நாகர்கோவிலிருந்து சென்னைக்கு முழுவதும் குளிர்சாதனவசதிகளுடன் கூடிய தினசரி ரயில் இயக்க கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை
20-05-2013
நாகர்கோவிலிருந்து சென்னைக்கு முழுவதும் குளிர்சாதன பெட்டிகள் வசதிகளுடன் கூடிய தினசரி ரயில் இயக்க கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பாக ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனுஅளிக்கபட்டது. கோரிக்கை குறித்து சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் அறிக்கையில் தெருவிப்பதாவது
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ள மாவட்டம் ஆகும். குமரி மாவட்டம் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகை அடர்த்தி நிறைந்த மாவட்டம் ஆகும். குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரிந்து நான்கு நாலுகாகளுடன் தனி மாவட்டமாக 1956 நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி உருவாகி தாய் தமிழகத்துடன் இணைந்தது. குமரி மாவட்டத்தின் உள்ள மக்களின் மாநில தலைமை செயலகம், சட்டமன்ற வளாகம், அண்ணா பல்கலைகழகம், மருத்துவ பல்கலைகழகம் போன்ற அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்கள் என அனைத்து அலுவலகங்களும் சென்னையில் அமைந்துள்ளது. குமரி மாவட்டத்தின் குமரி மாவட்ட பயணிகள் திருநெல்வேலி,மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருச்சி, சென்னை போன்ற இடங்களுக்கு வேலைவாய்ப்பிற்காகவும், மேற்கல்விக்காகவும், வணிக சம்மந்தமாகவும் தினசரி ஆயிரகணக்காகவர்கள் பயணிக்கின்றனர்.
குமரி மாவட்ட மக்களின் தேவைக்கு அதிக ரயில்கள் தமிழகம் வழியாக தான் இயக்கப்பட வேண்டும். குமரி மாவட்ட ரயில் வழிதடங்கள் திருவனந்தபுரம் கோட்டத்தில் இருப்பதால் திருவனந்தபுர கோட்ட அதிகாரிகள் குமரியிலிருந்து திருநெல்வேலி, மதுரை மார்க்கம் எந்த ரயிலையும் இயக்க மறுக்கிறார்கள். நாகர்கோவிலிருந்து பகல் சுமார் 10 மணி நேரத்துக்கு எந்த ஒரு தினசரி ரயில் கூட திருநெல்வேலி மார்க்கம் இல்லை என்பது இதிலிருந்து புலனாகும். குமரி மாவட்டடத்திலிருந்து சென்னைக்கு இரண்டு இரவு நேர தினசரி ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் ஆண்டு முழுவதும் கூட்டம் நிரம்பிவழிகிறது. இதனால் குமரி மாவட்ட பயணிகள் சென்னை சென்றுவர செல்லமுன்பதிவு பயணச்சீட்டு கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். தற்போது இயங்கிகொண்டிருக்கும் அனைத்து ரயில்களில் தினசரி காத்திருப்போர் பட்டியல் 200 நபர்களை தாண்டி தற்போது உள்ளது. இதன் காரணமாக தெற்குரயில்வே சீசன் நேரங்களில் சிறப்புரயில்களை இயக்கிவருகிறது. அதிலும் முன் பதிவு பயணச்சீட்டு கிடைப்பது இல்லை.
போதிய ரயில் வசதி இல்லாத காரணத்தால் குமரி மாவட்டபயணிகள் தற்போது 1000 முதல் 2000 ரூபாய் வரை செலவு செய்து பாதுகாப்பின்றி ஆம்னிபேருந்துகளில் பயணம் செய்துவருகின்றனர். குமரி மாவட்ட பயணிகள் தற்போது குளிர்சாதன பெட்டிகளில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏழு குளிர்சாதன பெட்டிகளும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ ரயிலில் ஆறு குளிர்சாதன பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. ஓர் இரண்டு அடுக்கு குளிர்சாதன ரயில் பெட்டியில் 46 முதல் 52 பயணிகளும் மூன்று அடுக்கு குளிர்சாதன ரயில் பெட்டியில் 64 முதல் 72 பயணிகளும் பயணிக்கலாம். இந்த ரயில்களில் கூடுதல் குளிர்சாதன பெட்டிகள் இணைக்க முடியாத நிலை உள்ளது. நாகர்கோவிலிருந்து சென்னைக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர்சாதன மூன்று அடுக்குபெட்டியில் பயணம் செய்ய சுமார் 900 ரூபாயும் குளிர்சாதன இரண்டு அடுக்குபெட்டியில் பயணம் செய்யசுமார் 1300ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சென்னை–நாகர்கோவில் வழி தடம் தெற்கு ரயில்வே வழி தடங்களில் அதிக வருமானம் அளிக்கும் வழி தடம் ஆகும். இந்த வழி தடத்தில் அதிக ரயில்கள் இயக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். இந்த வழி தடத்தில் புதிய ரயில்களை இயக்க தென்மாவட்டமக்கள் ரயில்வேதுறைக்கு கோரிக்கை வைத்தால் தெற்குரயில்வே செங்கல்பட்டிலிருந்து கன்னியாகுமரி வரை ஒருவழிபாதையாக இருப்பதாக காரணத்தை கூறி ரயில்வேதுறை தொடர்ந்து மறுத்துவருகிறது. தமிழகத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாதது யார் தவறு? மக்கள் தவறா? போதிய அளவு உள்கட்டமைப்புகள் இல்லை என்று கூறியே பலஆண்டுகளாக தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கவேண்டும் என்ற நீண்டகாலநியாமான கோரிக்கையை புறக்கணிப்பது எந்தவகையில் நியாயம் என்று தெரியவில்லை. இந்திய ரயில்வேதுறை பல்வேறுமுக்கிய நகரங்களுக்கு இடையே பல்வேறு வகைகளில் அதிவேகமாகபயணிக்கும் வகையில் சொகுசு ரயில்களை இயக்கிவருகிறது.
இந்தரயில்கள் ராஜதானி, கரீப்ரத் என்றுசொல்லப்படும் ஏழைகளின் ரதம், சதாப்திரயில், டொரோண்டோரயில், ஜனசதாப்தி, இரண்டு அடுக்கு பெட்டி ரயில்கள் என்றபெயர்களில் இயங்கிவருகிறது. தமிழ்நாட்டில் இயக்கப்படும் இது போன்ற அனைத்துரயில்களும் சென்னையுடன் நின்றுவிடுகிறது. இந்தரயில்கள் தமிழகத்தில் வெறும் 60கி.மீ தூரம் மட்டுமே பயணிக்கிறது. தமிழகம் 32 மாவட்டங்களுடன் 7,21,38,958 மக்கள் தொகையும் 130,058 K.m2 மொத்தபரப்பளவு கொண்டு சென்னைக்கு தெற்கே 700 கி.மீ தூரம் வரை பரந்து விரிந்து காணப்படுகிறது. இது போன்ற ரயில்கள் தென் தமிழ்நாட்டுக்கு இயக்கப்படுவது கிடையாது. ஆகவே தென்தமிழ்நாட்டு பயணிகளின் வசதிக்காகவும் முழு தமிழ்நாடு பயணிகளும் பயன்படும் வகையில் நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூர்க்கு தினசரி செல்லதக்கவகையில் 24 பெட்டிகளும் குளிர்சாதனவசதிகளுடன் கூடிய ரயில் இயக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
Thanks & Regards,
P.Edward Jeni
Secretary
Kanyakumari District Railway User's Association (KKDRUA)
IInd Floor, 4 Gandhi Street,
Kottar,
Nagercoil -629002,
Kanyakumari District
G.S.M : +91 9443002949
Post a Comment