டெல்லியில் 2.25 கோடி மதிப்புள்ள 900 ஐபோன்களை திருடிய இரண்டு வாலிபர்கள் கைது
டெல்லியில் தெற்கு பகுதியில் உள்ள ஒக்லாவில் இருந்து தென்மேற்கு நகரான டார்கா பாகுதிக்கு சுமார் ரூ. 2.25 கோடி மதிப்புள்ள 900 ஆயிரம் ஐபோன்களை ஏற்றிக்கொண்டு டிரக் ஒன்று சென்று கொண்டிருந்தது.
இந்த டிரக் ராஜோக்ரி மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது, திடீரென டிரக்கை வழிமறித்த கும்பல் ஒன்று ஓட்டுநரை சிறைபிடித்து டிரக்கை கடத்தியது. டாவ்ர்கா லிங் சாலையில், ஓட்டுநரை தூக்கி வீசி விட்டு டிரக்கில் இருந்த மொபைல் போன்களை கொள்ளையடித்துசென்றனர். விலையுர்ந்த செல்போன்கள் திருடப்பட்டது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மேக்ப்தாப் அலம் (24) அர்மன் (22) என்ற வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 900 ஐபோன்களும் மீட்கப்பட்டது. மேலும் குற்ற சம்பவத்துக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கொள்ளைக்கு மேலும் சில நபர்கள் உடைந்தையாக செயல்பட்டது தெரியவந்தது.
அவர்களில் போலா மற்றும் பிரதீப் ஆகிய இருநபர்கள் இதே டிரக்கின் ஓட்டுநராக பணி புரிந்து வந்துள்ளனர். கடந்த இரு வாரத்திற்கு முன் தான் பணியை விட்டு விலகிய நிலையில் திட்டம் தீட்டி கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஏனைய நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
Post a Comment