மணிக்கூண்டு
(Tower Clock)
நாகர்கோவில் நகரின் முக்கிய அடையாளமாக திகழும் மணிமேடை 117 ஆண்டுகள் பழமையானதாகும். 1892-ம் ஆண்டு ஜூலை மாதம் பணி துவங்கி ஆகஸ்ட் மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டது. லண்டன் திருச்சபையை சார்ந்த மறை திரு. டத்தி ஹூவெர்ப் ஹோர்ஸ்லி மற்றும் நாகர்கோவிலை சார்ந்த கிருஷ்ணர் ஐயர், ரத்தினசாமி ஐயர் ஆகியோர் இணைந்து இதனை கட்டினர்.
1893-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருவாங்கூர் மன்னர் ஸ்ரீமூலம் திருநாள் ராமவர்மா அவர்களால் திறக்கப்பட்டது. இதற்கான செலவு ரூ. 3258, 9 சக்கரம், 12 காசுகள் ஆகும். (1 சக்கரம் என்பது 16 காசுகளாகும். 28 சக்கரம் 1 ரூபாயாகும்). இதில் பொருத்தப்பட்டுள்ள கடிகாரம் லண்டனில் 20 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டு, நாகர்கோவில் இங்கிலீஷ் மிஷினரிக்கு அன்பளிப்பாக வந்ததை திருவிதாங்கூர் மன்னர் ஸ்ரீமூலம் திருநாள் ரவிவர்மா வாங்கி நிறுவினார்.
இந்த மணி மேடையில் 1972-ம் ஆண்டு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் திருவுருவ சிலை நிறுவப்பட்டது. இத்தைய சிறப்பு வாய்ந்த மணிக்கூண்டும், நாகர்கோவில் நாகராஜா கோவில் நுழைவாயிலில் அமைந்துள்ள மகாமேரு மாளிகையும் நாகக்ரோவிலில் நகராட்சியின் அதிகார முத்திரையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Post a Comment