நரேந்திரமோடிக்கு ஜப்பான் பிரதமர் அழைப்பு

New Vision
நரேந்திரமோடிக்கு ஜப்பான் பிரதமர் அழைப்பு
21-05-2014
இந்திய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திரமோடியுடன் ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்சோ அபே நேற்று டெலிபோனில் பேசினார். அப்போது மோடிக்கு வாழ்த்து தெரிவித்த அவர், ஜப்பானில் நடைபெறும் இரு நாட்டு பிரதமர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். இந்தியா-ஜப்பான் இடையேயான நட்புறவு மற்றும் வர்த்தக உறவுகளை வளர்க்க தொடர்ந்து ஒத்துழைப்பு அளிப்பதாகவும் ஷின்சோ அபே, மோடியிடம் உறுதி அளித்தார்.

அழைப்பை ஏற்று நன்றி தெரிவித்த நரேந்திரமோடி, இந்தியாவின் வளர்ச்சிக்கு ஜப்பான் பெரும் பங்காற்றி வருவதாகவும், இந்த நல்லுறவு தொடர்ந்து புதிய வளர்ச்சியை எட்ட தனது ஒத்துழைப்பு தொடரும் என்றும் பிரதமர் ஷின்சோ அபேவிடம், மோடி உறுதி அளித்தார்.
New Vision

Post a Comment

Previous News Next News