புதிய ரயில் காலஅட்டவணையில் இன்டர்சிட்டி ரயிலுக்கு இரணியலில் நிறுத்தம் இல்லை

இந்த ஆண்டிற்குரிய ரயில்வே காலஅட்டவணை ரயில்வேத்தறை நவம்பர் 1-ம் தேதி வெளியிட்டது. இந்த காலஅட்டவணையில் புதிய ரயில்கள், பழைய ரயில்களின் காலஅட்டவணை மாற்றம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்டர்சிட்டி ரயில்:-
திருநெல்வேலியிருந்து திருச்சிக்கு இயக்கப்பட்ட இன்டர்சிட்டி ரயில் கடந்த ஜுலை 15-ம் தேதி முதல் திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு நீட்டிக்கப்பட்ட ரயிலுக்கு நாகர்கோவில் டவுண் மற்றும் குழித்துறை ரயில் நிலையங்களில் நிறுத்தம் முதலில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரணியல் ரயில் நிலையத்தில் நிறுத்தம் கொடுக்கப்படவில்லை. கல்குளம்தாலுகாவை சார்ந்த பயணிகள் இந்த இன்டர்சிட்டி ரயிலில் பயணிக்க வேண்டுமானால் குழித்துறை அல்லது நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு சென்றால் மட்டுமே பயணிக்க முடியும். இந்த ரயிலுக்கு இரணியல் ரயில் நிலையத்தில் நிறுத்தம் ரயில்கால அட்டவணையில் அறிவிக்கப்படவில்லை. இது மட்டுமில்லாமல் மங்களுர் - நாகர்கோவில் ஏரநாடு ரயிலுக்கும் இரணியல் ரயில் நிலையத்துக்கு நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது 11 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் ஆரல்வாய்மொழி, இரணியல், குழித்துறை ரயில் நிலையங்கள் கிராசிங் நிலையமாக உள்ளது. இது தவிர குமரி மாவட்டத்தின் எல்லைக்கு அருகில் உள்ள பாறசாலை ரயில் நிலையத்தையும் சில பகுதிகளை சார்ந்த குமரி மாவட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் நிலையங்களில் பல்வேறு ரயில்கள் தற்காலிக நிறுத்தங்களாகவே பல ஆண்டுகளாகவே நின்று வருகிறது. இந்த ரயில்கள் மூலமாக நல்ல வருவாய் கிடைத்து வந்தும் ரயில்வேத்துறை இந்த நிறுத்தங்களை நிரந்தர நிறுத்தங்களாக இதுவரை அறிவிக்கவில்லை.

இரணியல் ரயில் நிலையம்:-
கல்குளம் தாலுகாவில் உள்ள இரணியல் ரயில் நிலையத்தில் தற்போது எக்ஸ்பிரஸ் ரயில்களான குருவாயூர் - சென்னை, கன்னியாகுமரி – பெங்களுர், மங்களுர் - நாகர்கோவில் பரசுராம் ஆகிய ரயில்கள் நிரந்தர நிறுத்தமாகவும், மும்பை –கன்னியாகுமரி, திருவனந்தபுரம் - சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் என இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்காலிக நிறுத்தம் கொண்ட ரயில்களாக இயங்கிவருகிறது. இது தவிர மங்களுர் - நாகர்கோவில் ஏரநாடு, திருச்சி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ஆகிய இரண்டு தினசரி ரயில்கள், திருநெல்வேலி – ஜாம்நகர், திருநெல்வேலி – பிலாஸ்பூர், நாகர்கோவில் - காந்திதாம், நாகர்கோவில் - ஷாhலிமார், கன்னியாகுமரி – வைஷ்ணதேவி கத்ரா, கன்னியாகுமரி – திப்ருகர் ஆகிய வாராந்திர ரயில்கள் நிறுத்தம் இல்லாமல் செல்லும் ரயில்கள் ஆகும். இந்த ரயில்களில் மங்களுர் - நாகர்கோவில் ஏரநாடு, திருச்சி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ஆகிய இரண்டு தினசரி ரயில்களை தற்காலிக நிறுத்தமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் ரயில்வேத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த காலஅட்டவணையில் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.

குழித்துறை ரயில் நிலையம்:-
விளவன்கோடு தாலுகாவில் உள்ள குழித்துறை ரயில் நிலையத்தில் தற்போது .ந்த வழிதடத்தில் இயக்கப்பட்டு வரும் ஆணைத்து தினசரி ரயில்களும் நின்று செல்கிறது. வுhராந்திர ரயில்களில் கன்னியாகுமரி – வைஷ்ணதேவி கத்ரா ரயில் மட்டுமே நின்று செல்கிறது. இதில் மங்களுர் - நாகர்கோவில் ஏரநாடு தினசரி ரயில், கன்னியாகுமரி – வைஷ்ணதேவி கத்ரா வாராந்திர ரயில் என இரண்டு ரயில்கள் தற்காலிக நிறுத்தம் கொண்ட ரயில்களாக இயங்கிவருகிறது. திருநெல்வேலி – ஜாம்நகர், திருநெல்வேலி – பிலாஸ்பூர், நாகர்கோவில் - காந்திதாம், நாகர்கோவில் - ஷாhலிமார், கன்னியாகுமரி – திப்ருகர் ஆகிய வாராந்திர ரயில்கள் இங்கு நிற்காமல் செல்லும் ரயில்கள் ஆகும். இந்த ரயில்களை நின்று செல்ல காலஅட்டவணையில் எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.

பாறசாலை ரயில் நிலையம்:-
குமரி மாவட்டத்தின் எல்லைக்கு அருகில் உள்ள பாறசாலை ரயில் நிலையத்தில் கன்னியாகுமரி – மும்பை ரயில், திருவனந்தபுரம் - சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில், கன்னியாகுமரி – பெங்களுர் ரயில் என மூன்று ரயில்கள் தற்காலிக நிறுத்தம் கொண்ட ரயில்களாக இயங்கி வருகிறது.

நிரந்தர நிறுத்தம்:-
குமரி மாவட்டத்தில் தற்போது தற்காலிக நிறுத்தமாக நின்று செல்லும் ரயில்களை அந்த ரயிலால் கிடைக்கும் வருவாய் அடிப்படையில் நிரந்தர நிறுத்தமாக அறிவிக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

திருவனந்தபுரம் கோட்டத்தின் மறைமுக சதி:
திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் கொச்சுவேலி – மங்களுர் ஏரநாடு ரயில் நாகர்கோவில் நீட்டிப்பு செய்யும் போதே கேரளாவில் உள்ள நெய்யாற்றங்;கரை ரயில் நிலையத்துக்கு கோட்ட அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் நிரந்தர நிறுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் உள்ள ரயில் நிலையத்துக்கு முதலில் நிறுத்தம் இல்லாமல் பல்வேறு போராட்டத்துக்கு பிறகு தற்காலிக நிறுத்தம் குழித்துறை ரயில் நிலையத்துக்கு மட்டும் கொடுக்கப்பட்டது. இரணியல் ரயில் நிலையத்துக்கு நிறுத்தம் இதுவரை இல்லை. நெய்யாற்றங்கரை ரயில் நிலையத்துக்கு கொடுக்கப்பட்டது போல் குழித்துறை மற்றும் இரணியல் ரயில் நிலையங்களுக்கு நிரந்தர நிறுத்தம் முதலிலே கொடுக்கப்பட்டிருந்தால் இது போன்ற பிரச்சனைகள் வந்திருக்காது.

திருநெல்வேலி – காந்திதாம் புதிய ரயில்:-
இந்த வருட ரயில்காலஅட்டவணையில் திருநெல்வேலியிருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம், எர்ணாகுளம், மங்களுர், கோவா, மும்பை, அகமதாபாத் வழியாக காந்திதாமுக்கு வாராந்திர கும்சாபர் ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கு வள்ளியூர், நாகர்கோவில் டவுண் ஆகிய ரயில் நிலையங்களுக்கு மட்டுமே நிறுத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கு குழித்துறை ரயில் நிலையத்தில் நிறுத்தம் இல்லை. இந்த ரயிலுக்கு குழித்துறை ரயில் நிலையத்தில் நிரந்தர நிறுத்தத்துக்கு மத்திய அமைச்சர் பொன்னார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பயணிகள் ரயில்:-
மதுரை – புனலூர் பயணிகள் ரயில் பாறசாலை, பள்ளியாடி, குழித்துறை மேற்கு ஆகிய ரயில் நிலையங்களில் தற்காலிக நிறுத்தமாகவும் சென்று வருகிறது. இதைப்போல் கன்னியாகுமரி – புனலூர் பயணிகள் ரயில் ஆளுர், நாகர்கோவில் டவுண், பள்ளியாடி, குழித்துறை மேற்கு ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்கிறது. இந்த ரயிலுக்கும் ரயில்கால அட்டவணையில் நிறுத்தம் அறிவிக்கப்டவில்லை.

Thanks & Regards,
P.Edward Jeni
Secretary
Kanyakumari District Railway Users' Association (KDRUA)

0/Post a Comment/Comments

Previous News Next News
New Vision
New Vision