நாகர்கோவிலின் சிறப்புகள்
குமரி மாவட்டத்தின் தலைநகரமான நாகர்கோவில் அன்றைய நாஞ்சில் நாட்டில் பெரிய நகரமாக இருந்தது. மாவட்டத்தின் மத்தியில் இருப்பதாலும், அருள்மிகு நாகராஜா திருக்கோவில் அமைந்திருப்பதாலும் நாகர்கோவில் என்ற பெயருடன் குமரி மாவட்டத்தின் தலைநகரமாக இருந்து வருகிறது.
1920-ம் ஆண்டு நாகர்கோவில் நகராட்சியானது. இங்கு நூற்றாண்டு கண்ட கல்வி நிலையங்கள் பல உள்ளன. இதன் காரணமாகவே தமிழகத்தில் படித்தவர்கள் அதிகம் உள்ள மாவட்டமாக திகழ்கிறது. மேலும் உயர் பதவிகளிலும், பொறுப்புகளிலும் இருப்பவர்கள் பலர் குமரி மாவட்டத்தினர் என்ற பெருமையும் உண்டு.
தென்னாட்டில் நாக வழிபாட்டிற்குரிய பல ஆலயங்கள் கேரளாவில் உள்ளன. தமிழ்நாட்டிலும் நாக வழிபாட்டிற்கென பல ஆலயங்கள் இருப்பினும் நாகத்தின் பெயரை கொண்ட நாகர்கோவிலில் உள்ள நாகராஜர் கோவிலே முதன்மையானது ஆகும்.
Post a Comment