மேல்நிலைப்பள்ளி முதலாமாண்டு பயிலும் சிறுபான்மை மாணவிகளுக்கு மவுலானா ஆசாத் கல்வி உதவித்தொகை
14-08-2013
குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
கல்வியில் சிறந்து விளங்கி கல்வியை தொடர வசதி இல்லாத சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த மாணவிகளுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டம் தமிழ்நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மதங்களைச் சேர்ந்த 11–ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு மத்திய அரசின் மவுலானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் ரூ.12 ஆயிரம் கல்வி உதவித்தொகை இரு தவணைகளில் வழங்கப்படுகிறது.
இக்கல்வி உதவித்தொகை கல்விக்கட்டணம், பாடப்புத்தகம், எழுதுபொருட்கள் மற்றும் உண்டு, உறையுள் கட்டணங்களுக்கான வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்க்கு 959 சிறுபான்மையின மாணவிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. (இஸ்லாமியர் 458, கிறிஸ்தவர் 499, சீக்கியர்–1, புத்த மதத்தினர்–1). இக்கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம், உறுதி ஆவணம் மற்றும் இதரவ விரங்களை http://maef.nic.in என்ற இணையதளத்திலிருந்து படியிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இந்த கல்வி உதவித்தொகை திட்டத்தில் நடப்பாண்டுக்கு உரிய காலக்கெடுவுக்குள் சிறுபான்மையின மாணவிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் நாகராஜன் கூறியுள்ளார்.
Post a Comment