கன்னியாகுமரி மாவட்ட வரலாறு
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள குமரி மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில். தமிழகத்தின் மூன்றாவது வளர்ச்சியடைந்த மாவட்டமாகும். நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை ஆகிய 4 நகராட்சிகள் உள்ளன.
இயற்கை அழகு நிறைந்த மாவட்டத்தில் 9ம் நூற்றாண்டுக்கு முந்தைய பல வரலாற்று சின்னங்கள் காணக்கிடைக்கின்றன. இதனால் சுற்றுலா பயனிகளுக்கு சொர்க்கமாக விளங்குகிறது. மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கேரள மாநிலமும் வடக்கு மற்றும் கிழக்கு எல்லையகளாக திருநெல்வேலி மாவட்டமும் விளங்குகிறது. தென்கிழக்கு மற்றும் தெற்கு எல்லையாக அரபி கடல் உள்ளது.
விவேகானந்தர் பாறை |
2011ம் ஆண்டு கணக்கெடுப்பு அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 18,63,174 ஆகும். இதில் ஆண்கள் 9,36,374 பெண்கள் 9,26,800 ஆகும். மக்களில் 82.47 பேர் நகர்புறங்களில் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1014 பெண்கள் என்ற அடிப்படையில் உள்ளது. கல்வியறிவு 97.6 ஆகும்.
கன்னியாகுமரி என்ற பெயர் குமரி அம்மன் என்ற இந்து சமய கடவுளை மையப்படுத்தும் தலப்புராணத்தில் இருந்து மாவட்டத்திற்கு கிடைத்துள்ளது. பார்வதி தேவி தன்னுடைய ஒரு அவதாரத்தில் குமரி பகவதி என்ற பெயருடன் சிவனை சேரும் வகையில் தவம் செய்ததாக உள்ளது கோயிலின் தலப்புராணம்.
திருவள்ளுவர் சிலை |
சங்க காலத்தில் குமரி மாவட்டத்தின் பெரும் பகுதிகள் ஆய் என்ற சிற்றரசனால் ஆளப்பட்டது ஆகும். இப்பகுதிகள் பொதுவாக நாஞ்சில் நாடு இடைநாடு என்று அழைக்கப்பட்டது. இப்பகுதிகளில் வயல்கள் அதிக அளவில் இருந்ததால் கவலை உழுவதற்கு பயன்படும் நாஞ்சிலில் இருந்து இந்த நிலப்பரப்புக்கு இப்பெயர் வந்தது என்பது பெயரியல் நிபுனர்களின் முடிவு ஆகும். தற்போது அகஸ்தீஸ்வரம் மற்றும் தோவாளை தாலுகா பகுதிகளாக இருக்கிறது. நாஞ்சில்நாடு 10ம் நூற்றாண்டின் முதல் பகுதி வரை பாண்டிய மன்னர்களின் ஆட்சி பகுதியாக இருந்தது பின்னர் சேர மன்னாக்கள் வசம் மாறியுள்ளது.
பத்மநாபபுரம் அரண்மனை |
தற்போதுள்ள கல்குளம் விளவங்கோடு தாலுகாக்கள் இருக்கும் பகுதி இடைநாடு சேரர்கள் ஆட்சி பகுதியாக இருந்தது. திருவிதாங்கூர் மன்னர்கள் நாஞ்சில் நாட்டின் பெரும் பகுதியை பின்னர் கையகப்படுத்தினர். வீர கேரள வர்மாவால் இது தொடங்கப்பட்டு அவரை தொடர்ந்து வந்தவர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டு கி.பி.115 ம் ஆண்டு நிறைவு செய்யப்பட்டது. ஏறக்குறைய 400 ஆண்டுகள் வேணாட்டை ஆண்டு வந்த வீர மன்னர்கள் தொடர்ந்து பாண்டிய மன்னர்களுடன் எல்லைத்தகராறில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கன்னியாகுமரி 1609ம் ஆண்டு மதுரை நாயக்கரின் கட்டுப்பாட்டில் வந்தது. 1634 வரை நாஞ்சில் நாட்டுக்கு எந்தவித வலுவான அச்சுறுத்தலும் இல்லை.
மாத்தூர் தொட்டி பாலம் |
பின்னர் ரவி வர்மா மார்த்தாண்ட வர்மா உள்ளிட்ட அரசர்கள் காலத்தில் வேலை உள்நாட்டு குழப்பங்களை சந்தித்தது. இதனை பயன்படுத்தி ஆற்காடு சந்தா சாகிப் நாஞ்சில் நாட்டை தாக்கினார். குளச்சல் போரில் மார்த்தாண்ட வர்மா டச்சு போர் வீரர்களை வெற்றிக் கொண்ட போதிலும் சந்தா சாகிப்பை சமாளிக்க முடியாததால் போர்களத்தை விட்டு பின்வாங்கினர். பின்னர் படிப்படியாக முழு கட்டுப்பாட்டுக்கு வந்த வேணாட்டை 1947 வரை ஆண்டு வந்தனர். அப்போது முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னர்களின் சுய ஆளுகைக்குள் இருந்தது.
சுசீந்திரம் கோவில் |
கன்னியாகுமரி மாவட்ட மக்களின் தாய்மொழி தமிழாக இருந்ததால் மலையாள மொழி பகுதியாக கேரளத்தோடு இணைந்திருக்க மக்கள் விரும்பவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி கேரள அரசால் புறக்கணிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ஷல் நேசமணி தலைமையில் விடுதலை போராட்டம் தொடங்கி நடந்தது. 1956 ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி குமரி மாவட்டம் தாய் தமிழகத்தின் ஒரு பகுதியாக மாறியது. மாவட்டத்தில் முதல் கலெக்டராக திருமலை நவம்பர் 11-09-56 ல் பொறுப்பேற்றார்.
பேச்சிப்பாறை |
குமரி மாவட்டம் முன்பு நூற்றுக்கணக்கான நீர்நிலைகள் மற்றும் சிறந்த வாய்க்கால் விவசாயம் ஆகியவற்றின் மூலம் திருவிதாங்கூரின் நெற்களஞ்சியமாக விளங்கியது. ரப்பர் மற்றும் நறுமண பொருட்கள் மலை சரிவுகளிலும் நெல் வாழை தென்னை ஆகியன கடற்கரையை ஒட்டிய சம நிலப்பகுதிகளிலும் பெருமளவில் பயிர் செய்யப்படுகின்றன. முhவட்டம் மலைலயம் மலை சார்ந்த பகுதிகளையுமும் கடலையும் கடல் சார்ந்த பகுதிகளையும் ஒட்டிய பூமியாக விளங்குகிறது. மாவட்டத்தில் 62 கி.மீ. மேற்கு கடற்கரையையும் 6 கி.மீ கிழக்கு கடற்கரையையும் உள்ளடக்கியது. மாவட்டத்தில் நிலப்பகுதியில் 48.9% விவசாய நிலமாகவும் 32.5 அடர்ந்த காட்டுப்பகுதியாகவும் உள்ளது.
வட்டக்கோட்டை |
மாவட்டத்தின் கடற்கரைபகுதிகள் பல பாறைமயமாகவம் இதர இடங்கள் வெள்ளை மணல் பகுதிகளாகவும் உள்ளன. கிழக்கு கடற்கரையில் பவள பாறைகள் காணப்படுகின்றன. பல வகையான வண்ண சங்குகளும்இ மேலும் சில கடற்கரை பகுதிகளில் மணல் தாதுவளம் நிறைந்ததாக இருக்கிறது.
திற்பரப்பு |
கடந்த 50 ஆண்டுகால ஆய்வில் வடகிழக்கு பருவக் காற்று வீசும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 24 மழை நாட்களில் 549 மி.மீ மழைம் தென்மேற்கு பருவக்காற்று வீசும் ஜீன் முதல் செப்டம்பர் மாதம் வரை 27 மழை நாட்களில் 537 பெய்துள்ளது. இதுவே மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைகாலத்தில் 11 மழை நாட்களில் 332 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் ஒரு ஆண்டு சராசரி மழை 1465 மி.மீ ஆகும். இதில் அக்டோபர் மாத மழை அளவு 247 மி.மீ அதிகபட்ச அளவாகவும் உள்ளது. மாவட்டத்தின் ஈரப்பதம் 60 முதல் 100 சதவீதமாக உள்ளது.
ரப்பர் எஸ்டேட் (பேச்சிப்பாறை) |
மாவட்டத்தின் முக்கிய நதிகளாக தாமிரபரணி வள்ளியாறு பழையாறு ஆகியன உள்ளன. குழித்துறையாறு என்று அழைக்கப்படுகின்ற தாமிரபரணிக்கு 2 துணை ஆறுகள் உள்ளன. கோதையாறு மற்றும் பரளியாறு ஆகியன இவையாகும். மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி தேங்காபட்டணம் கடலில் கலக்கிறது. வள்ளியாறும் இதன் துணை ஆறாகிய தூவலாறும் வேளிமலை மலை பகுதியில் உற்பத்தியாகி பி.பி கால்வாய் மற்றும் அதன் பிரிவு கால்வாய்களில் இருந்து வரும் ஓடைகளின் நீருடன் சேர்ந்து மணவாளக்குறிச்சி அருகே அரபிக்கடலில் கலக்கிறது.
பழையாறு நாகர்கோவிலில் இருந்து 18 கி.மீ வடமேற்காக அமைந்துள்ள சுருளகோடு என்ற இடத்தில் இருந்து தொடங்குகிறது. இது தோவாளை அனந்தன் நகர் மற்றும் என்.பி கால்வாய்களின் ஓடைகளின் தண்ணீருடன் சேர்ந்து பாய்கிறது.மணக்குடி கடலில் கலக்கிறது.
மருந்துவாழ் மலை (கொட்டாரம் அருகில்) |
மாவட்டத்தில் கீரிப்பாறை பகுதிகளில் பல வகைப்பட்ட பேரணி செடிகளையும்இ பல வெப்ப மண்டல தாவர வகைகளையும் பார்க்க முடியும். பேச்சிப்பாறை பகுதிகளில் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு இலைகளையும் பூக்களையும் உடைய மரங்கள் பச்சை படர்ந்த காட்டுப்பகுதிகளுக்கு மத்தியில் ஜொலிப்பதை காணலாம்.
குமரி மாவட்டத்தில் காணப்படும் விலங்குகளில் முள்ளம்பன்றி காட்டுப்பன்றி பல்லி வகைகள் பல இன கொக்கு நாரை நீர்க்கோழி மலைப்பாம்பு பல வகை பாம்புகள் உள்ளிட்ட ஊர்வன வகைகளும் உள்ளன. மகேந்திரகிரி மலை கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் அமைந்துள்ளது. முயல்கள் மான்கள் சிறுத்தை ஆகியவற்றை இங்கு காணலாம். கீரிப்பாறை சார்ந்த பகுதிகள் யானைகள் காட்டு எருமை கரடி போன்ற விலங்குகளின் உறைவிடமாக திகழ்கிறது.தேரூர் பகுதியில் பல வகையான கொக்குகள் கால சூழல்களுக்கு ஏற்ப வந்து செல்கின்றன. மாவட்டத்தின் பல்வேறு தனிச்சிறப்புகளும் உண்டு. பள்ளியாடியில் பாரம்பரியமான நெசவுத்தொழிலும் அங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற வேட்டியும் சிறப்பு வாய்ந்தவை. வடசேரியில் நெய்யப்படுகின்ற துண்டுகள் பிரபலமானவை.
காந்தி மண்டபம் |
வடசேரியில் உற்பத்தி செய்யப்படுகின்ற கோயில் ஆபரணங்கள் புவிசார் குறியீடு அந்தஸ்து பெற்றவையாகும். மார்த்தாண்டம் தேன் தலக்குளம் மண்பானை வகைகள் குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் கேரளா பகுதிகள் எங்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.ஈத்தாமொழி தேங்காய் தரத்திற்கு பெயர் போனது. கடலோர கிராமங்களில இருந்து தயார் செய்யப்படும் கயிறு பொருட்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. மட்டி ரசகதலி நற்கதலி சிங்கன் நச்சிங்கன் துளுவன் நேந்திரம் செவ்வாழை பாளையங்கோட்டான் பூங்கதலி கற்பூரவல்லி பேயன் ரெபோஸ்டா என்று பலதரப்பட்ட வாழைப்பழங்கள் பயிரிடப்படுகின்ற இடமாகவும் குமரி மாவட்டம் விளங்கி வருகிறது.
Post a Comment