எகிப்திற்கு சவூதி அரேபியா 5 பில்லியன் டாலர் கடன் உதவி
11-07-2013
கடந்த 2011ஆம் ஆண்டில் எகிப்தின் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவியிலிருந்து இறக்கப்பட்ட நாள் முதலே, பொருளாதார முரண்பாடும், அரசியல் நிலையாமையும் அங்கு இருந்து வந்தன. மக்கள் போராட்டத்தின் காரணமாக கடந்த ஆறு தினங்களுக்கு முன்னர், இப்போதைய அதிபர் முகமது மோர்சியையும் ராணுவம் பதவியிலிருந்து இறக்கியது. மோர்சியும் பதவியிலிருந்து இறக்கப்பட்டவுடன் சவூதி அரேபியா அதனை வரவேற்றது.
இடைக்கால அதிபருக்கு அரசர் அப்துல்லா முதல் அயல்நாட்டுப் பிரதிநிதியாக வாழ்த்து சொன்னார். மேலும், இந்நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு உதவும் விதமாக 5 பில்லியன் டாலர் வழங்குவதாகவும் சவுதி அரேபியா நேற்று அறிவித்துள்ளது. இந்த உதவி, சவுதியின் அரசர் அப்துல்லா முடிவு செய்தபடி, 2 பில்லியன் டாலர் வட்டியில்லா முதலீடாக அந்நாட்டின் மத்திய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ஒரு பில்லியன் டாலர் நன்கொடையாக வழங்கப்படும். மீதி, 2 பில்லியன் டாலருக்கு ஈடாக எண்ணெய் மற்றும் எரிபொருட்கள் உதவியாக அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபுக் குடியரசு நாடும் , ஒரு பில்லியன் டாலர் தொகை வட்டியில்லாமலும், 2 பில்லியன் டாலர் எகிப்தின் மத்திய வங்கியில் முதலீடாகவும் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இவ்விரண்டு நாடுகளும் சேர்ந்து எகிப்திற்கு அளிக்கும் மொத்த உதவித்தொகை 8 பில்லியன் டாலர் ஆகும். எகிப்து நாட்டின் பொருளாதாரம் தற்போது எதிர்கொள்ளும் சவால்களைச் சந்திப்பதற்காகவே இந்த உதவி வழங்கப்படுவதாக, சவுதியின் பொருளாதார அமைச்சர் இப்ராகிம் அல் அசப் தெரிவித்தார்.
Post a Comment