அருங்காட்சியகம்

குமரி வரலாற்றுக் கூடம்
கன்னியாகுமரி ரயில்நிலையத்தின் தென்புறம் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது குமரி வரலாற்றுக் கூடம். இங்கு வரலாற்று காலத்திற்கு முன்பு நடந்த நிகழ்வுகள் இந்த உலகத் தோற்றம் அன்னை குமரியின் அவதாரம் விவேகானந்தரின் வரலாறு வைகுண்டரின் வரலாறு புனித தாமஸ் மகாத்மா காந்தி விவேகானந்தர் ஆகியோரின் வருகை உட்பட பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் சித்திரங்களாக வைக்கப்பட்டுள்ளன.

குமரி ஒலி-ஒளி காட்சி கூடம்
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை குதூகலப்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அரசு பல புதுமைகளை செய்துவருகிறது. இரவு நேரத்தை பயனுள்ள வகையில் சுற்றுலா பயணிகள் இன்பமாக களிக்க வேண்டும் என்ற நோக்கில் ஏற்படுத்தப்பட்டதுதான் ஒலி-ஒளி காட்சிக்கூடம். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை வளாகத்தில் இந்த ஒலி-ஒளி காட்சி கூடம் ரூ.2 கோடியே 25 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 300 பேர் அமர்ந்து ஒலி-ஒளி காட்சியை பார்த்து ரசிக்கலாம். இரவில் 2 காட்சிகள் மட்டும் நடத்தப்படுகிறது. அதற்கு தனியாக கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, பகவதி அம்மன் கோவில், புனித அலங்கார மாதா ஆலயம் ஆகியவற்றின் வரலாற்றை தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் குறும்படமாக ஒளிபரப்பப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous News Next News
New Vision
New Vision