கு தொழில் செய்தபடி வசித்து வருகின்றன. இதுதவிர, ஆண்டுதோறும் ரஷியாவைச் சேர்ந்த சுமார் 70 ஆயிரம் பேர் கோவாக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர். இவர்கள் ரஷியா நாட்டின் பாராளுமன்ற கீழ்சபைக்கு நடைபெற்றுவரும் தேர்தலில் கோவாவில் இருந்தவாறு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவ்வகையில், வரும் 18-ம் தேதி ரஷியாவில் நடைபெறும் ‘டுமா’ தேர்தலில் கோவாவில் இருக்கும் ரஷிய நாட்டினர் நேற்று வாக்களித்தனர். தலைநகர் பனாஜியில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள போர்வோரிம் கிராமத்தில் இதற்காக தற்காலிக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

ரஷிய தூதரகத்தின் உயரதிகாரிகளின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் பெட்டியில் சீல் வைக்கப்பட்டு மும்பை கொண்டு செல்லப்பட்டு அங்கிருருந்து ரஷ்யா கொண்டு செல்லப்படுகிறது.
New Vision

Post a Comment

Previous News Next News