கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒருங்கிணைந்த
வளர்ச்சிக்கான திட்டக்குறிப்பு
பழைமை வாய்ந்த மன்னர் நாடான திருவிதாங்கூரின் தென் பாகங்களாக இருந்த தாலுகாக்களை, குமரித் தந்தை எ. நேசமணியின் வீரத்தலைமையின் கீழ் நின்று போராடிப் பிரித்துதெடுத்து, “கன்னியாகுமரி மாவட்டம்” என்ற பெயரில் 1956 நவம்பர் மாதம் முதல் நாளன்று தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டது. தமிழர்கள், குறிப்பாக நாடார் சமூக மக்கள் பெருவாரியாக வாழ்கின்ற இப்பிரதேசங்களைப் பிரித்தெடுப்பதற்கு மூன்று காரணங்களைக் கூறலாம். நாடு சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து, அதற்கு ஐந்தாண்டுத் திட்டங்கள் எனப் பெயரிட்டு செயல்படுத்தத் தொடங்கியது மத்திய அரசு. இதன்படி முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் 1950 வடி 1955 வரை செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் திருவிதாங்கூர் தமிழ்ப் பிரதேச வளர்ச்சிக்கு என வகுக்கப்பட்ட திட்டங்களை, பெருஞ்சாணி அணைத் திட்டம், சிற்றhறு பட்டணம் கால்வாய்த் திட்டம், நெய்யாறு இடதுகரைக் கால்வாய்த் திட்டம், குழித்துறை லிப்டு இறிகேஷன் (Lift irrigation) திட்டம், போன்ற முக்கிய நீராதாரத் திட்டங்களை சுதந்திர திருவிதாங்கூர் அரசு செயல்படுத்தவில்லை. இதனால் மக்கள் இந்த அரசு மீது வெறுப்படைந்திருந்தனர். இந்த ஐந்தாண்டு திட்டத்தில் வகுக்கப்பட்டிருந்த திட்டங்களில் சிலவற்றையாவது செயல்படுத்துவதற்கும் திருவிதாங்கூர் அரசு சுணக்கம் காட்டியது. மக்கள் தலைவர்கள் பல வேளைகளில் வருந்தி வேண்டிக் கொண்டும், இப்பிரதேச வளர்ச்சித் திட்டங்களுக்காக ஐந்தாண்டு திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்த நிதியை அரசு வேண்டுமென்றே வடதிருவிதாங்கூர் வளர்ச்சிக்கெனத் திருப்பி விட்டது. இதனால் தென்திருவிதாங்கூர் தமிழர்கள் வாழ்கின்ற இடங்களை முற்றிலும். புறக்கணித்தது பட்டம் தாணுபிள்ளையின் அரசு. இத்தகைய தென் மாநில பொருளாதார வளர்ச்சிப் புறக்கணிப்பு, நாட்டைப் பிரிப்பதற்கான முதற்காரணமாக அமைந்தது என்பதும் உண்மை.
திருவிதாங்கூர் நாடு இந்து ஆகம அடிப்படையில் ஆட்சி நடத்தப்பட்டு வந்தமையால் சாதி கோட்பாடுகள் மிகக் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தன. உயர் இந்துக்கள், இழிவு இந்துக்கள் என சமுதாயத்தை இருகூறுகளாக்கினர். இழிவு இந்துக்களை தீண்டத்தகாதவர்களாகவும், காணத்தகாதவர்களாகவும் நடமாடத் தகுதியற்றவர்களாகவும் கருதி சமுதாயத்தில் அவர்களை இழிவுப்படுத்தினர். இந்த மானங்கெட்ட வாழ்விலிருந்து முழு விடுதலை வேண்டியும் பிரிந்து செல்வதற்கு தமிழ் மக்கள் தயாராயினர். இதுவும் பிரிவினைக்கு இரண்டாவது காரணமாக அமைந்தது.
இந்த குறிக்கோள்கள் நிறைவேறும்படியாக, தமிழ்மக்கள் குறிப்பாக நாடார் சமுதாய மக்கள், மலையாளி நாயர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தப் பிரிவு சமுதாய மக்களுக்கு எதிராக விடுதலைப் போர் புரிந்தனர். 1948-ல் இப்போர் தீவிரமடைந்தது. பட்டம் தாணுபிள்ளை சுதந்திர திருவிதாங்கூரின் பிரதமராக அன்று செயலாற்றி வந்தார். இழிவு சமூகத்தாரின் பல்வேறு சமுதாய மறுமலர்ச்சியால் பொறா மைத் தீயை நாடார் சமுதாயத்துக்கு எதிராக வளர்த்துக் கொண்டு இவர்களின் மேல் அடக்குமுறைக் கொடுமைகளை அவிழ்த்துவிட்டார் திரு.தாணுபிள்ளை. மங்காட்டில் திரு.தேவசகாயம் நாடாரையும், கீழ்குளத்தில் திரு.செல்லைய்யன் நாடாரையும் மலையாளிக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இதனைத் தொடர்ந்து நாடார் சமுதாயத்துக்கும், நாயர் சமுதாயத்திற்கும் முட்டலும், மோதலும் நடந்த வண்ணமிருந்தன. நாயர்களுக்கு பட்டம் தாணுபிள்ளையும் அவர்களின் அரசு இயந்திரங்களும் ஆதரவுக்கரம் அளித்தது. இந்த சூழ்நிலையில் 1954 ஆகஸ்டு 11-ம் நாள் திருவிதாங்கூர் தமிழ் பிரதேசங்கள் முழுவதிலும் “விடுதலைதினம்” கடைபிடிக்கப்பட்டது. இத்தருணத்திலும் பட்டம் தாணுபிள்ளைதான் திருவிதாங்கூர் நாட்டின் முதலமைச்சராக இருந்தார். இவரது ஆணையின்டி தமிழர்களான நாடார் மக்கள் மீது இரண்டாவது தடவையாக துப்பாக்கிச் சூடு நடத்தினர் மலையாளி காவல்துறையினர். இதனால் மார்த்தாண்டத்தில் ஆறு பேரும், புதுக்கடையில் ஐவரும் குண்டடிபட்டு உயிர் நீத்தனர். இவர்களில் இருவரைத் தவிர மற்ற அனைவரும் நாடார் சமுதாய மக்களாவர். துப்பாக்கிச் சூட்டுடனே பட்டம் தாணுபிள்ளையின் நாடார் நரவேட்டை நின்று விடவில்லை. இதைத் தொடர்ந்து, பட்டம் தாணுபிள்ளையின் வீழ்ச்சி நாள் (14.02.1955) வரை அதாவது 188 நாட்கள் விளவங்கோடு மற்றும் கல்குளம் தாலுகாக்களில் நாடார் மக்கள் மீது போலீஸ்காரர்கள் நரவேட்டையாடினர். அனேகர் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இவர்கள் அடைந்த சிறைத் துயரங்களை அறிந்து கொள்வதற்கு அறிவர் டி.பீட்டர் அவர்கள் எழுதி வெளியிட்ட ஆய்வு நூலான “குமரி மாவட்ட விடுதலை (கல்குளம் – விளவங்கோடு) நாடார் மக்கள் தந்த விலை (1948 – 1954)” என்ற நூலைப் படித்து தெளிவடைந்து கொள்ளுங்கள். ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில், பஞ்சாப்பில் நடந்த “ஜாலியன் வாலாபாக் படுகொலைதான்” மிகவும் கொடுமையானது என்று இந்தியா வரலாறு பறைசாற்றுகிறது. ஆனால் அந்த கொடுமை ஒரே நாளில் முடிந்து விட்டது. அடுத்த நாள் தொட்டு ஆங்கிலப் படை அமைதி காத்தது. ஆனால் _பட்டம் தாணுபிள்ளை அரசின் காவல்துறையினபர் 11.08.1954 தொட்டு 188 நாட்கள் அதாவது 6 மாதங்களும் 8 நாட்களும் தொடர்ந்து நாடார் சமுதாய மக்களை மட்டும் குறி வைத்து நரவேட்டையாடினர். இது போன்ற நரவேட்டை உலக வரலாற்றில் எங்கும் காண்பது அரிது. இந்த அட்டூழியத்தில் இருந்து விடுபட வேண்டும் என்பது பிரிந்து செல்வதற்கான மூன்றாவது காரணமாக அமைந்தது.
இவைகளின் தொடர்ச்சியாக 01.11.1956 அன்று கன்னியாகுமாp மாவட்டம் உதயமாகி, தமிழகத்துடனே இணைந்தது. இணைப்பு நாளன்று (01.11.1956) தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அவர்கள், நாகர்கோவில் S.L.B கல்வி நிலைய வளாகத்தில் நடந்த ஏற்ப்பு விழாவில் இவ்வாறு ஏற்புரையாற்றினார்்-
“நீங்கள் கேரளத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள். கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளர்ந்துள்ளீர்கள். ஆரல்வாய்மொழிக்கு கிழக்கே உள்ளவர்கள் இந்த நிலையை எட்டுவதற்கு இன்னும் பல காலம் வேண்டும். அதுவரை உங்களுக்கு எங்களால் ஒன்றும் செய்ய இயலாது. செய்யவும் மாட்டோம். பிரிந்து வந்து தமிழர்களோடு இணைந்துவிட்டோம் என்ற நிறைவோடு மட்டும் இருந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் இன்றே உங்களை மீண்டும் கேரளத்துடுனே சேருவதாற்கு நான் ஒழுங்கு செய்யலாம்” என்றார்.
குமரி மாவட்டத்தை தமிழ்நாடு அரசு அன்று முதல் புறக்கணிக்கத் தொடங்கியதிலிருந்து, இன்று வரை இதை புறக்கணித்து வரப்படுகிறது. இதற்குப் பிறகு நெல்லைதான் தமிழகத்தின் எல்லையாகிவிட்டது. குமரி மாவட்டத்தில் அரசியல் முறையில் ஏழு சட்டமன்ற உறுப்பினர்களும், ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் உள்ளனர். இவர்களில் ஒருவர் மாண்புமிகு அமைச்சராகவும் உள்ளார். இருப்பினும் இம்மாவட்டத்தின் முழு வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளாமல், முக்கியத்துவமில்லாத காரியங்களை மட்டுமே செய்து வருவதால், இம்மாவட்டம் காலத்திற்கேற்றhற்ப் போன்று, மக்கள்த் தொகைக்கு ஏற்றார்ப் போன்று சமச்சீரான வளர்ச்சி அடையவில்லை.
எனவே மாவட்டத்தின் சமச்சீர் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, செயலாக்கம் பெற வேண்டிய சில முக்கிய திட்டங்களை இங்கே தருவதில் மகிழ்ச்சியடைகிறேhம். இதற்கு முன்பு நாம் திருவிதாங்கூரில் இருந்த வேளையில், இதே போன்ற திட்டப் பிரேரணைகள் தரப்பட்டுள்ளன. “The South Travancore People’s Economic Development Council” என்ற ஒரு நிபுணர் குழாம் இத்தகையதோர் பிரேரணையைத் தந்ததுண்டு. இக்குழாமில், திருவாளர்கள் T.V. கிருஷ்ண ஐயர், எஸ். நத்தானியேல், எஸ்.சிவராம கிருஷ்ண ஐயர், எஸ்.டி.பாண்டிய நாடார், ஆர்.சுப்பிரமணிய பிள்ளை, என்.அகஸ்திய லிங்கம் பிள்ளை, அறிவர் பி. நடராஜன் போன்ற மேன்மக்கள் அடங்கியிருந்தனர். அதற்குப் பிறகு குமரி மாவட்டம் உருவான வேளையிலும் வறண்டப் பூமியான விளவங்கோடு தாலுகாவின் வளர்ச்சியை முன் வைத்து ஒரு திட்டப் பிரேரணையை “The Vilavancode Taluk Welfare Association, Kuzhithurai” என்ற மக்கள் அமைப்பு உருவாக்கித் தந்தது.
மக்களின் இத்தகைய விழிப்புணர்வை மதித்த தமிழக அரசு, இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் (1956-1961) நீர் பாசனத்துக்காக பெருஞ்சாணி அணைத் திட்டம், சிற்றாறு பட்டணம் கால்வாய் திட்டம், நெய்யாறு இடதுகரைக் கால்வாய்த் திட்டம், விளத்துறை லிப்டு இறிகேஷன் திட்டம் போன்றவற்றை வகுத்து செயலாக்கம் தந்தது. குமரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்கும் திட்டமும் இந்த இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் இடம் பெற்றிருந்தது. இது தவிர சித்த மருத்துவத்துறையில் ஆய்வு மையம் தொடங்குவதற்கும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருந்தது. சுற்றுலாத்துறையை பொறுத்தமட்டில், நாகர்கோவிலிலும், கன்னியாகுமாpயிலும் பயணிகள் விடுதிகள் கட்டுவதற்கும் திட்டம் தீட்டப்பட்டிருந்தது. இத்திட்டங்கள் அனைத்தும் திட்ட காலக்கெடுவில் முடிக்கப்பட்டது. மேற்படி திட்டங்களை செய்து தர வேண்டும் என்று மக்கள் தங்களது அமைப்பு வழியாக கோரிக்கை வைத்ததனால் மட்டுமே மேற்படி திட்டங்களை செயல்படுத்தியது தமிழக அரசு.
இன்றைய சூழ்நிலையில், இம்மாவட்டத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு நன்மை பயக்கும் பல திட்டங்களை செய்ய வேண்டியுள்ளது. அதற்கு அரசிடம் உகந்த திட்டங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே கீழ் விவரிக்கின்ற திட்டங்களை தாமதமின்றி வகுத்து அரசு செயல்படுத்தப்பட வேண்டும். அதற்காக மக்கள் பிரதிநிதிகளுக்கு பொதுமக்கள் நெருக்குதல் தர வேண்டும். அவ்வாறhயின் மட்டுமே இவர்கள் அரசுக்கு நெருக்குதல் தருவார்கள். ஒட்டு வங்கிக்காக அரசு செய்கின்ற Pடிpரடளைவ திட்டங்களால் மாவட்டத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி ஏற்படாது என்பதை மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
விவசாய வளர்ச்சிக்கான திட்டங்கள்
கன்னியாகுமரி மாவட்டம் 1684 சதுர கிலோ மீட்டர் (1.67,267 ஹெக்டர்) பரப்பளவைக் கொண்ட சிறிய மாவட்டம் ஆகும். தமிழகத்தின் பரப்பளவில் 1.29ு மட்டுமாகிய இச் சின்னஞ்சிறிய மாவட்டத்தில் 62,520 ஹெக்டேர் நிலம் நெற் பயிருக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதன் அளவு தற்சமயம் சுருங்கி விட்டது. இதற்கு பல காரணங்கள் உள்ளது என்றhலும் இரண்டு காரணங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒன்று பாசன வசதிக் கொண்ட வயல்களில் ரப்பர் மற்றும் தென்னை மரங்கள் போன்ற பணப் பயிர்கள் நடவு செய்து அதை தோட்டங்களாக மாற்றப்பட்டதாகும். இரண்டாவது இந்த விளை நிலங்களை வேண்டுமென்றே தரிசு நிலங்களாக மாற்றியமைத்து அங்கே வீடுகளும், கல்வி நிலையங்களும், வியாபார கூடங்களும் கட்டியதுமாகும். பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களைச் சார்ந்த வியாபாரிகளும், உத்தியோகஸ்தர்களும் மற்றும் வெளி மாநிலத்து வசதிப்படைத்தவர்களும் இம்மாவட்டத்தில் தங்கு தடையின்றி குடியேறி வீட்டுமனைகளை அபரிமித விலை கொடுத்து கிரயம் பெற்று வீடுகள் கட்டி வருவதால் வயல்வெளிகள் விரைவாக சுருங்கி வருகின்றன. இதே நிலை நீடித்தால், குமரி மாவட்டத்தில் உணவு உற்பத்தி இல்லை என்ற நிலை உருவாகிவிடும். இந்த நிலையை தடை செய்திட வேண்டும். இந்த நோக்கில் தற்போதையே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சில உருப்படியான நடவடிக்கைள் எடுத்து வருகின்ற போதிலும் அவைகளை மேலும் கடுமையாக்குவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். அந்த சட்டத்தில் பிற மாநிலத்தைச் சார்ந்தவர்கள் இம்மாவட்டத்தில் சொத்து வாங்குவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். இம்மாவட்டத்தில் அதாவது 1956-ம் நவம்பர் 1-ம் நாள் குடியிருந்தவர்கள், அவர்களின் வாரிசுகள் போன்றோர் மட்டுமே சொத்துக்களை கிரய விக்கிரயம் செய்யலாம் என்ற ஒரு சரத்தை உருவாக்குவதன் மூலம் இந்த குடியேற்றக்காரர்களின் பிடியிலிருந்து இம் மாவட்ட பாசன நிலங்களை மீட்டுக் கொள்ளலாம்.
இம்மாவட்டம் விவசாயத்தை மட்டும் நம்பி வாழ்கின்ற ஒரு மாவட்டமாகும். 75 விழுக்காடு மக்களும் நடுத்தர மற்றும் சிறிய விவசாயிகள் ஆவர். விவசாயத்தைச் சார்ந்த பணியாளர்களும் இங்கே அதிகம் உள்ளனர். எனவே இவர்களின் நலன்களை பாதுகாக்கும் பொருட்டு, வயல்நிலைகளை வேறு உபயோகத்திற்காக பயன்படுத்துவததை நிரந்தரமாக அரசு தடை செய்திட வேண்டும். இம்மாவட்டத்தில் சுமார் 950 விவசாயக் குளங்கள் மன்னர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டிருந்தன. அதன் பரப்பளவும் ஆழமும் தேவைக்கேற்றபடி அன்று அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று பல குளங்களை நிரத்தி மாற்றுத் திட்டங்களுக்காக அவைகளை அரசே பயன்படுத்திவிட்டன. எஞ்சியவைகளில் தாமரைச் செடியை பஞ்சாயத்துக்கள் பயிரிட்டு, அதன் மூலம் வருவாய் தேடுகின்றனர். தாமரை பயிரிடுகின்ற குளங்கள் தற்சமயம் முற்றிலும் தூர்ந்த நிலையில் காணப்படுகின்றன. எனவே தாமரைச் செடிகளை அகற்றி, குளங்களை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். இதற்கென திட்டம் ஒன்றை அரசு வகுத்து, போர்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும். கீழ் குறிப்பிடுகின்ற விவசாய நோக்குடைய திட்டங்களை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை அரசு உடனடி எடுத்துக் கொள்ள வேண்டும். மக்கள் பிரதிநிதிகளும் இந்த திட்டங்களுக்கு மட்டுமே, தங்களது தொகுதி வளர்ச்சி நிதியை செலவிட வேண்டும்.
நெய்யாறு இடதுகரைக் கால்வாய்க்கு மாற்றுத் திட்டம் நிறைவேற்றுதல்
இந்த கால்வாய் கேரள எல்லையில் கட்டப்பட்டிருக்கின்ற நெய்யாறு அணையில் இருந்து, தமிழ்நாடு எல்கையில் வருகின்ற விளவங்கோடு தாலுகாவின் மேற்குப்பாகப் பாசனத்துக்கான இருநாட்டு அரசுகளின் பங்கில் உருவாக்கப்பட்டதாகும். நெய்யாறு அணையின் நீர் பிடிப்பு இடங்கள் கேரள மாநிலத்திலும், தமிழ்நாடு மாநிலத்திலும் பரந்து கிடக்கின்றன. ஆகையால் இதை இரு மாநில அணைத் திட்டம் என்று கருதுவதே சரியானதாகும். முதல் ஐந்தாண்டு திட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த திட்டம், தமிழ்நாட்டில் இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டு, இடதுகரை கால்வாய் வெட்டப்பட்டது.
நெய்யாறு இடதுகரைக் கால்வாயின் மொத்த நீளம் 38.4 கிலோ மீட்டர்கள். இதனால் 4,048.58 ஹெக்டேர் (1,, ஏக்கர்) நஞ்சை நிலம் பாசன வசதி கிடைக்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கால்வாயால் வறட்சியில் சிக்கித் தவிக்கின்ற விளவங்கோடு தாலுகாவின் மேற்குப் பாகத்திற்கு பாசன வசதி கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பு. இந்த அணையால் கேரளத்தில் 9757.09 ஹெக்டேர் நஞ்சை நிலங்களும், தமிழ்நாட்டில் 4048.58 ஹெக்டேர் ஆயக்கட்டு நஞ்சை நிலங்களும், பாசனவசதி கிடைக்கும். இந்த அணையால் தமிழ்நாட்டை விட சுமார் இரண்டு மடங்கிற்கு மேலாக கேரளத்தில் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. ஆனால் இந்த அணையை கட்டி முடிப்பதற்கும், கால்வாய் வெட்டுவதற்கும் மொத்தம் 143 லட்சம் ரூபாய் அன்று செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டின் பங்காக ரூ.60 லட்சங்கள் 1963-ம் ஆண்டு கொடுக்கப்பட்டுள்ளதாக நாகர்கோவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகக் கோப்புச் சொல்லுகிறது. இது தவிர விளவங்கோடு தாலுகாவில் வெட்டப்பட்டுள்ள கால்வாய்க்கு ரூ.92.28 லட்சம் செலவு ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. (பார்வை Kanyakumari District Gazetteer – 1995 – Page 306)..
விளவங்கோட்டில் வெட்டப்பட்டிருக்கின்ற கால்வாய், நெய்யாறு இடதுகரை கால்வாயில், பாறச்சாலை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1½ பர்லாங் வடக்காக முள்ளுவிளை வார்டில் மாத்திரக்காவிளையில் தொடங்கப்பட்டுள்ளது. கேரளப் பகுதியில் செல்லுகின்ற பிரதான கால்வாயின் ஒரு சிறிய கிணைக் கால்வாயாகத்தான் இதை வெட்டியுள்ளதால் இதில் சிறிதளவு தண்ணீர் மட்டுமே வரும்படியாக அங்கே இரு ஷட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இக்கிளை பிரிகின்ற பிரதான கால்வாயில் ஷட்டர் எதுவும் அமைக்கப்படவில்லை. இங்கே செல்லுகின்ற பிரதான கால்வாயில் இருந்து சுமார் 4 அடி தாழ்வாகத்தான் தமிழ்நாட்டுக்கு கால்வாய் வெட்டப்பட்டுள்ளதால் அது பிற இடங்களில் அதளபாதாளத்திலுடே செல்ல வேண்டியதாயிற்று. அந்த 4 அடி தாழ்வை தவிர்த்து மெயின் கால்வாய் சமதளத்தைத் தொடர்ந்து வெட்டியிருந்தால் கூட இங்கே வெட்டப்பட்டிருக்கின்ற கால்வாய் சுமார் 10’ அடி வரை உயரத்தில் அமைக்கப் பெற்றிருக்கலாம். அதனால் மேட்டுப்பாகங்களுக்கும் பாசனம் கிடைத்திருக்கும். எனவே இது ஒரு தவறhன கால்வாய் அமைப்பு முறை (Defective Civil Engineering) என்று கூடக் கருதலாம். இந்த மாத்திரக்காவிளை இடம் கேரளப் பகுதியில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த கால்வாய் “சுந்தரிமுக்கு” என்ற இடத்தில்தான் உட்புகுகின்றது. இந்த சுந்தரிமுக்குக்கும், மாத்திரக்காவிளைக்கும் சுமார் 1½ பர்லாங் தூரம் உண்டு. அந்த இடத்தை நில உடமைகளிலிருந்து தமிழ்நாடு அரசு விலைக்கு வாங்கியுள்ளதாகவும் அறிகிறேhம்.
இடதுகரைக்கிளைக் கால்வாய் வெட்டும் பணி 1959 ஜுலை மாதம் 27-ம் நாள் தொடங்கப்பட்டு 25.04.1963 அன்று தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் திரு.காமராசர் திறந்து வைத்தார். இக்கால்வாயால் மேற்கு விளவங்கோடு தாலுகாவின் முக்கிய குளங்களை மட்டும் இணைத்து தண்ணீர் பாய்ச்சுகிறது. இதனால் ஆயக்கட்டு நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது. இருப்பினும் இக்கால்வாய் மிகவும் ஆழமாக வெட்டப்பட்டமையால் மேட்டுப்பகுதி பாசனத்துக்கு இது பயன்படவில்லை. எனவே இக்கால்வாய் வடிவமைத்ததில் Technical Flaw காணப்படுகின்றது.
இடதுகரைக் கால்வாய் தமிழ்நாட்டு எல்லையில் இரண்டு இடங்களைக் கடந்து செல்கிறது. இதில் முதல் இடம் பண்டாரக்கோணம் என்ற ஊராகும். இரண்டாவதாக, இது ஆலம்பாறை என்ற இடத்தில் கடந்து, மீண்டும் கேரள எல்லைக்குள் செல்கிறது. இவ்விடங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, மீண்டும் கேரள எல்கையான மாத்திரக்காவிளையில் கிளைக்கால்வாய் வெட்டப்பட்டுள்ளதால், சுமார் ஒன்றரை பர்லாங் தொலைவுக்கு தமிழ்நாடு அரசு பொன்னும் விலையும் கொடுத்து வாங்க வேண்டியதாயிற்று. இதில் முதல் இடமான பண்டாரக்கோணம், மாத்திரக்காவிளையில் இருந்து சுமார் ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் வடக்காக உள்ளது. இந்த இடத்திலிருந்து தமிழ்நாட்டு இடதுகரை கால்வாயைத் தொடங்கியிருப்பின் கால்வாயின் ஆழம் சராசாpயாக 50 அடியாவது குறைந்திருப்பதற்கு வாய்ப்பு இருந்திருக்கும். அவ்வாறு வெட்டப்பட்டிருந்தால் ஒரு வேளை சில தொட்டிப்பாலங்களும், சுரங்க அமைப்புகளும் கூடுதலாகத் தேவைப்பட்டிருக்கும். இதனால் மேட்டுப்பகுதி பாசனமும் கிடைத்திருக்கும். சிலவு சற்று கூடுதலாக இருந்தாலும், அதன் பயன்பாடு பெரிதாக இருந்திருக்கும். இவ்விடங்களில் இரப்பர் தோட்டங்களும், நெல் வயல்களும் புதிதாக உருவாகி மக்களின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்திருக்கும். இந்த வளர்ச்சியை, எதிர்பார்த்த பயன் தராத நிலையில் கால்வாய் வெட்டுவதற்குக் காரணமாக இருந்த அந்நாள் பொறியாளர்கள் உருவாக்கி விட்டனர். இதற்கு ஏதாவது அரசியல் பின்னணி கூட இருப்பதற்கு வாய்ப்பு உண்டு.
தற்பொழுது இக்கால்வாய் முற்றிலும் தூர்ந்து போன நிலையில் உள்ளது. இதை பலகாலங்களாக தூர்வாரிப் பராமாpக்காமல் PWD இலாகா விட்டுவிட்டது. தவிரவும் கேரள அரசு பல்லாண்டுகளாக இக்கால்வாயில் தண்ணீர் விடாமல் தடுத்துவிட்டனர். எதற்காக தண்ணீர் தரவில்லை என்று தமிழக அரசோ அல்லது அரசியல் கட்சிகளோ ஆய்ந்தறியவில்லை. இதற்கு கேரள அரசு தமிழக அரசு மீது பழி சுமத்துகின்றனர். தண்ணீர் செஸ் (Cess) ஆக கேரளத்துக்கு தமிழகம் ரூபாய் 20 கோடி நிலுவையாக உள்ளது என்றும், பராமாpப்புக்கான பணம் கூட தரப்படவில்லையென்றும் கூறப்படுகிறது. இது உண்மையா அல்லது புரளியா என்று கூடத் தெரியவில்லை. தமிழக அரசும் இது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடவுமில்லை. உண்மை எதுவானாலும், விளவங்கோடு மேற்குப்பாக விவசாயிகளுக்கு இந்த நெய்யாறு இடதுகரைக் கால்வாயால் எப்பயனும் இல்லை என்ற உண்மை நிலை உருவாகியுள்ளது. இது தமிழக அரசின் நிற் விசாரத்தன்மையால் உருவாகிவிட்டதாக அவ்வட்டார மக்கள் கருதுகின்றனர். எனவே இவ்வாட்டார விவசாயிகளின் நன்மையைக் கருதி இந்த இடதுகரைக் கால்வாய்க்கு மாற்றுத்திட்டம் ஒன்றை கண்டறிந்து நடைமுறைப்படுத்தினால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.
02.09.2010 அன்று நடந்த குமாpமாவட்டத் திட்டக்குழுக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் திரு.முத்துசாமிகுமாரன் பேசுகையில், நெய்யாறு இடதுக்கரைப் பாசனத்திற்காக மாற்றுத்திட்டம் பரிசீலனையில் உள்ளதாக அறிவித்தார். அவர் அறிவிப்புப்படி திற்பரப்பிலிருந்து வலதுகரை சானல் ஒன்று வெட்டி, நெய்யாறு இடதுகரை கால்வாயுடன் இணைத்துவிட்டால் மேற்கு விளவங்கோடு பாசனம் மீண்டும் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறியிருக்கிறhர். இதனாலும் நெய்யாறு இடதுகரைச் சானலின் உயரம் கூடுவதற்கு வழியில்லை. திரும்பவும் அந்த அதளபாதாளநிலைதான தொடரும். இந்த கால்வாயால் பழைய பாசனக் குளங்களில் சிலதுகளுக்கு மட்டும் தண்ணீர் கிடைக்குமே தவிர இன்று மேட்டுப்பாகங்களாக வறண்டு கிடக்கின்ற பூமிக்கு பாசன வசதி கிடைக்காமல் போகும்.
எனவே புதிதாக தொடங்க திட்டமிட்டுள்ள திற்பரப்பு திட்டத்துக்கு பதிலாக சிற்றhர் ஐஐ நீர் தேக்கத்திலிருந்து உயர்வான பாகம் வழியாக புதிய கால்வாய் அமைத்தால் மேட்டுப்பாக பாசனம் (Highland Irrigation) கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. மாத்தூர் தொட்டிப்பாலம் போன்ற சிறிய தொட்டிப்பாலங்களும், குழாய் சுரங்கங்களும் இதற்குத் தேவைப்படும். நவீன விஞ்ஞான உலகில் இது சாத்தியமே. கங்கை நதியிலிருந்து, காவிரிக்கு கால்வாய் வெட்ட முடியுமென்றhல், ஆழ்கடலில் சேதுக்கால்வாய் அமைத்திட முடியுமென்றhல், இந்த திட்டம் வெகுசுலபமாக நிறைவேறிவிடும்.
இந்த திற்பரப்பு கால்வாய் திட்டம், 1879-ம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் ஆயில்லியம் திருநாள் ராமவர்மா காலத்தில் (1860-1880) திவானாக இருந்த இராமையர் அமல்படுத்த எண்ணினார். அதற்காக மதிராசி P.W.D இலாகாவில் முதல் நிலை பொறியாளராக பணியாற்றி இருந்த கொளேனால் மீடு என்பவரை வரவழைத்து ஆய்வு நடத்தியதாகவும், அதன் சாத்தியக்கூறு சுலபமானது இல்லை என்று கண்டு கைவிடப்பட்டதாகவும் அறிகிறேhம். (Travancore State Manual – III by T.K. Velupillai page – 416). – 416). எனவே, தமிழக எல்லைக்குள் இருக்கின்ற நெய்யாறு அணை நீர் பிடிப்பு பாகங்களில் மழைகாலங்களில் உருவாகின்ற தண்ணீரை தடுப்புக்கால்வாய் மூலம் விளவங்கோடு மேற்குப் பகுதிக்கு திசை மாற்றி பாசனம் செய்தால் அதிக பயன் உள்ளதாக இருக்கும். இந்த மாற்றுத் திட்டத்தை அரசு பாpசீலிக்க வேண்டும் என்று வேண்டுகிறேhம். இது குறித்து விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அரசுக்கு நெருக்குத்தல் தந்து திட்டத்தை நிறைவு பெறச் செய்வார் என்று எதிர்பாhக்;கிறேhம்.
ஆகையால் நஞ்சை நிலங்களும், பாசனக்குளங்களும் மாற்றுத் தேவைகளுக்கு மாற்றப்படுவதை சட்டத்தால் நிரந்தமாக தடை செய்து, உணவு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். இதற்க்கு கீழ் சொல்லப்படுகின்ற நீர்பாசனத் திட்டங்களை உடனடியாக உருவாக்கிட வேண்டும்.
விவசாய மேம்பாட்டிற்கு செயல்படுத்தப்பட வேண்டிய முக்கிய புதுத் திட்டங்கள்
1. முடங்கிக் கிடக்கின்ற நொய்யாறு இடதுகரை கால்வாய்க்கு மாற்றhக சிற்றhறு II நீர்த் தேக்கத்திலிருந்து புதிதாக கால்வாய் வெட்ட வேண்டும்.
2. குமாp மாவட்டத்தில் உள்ள பாரம்பாpய விதைகனை பாதுகாத்தல்
3. நஞ்சை நிலங்களை மற்ற காரியங்களுக்காக மாற்றுவதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்.
4. பிற மாநிலங்களிலிருந்து குறிப்பாக கேரளம் மற்றும் வடநாட்டிலிருந்து கன்னியாகுமாp மாவட்டத்தில் குடியேறுவதை தடை செய்து, அவர்கள் நிலம் வாங்குவதை நிரந்தரமாக தடை செய்திட வேண்டும்.
ஏ.வி.எம். கால்வாயை கன்னியாகுமரி வரை வெட்டி நீட்டுதல்
அனந்த விக்டொரியா மார்த்தாண்ட வர்மன் கால்வாய் என்பதை சுருக்கமாக ஏ.வி.எம்.கால்வாய் (A.V.M Chanal) என்று கூறுகின்றனர். இந்த கால்வாயின் முக்கிய நொக்கம், திருவிதாங்கூர் நாட்டின் தலைநகரான திருவனந்தபுரத்தையும நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியையும் நீர்வழித் தொடர்புக்காக இணைப்பது என்பதாகும். இதை உத்திரம் திருநாள் மார்த்தாண்டவர்மா (1847-1860) ஆல் 1860-ல் தொடங்கப்பட்டது. மன்னர் 1860-ல் காலமாகவே அவரது வாரிசு மன்னரான ஆயில்லியம் திருநாள் ராமவர்மான (1860 – 1880) இப்பணியைத் தொடர்ந்தார். இதன் முதல் கட்டமாக புவாறில் இருந்து தேங்காப்பட்டணம் தாமிரபரணி நீர்த்தெக்கம் வரை சுமார் 10 கல் தூரம் வெட்டப்பட்டு 1864 பிப்ரவரி மாதம் போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கால்வாய் குளச்சல் வரையிலும் அதாவது மண்டைக்காடு பொன்னம்மை நாடாத்தி கோயில் வளாகம் வரை வெட்டப்பட்டது. 1867-ல் இத்திட்டம் பல காரணஙகளால் நிறுத்தி வைக்கப்பட்டது. அன்று திவானாக இருந்த சர்.மாதவராவ் குறிப்பிடுகிறார்:‐
“It is to be regretted that the necessity arose for suspending the extension of the
Southern canal towards the capital after clearing the line and making some progress in blasting and excavation. The Wurkullay (tu;fiy) junction canal was certainly entitled to prior attention, but it would have been more satisfactory if provision could have been made for simulataneoulsy carrying on both the works. But it seems that it could not be made at the time. It is to be hoped however, that the Chief Engineer will be in a position to resume erelong the work suspended”.
(V. Nagam Aiya – The Travancore State Manual – Vol.III Page 231 & 232)
வர்கலை கால்வாய் பணி தொடங்கிவிட்டதால் எ.வி.எம். கால்வாய் பணியை அரசு நிறுத்திவிட்டது என்று தெரிகிறது. பணமுடைதான் முக்கிய காரணம் என்பது இதனால் புலனாகிறது. இருப்பினும் இந்த கால்வாயின் தேவையையும், முக்கியத்துவத்தையும் அரசு உணர்ந்திருந்தது.
கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரையிலும் அங்கிருந்து கொல்லம் வரையிலும், அஙகிருந்து கொச்சி வரையிலும் நீர்வழி பொக்குவரத்துக்காகவே மேற்படி திட்டத்தை திருவிதாங்கூர் மன்னர்கள் தொடங்கினர்.
இந்த திட்டம் நிறைவெறியிருந்தால் இன்று குமரி மாவட்டத்தில் உருவாகியிருக்கின்ற போக்குவரத்து நெருக்கடியை இந்த நீர்வழி பொக்குவரத்து வசதி சுலபமாக தீர்த்து வைத்திருக்கும். தவிரவும் சுற்றுலாத்துறையும் இதனால் பெரும் பயன் அடைந்திருக்கும். கேரளாவில் கால்வாய்கள் வெட்டி நீர்வழி போக்குவரத்தை வளரச் செய்தமையால் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை வருடாவருடம் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவில் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் கேரளம் முதல் இடத்தில் இருப்பதற்கு மூலக்காரணம் இந்த கால்வாய்களும, அதில் ஓடிக் கொண்டு இருக்கின்றஉல்லாச படகுகளும்தான். காஷ்மீரத்தின் படகு வீடு கலாச்சாரத்தை கேரளம் இன்று தட்டியெடுத்துவிட்டமையால் அங்கே சுற்றுலாத்துறை பல மடங்கு வளர்ந்து இருப்பதையும் காணலாம்.
இதைப்பொன்று தமிழ்நாடு குமரி மாவட்டத்திலும் உல்லாச படகு சவாரியை ஊக்குவிப்பதற்கு நின்றுபொன இந்த ஏ.வி.எம். கால்வாய் திட்டத்தை மீண்டும் தொடங்கப்பட்டு, கால்வாயை தொடர்ந்து வெட்டி கன்னியாகுமரி வரைக் கொண்டு செல்ல வெண்டும். நாளடைவில் இந்த கால்வாயை கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடி மற்றும் அதாவது நெல்லை தாமரபரணி ஆறு கடலில் சங்கமிக்கின்ற இடமான காயல்பட்டிணம் வரையும் நீட்டுவதற்கும் வாய்ப்பு உண்டு. இந்த கால்வாயை தேங்காப்பட்டணத்தில் இருந்து மீண்டும் அகலமாக வெட்டி மணக்குடி வரை நீட்ட வெண்டும். இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்திலும் இத்திட்டத்தை திரும்பவும் எந்த அளவுக்கு மீண்டும் செயல்படுத்தலாம் என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.
“There are proposals to examine how best this Inland water way can be developed” (Second F.Y.P. (1956‐61) K.K. District – Page – 53)
இந்த கால்வாயை மீண்டும் வெட்டுவதன் மூலம் மாவட்டத்திற்கு கிடைக்கின்ற பயன்கள் அதிகம். அவைகளாவன:‐
1. கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரையில் நீர்வழிபோக்குவரத்து அதிகரித்து மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்து நெரிசல் பெருவாரியாக குறையும்.
2. இதனால் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும்.
3. சுற்றுலா வாய்ப்பு அதிகரித்து பலருக்கு மேலும் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
4. நிலத்தடி நீரின் மட்டம் உயர்ந்து கடல் நீர் உட்புகுவதை தடுத்து நிறுத்தி நன்னீர் விவசாயம் வளரும்.
5. மாவட்டத்தில் உள்ள ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கி உப்பு இல்லாத நல்ல குடிநீர் கிடைக்கும் மற்றும் கடல்அரிப்பு இயற்கையாக குறையும்;.
வேண்டுகொள்
1. ஏ.வி.எம். கால்வாயை தேங்காப்பட்டணத்திலிருந்து மீண்டும் விரிவாக வெட்டி முதல் கட்டமாக கன்னியாகுமரி வரை (மணக்குடி) அமைக்க வேண்டும். இத்திடத்தை நடுவன் அரசின் சுற்றுலா வளர்ச்சித் திட்டமாக எடுத்து அவர்களே இதை செயல்படுத்த வேண்டும்.
2. சுற்றுலாவுக்காக அந்த கால்வாயில் படகு சவாரி ஏற்படுத்த வெண்டும். ஏ.வி.எம். கால்வாய் நீர்வழிப் பொக்குவரத்துத் திட்டம் என்பதால் இதை மத்திய அரசு கப்பல் போக்குவரத்துத்துறையைக் கொண்டு நிறைவேற்றிடச் செய்தல் வெண்டும். அதன் பொறுப்பை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. ஹேலன் டெவிட்சன் அம்மையார் ஏற்று நடைமுறைப்படுத்துவதற்கு ஆவன செய்தல் வெண்டும்.
வள்ளியூரில் சர்வதேச விமானதளம் அமைத்தல்
தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மூன்றும் தொழில்துறையில் பிற மாவட்டங்களைப் போன்று இதுகாறும் முன்னேறவில்லை. வெளிநாட்டு முதலீடுகளும் இம்மாவட்டங்களுக்கு வருவதில்லை. இதற்கு முக்கிய காரணம் வெளிநாட்டு முதலீட்டாளர் வசதியாக வந்து போவதற்கு பன்னாட்டு விமானதளம் அங்கே இல்லாததேயாகும். சென்னையை எடுத்துக்கொண்டால் பன்னாட்டு விமானதளம் இருப்பதால் வெளிநாட்டு முதலீட்டாரளர்கள் புதிய புதிய தொழில்கள் தொடங்குவதற்கு போட்டி போட்டுக் கொண்டு முன்வருகின்றனர். அதனால் பல்வேறு ரக பன்னாட்டு தொழில்கள் அங்கு தொடங்கப்பட்டு அனேகர் பயன்பெறுகின்றனர். சென்னை பெருந்தொழில் நகரமாக உருவாகுவதற்கு முக்கிய காரணியாக இந்த பன்னாட்டு விமான நிலையம் அமைந்திருப்பதேயாகும். ஆனால் தென் மாவட்டங்களில் இத்துறையில் எவ்வித வளர்ச்சியும் காணப்படவில்லை. இருப்பினும் தொழில் நுட்பக் கல்வி நிலையங்கள் இங்கேதான் அதிகமாக உள்ளது. தொழில் நுட்ப வல்லுனர்களும் அதிக அளவில் இங்கே உருவாகி வந்தாலும் இவர்கள் அனைவரும் வேலைக்காக சென்னைக்குதான் படை எடுக்கின்றனர். பன்னாட்டு விமானதளம் இல்லாதகுறையால் மட்டுமே பல்லாண்டுகளாக பேசப்பட்டு வருகின்ற “நாங்குநேரி தொழில்பூங்கா” மற்றும் “நாகர்கோவில் ரப்பர் பூங்காக்கள்” பூக்காமலும் காய்க்காமலும் காய்ந்த நிலையில் காணப்படுகின்றன.
ஆகையால் தென்மாவட்டங்களின் தொழில் மற்றும் வியாபார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இம்மூன்று மாவட்டங்களின் நடு நாயகமாக விளங்குகின்ற வள்ளியூரில் ஒரு பன்னாட்டு ஜம்போ விமானதளம் அமைக்க வேண்டும். பன்னாட்டு ஜம்போ விமான தளத்தக்கு நீளமான ஓடுதளம் தேவை என்பதால் இதை கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைப்பதற்கு சாத்தியக்கூறுகள் சிறிதளவு கூட இல்லை. வள்ளியூர்ப் பகுதியில் சமநிரப்பான தாரிசு நிலங்கள் எவ்வளவு தொலைவுக்கு வேண்டுமானாலும் கிடைக்கின்றன. ஆகையால் இந்த பிரதேசம் பன்னாட்டு ஜம்போ விமானநிலையத்திற்கு மிகவும் பொருத்தமான இடமாகும். நீள ஓடுதளங்களை அமைப்பதற்கு இயற்க்கையாக சமநிரப்பு நிலம் இங்கே அமைந்திருப்பது மிகவும் சிறப்பு.
ஏனவே இதுகுறித்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினரும், திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர்களும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருங்கிணைந்து மத்திய அரசை அணுகி இங்கே பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுத்தல் வேண்டும்.
இதனால் இம்மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காக்கள் குறிப்பாக I.T பூங்காக்கள், உணவு வகைகள் பதனிடும் பூங்காக்கள் போன்ற நவீன தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு இம்மாவட்டஙகளில் படித்த வேலையில்லாமல் இருக்கின்ற தொழில்நுட்ப பட்டதாhpகளுக்கும் மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தவிரவும் இங்கே விளைகின்ற காய்கறிகள், பழங்கள் மற்றும் விவசாயப்பொருட்கள், கடல் மீன்கள் போன்றவைகளை இங்கிருந்து நேரடியாக வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, விவசாயிகள் அதிக பயன்பெறவும் வழிவகுக்கும். இப்போது இப்பொருட்களை கேரளமானிலம், திருவனந்தபுரம் விமானநிலையம் வாயிலகத்தான் தமிழக வியாபாரிகள் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
சுற்றுலா வளர்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம் ஒரு அழகிய மாவட்டம். நீர்வளமும் நிலவளமும் மலைவளமும் ஒருங்கே அமையப்பெற்று கண்ணுக்கினிய இயற்கை வனப்புகளை அள்ளித்தருகின்ற ஒரு சிறிய நாடுபோல் காட்சி தருகிறது. இது பண்டைக் கால ஆய்நாட்டின் தென்பாங்களையும் நாஞ்சில் நாட்டை முழுமையாகவும் உள்ளடக்கிக்கொண்டு உலாவருகின்ற ஒரு அழகிய நாடாகும். தமிழ் இலக்கியங்களில் வகுத்துக் கூறப்பட்டிருக்கின்ற முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் போன்ற நான்கு திணைகளைக்கொண்ட தமிழ் நிலமாகவும் இம்மாவட்டம் திகழ்கின்றது. ஆகவே இயற்கை அன்னையின் எழில் மிகு சுகவாசஸ்தலங்கள். இன்னும் பல, சுற்றுலா மக்களின் பார்வைக்கு கொண்டுவரப்படாமல் உள்ளன. அவைகளையும் சீரமைத்து சாலை வசதிகளை மேம்படச் செய்தால் சுற்றுலாத்துறையை மேலும் வளர்ப்பதற்கு உதவியாக இருக்கும். இத்தகைய இடங்களின் விவரங்கள் கீழ்தரப்படுன்றன.
முத்துக்குழிவயல் கோடை வாசத்தலம்
இந்த குளிர்ச்சியான இடம் பெருச்சாணி நீர்தேக்கத்திற்கு மேலாக பாலமூர் தோட்டத்துக்கு வடகிழக்காக சுமார் 8 கி.மீ. தோலைவில் அமைந்துள்ளது. பறளி ஆறு இந்த இடத்தில் தான் உற்பத்தியாகிறது. சிலுசிலுத்தோடுகின்ற ஓடைகளை உள்ளடக்கி ரம்மியமான தட்பவெட்பம் கொண்ட குளு குளு இடமாகவும் இது அமைந்துள்ளது. கன்னியாகுமரியின் குற்றhலம் “திற்பரப்பு” நீர்வீழ்ச்சி என்றhல், முத்துக்குழிவயல் கன்னியாகுமரியின் “கொடைக்கானல்” என்று வர்ணிக்கலாம். திருவிதாங்கூர் மன்னர்களின் கோடை வாசஸ்தலமாகவும் இது இருந்துள்ளது. அவர்கள் தங்குவதற்கென்று ஒரு கண்ணாடி மாளிகையும் அங்கேகட்டப்பட்டிருந்தது. இங்கே சிறுரகவிமானங்களும், கெலிக்காப்டரும் இறங்குவதற்கு வசதியாக ஒரு சமநிலைப்பரப்பு காணப்படுகிறது. இங்குச் செல்வதற்கு வசதியான சாலை பாலமூர் தோட்டம் வரை தனியார் முயற்சியால் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலும் துநநி தடம் உள்ளது. அதை அரசோ அல்லது தனியார்களோ செம்மைப்படுத்தவில்லை. இந்த முத்துக்குழிவயலில் அனைத்து நவீன வசதிகளை உருவாக்கித்தந்து மேம்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் இது நம்மாவட்டத்தின் “கொடைக்கானலாக” உருவாகும். இதனால் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை அதிகாpத்து. வருவாயும், வேலைவாய்ப்பும் பெருகும்.
அணைகள் காட்சிக்கோபுரம் (Dam View Tower) அமைத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்காக நான்கு பெரிய அணைகள் கட்டப்பட்டுள்ளன. அவைகள் முறையே பெருஞ்சாணி, பேச்சிப்பாறை, சிற்றhறு-1, மற்றும் சிற்றhறு-2 ஆகும். இது தவிர கேரள மாநிலத்தில் நெய்யாறு அணையும் கட்டப்பட்டுள்ளது. இவைகளையெல்லாம் ஒரே இடத்தில் இருந்து வெறும் கண்ணால் பார்ப்பதற்கு, இயற்கை ஒரு இடத்தை நமக்கு அன்பளிப்பாக அளித்துள்ளது. இந்த இடம் களியலிலிருந்து மருதம்பாறை செல்லுகின்ற பாதையில் “ஆனைநிரத்தி” என்ற இடமாகும. இந்த இடம் சற்று மேட்டுப்பாகமாக இருப்பதால் இங்கிருந்து பார்ததால் மேற்படி ஐந்து அணைகளையும் காணமுடிகிறது. இதில் ஒரு பார்வை கோபுரம் (ஏiறை கூடிறநச) அமைத்து அதில் தொலைநோக்கி உபகரணத்தையும் பொருத்திவிட்டால் தென்மானில ஐந்து அணைக்கட்டுகளை சுற்றுலாப்பயணிகள் ஒரே இடத்தில் இருந்து கண்டு பயன்பெறுவர். அதனால் அரசுக்கு அதிக வருவாயும் கிடைக்கும். சுற்றுலா வழிகாட்டிகளுக்கு அதிக வேலைவாய்புகளும் கிடைக்கும்.
iii. கோதையார் வாசஸ்தலம்
இங்கேதான் கோதையாறு உற்பத்தியாகிறது. குளிர்ச்சியான இந்த இடத்தை சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்காக அனைத்து இயற்கைச் Nழல்களும் இங்கே காணப்படுகின்றன. இதமான தட்பவெட்பம், சமநிலம் நான்கு பக்கமும் உயர்ந்த குன்றுகள் போன்றவைகள் உள்ளன. அரசு இந்த இடத்தை மேம்படுத்தி இதை ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக அமைத்திடவேண்டும்.
ஏனவே இந்த மூன்று இயற்கை இடங்களை மேம்படுத்தி நல்ல சாலை வசதிகைளயும் பிற அடிப்படை வசதிகளையும் உருவாக்கினால் இவ்விடங்கள் புகழ்மிக்க சுற்றுலா தலங்களாக உருவாகும் என்பதில் ஐயமில்லை.
விளவங்கோடு மற்றும் திருவட்டார் சட்டமன்ற உறுப்பினர்கள் இது குறித்து தமிழ்நாடு அரசுக்கு எடுத்துக்கூறி நெருக்குதல் தந்து இவ்விடங்களை புகழ்மிக்க சுற்றுலாத்தலங்களாக உருவாக்கிட வேண்டும். மக்களும் இவர்களுக்கு நெருக்குதல[ தரவேண்டும்.
1. கன்னியாகுமாpயிலிருந்து – திருவனந்த்ழுரம் வரை கடல் மார்க்கம் படகு Nபாக்குவரத்து விடுதல்
2. குமாp மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா இடணு;களை பார்க்கும் போருட்டு சுற்றுலா பேருந்து அமைத்தல் (இந்த வசதி கோவாவில் தற்Nபாது உள்ளது)
தொழில் பூங்காக்கள் அமைத்திட வேண்டும்
தொழில் துறையில் குமாpமாவட்டம் மிகவும் பின் தங்கியுள்ளது. அரசால் இரண்டு தொழில் பேட்டைகள் தொடங்கப்படிருந்தும் அதில் காணுகின்ற தொழிறகூடங்கள தொழில்கள் அல்லாத துறைகளுக்கு ஒதுககியிருப்பதால தற்போது தொழில் தொடங்க ஆர்வமுடைய தொழில் முனைவோருக்கு அவைகள் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. எனவே தொழில் முனைவோருக்கு அவைகள் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. எனவே தொழில் பேட்டைகளில் தொழில் அல்லாத காhpயங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பேட்டைகளிலிருந்து அவைகளை காலி செய்துவிட்டு தொழில் முனைவோருக்கு அவைகளை அளிக்கவேண்டும்.
அ. புதிய முந்திhpப்பருப்பு ஆலைகள் தொடங்குவதை தடை செய்யவேண்டும்
சுற்றுச்Nழலுக்கு தீங்கு விளைவிக்கின்ற வகையிலான தொழில்கள் இம்மாவட்டத்தில் தொடங்குவதற்கு அனுமதி வழங்கக்கூடாது. ஏற்கனவே இங்கே செயல்பட்டு வருகின்ற பலநு}று முந்திரிப்பருப்புத் தொழிற்சாலைகளால் காற்று மண்டலம் மாசுப்பட்டுவிட்டது. இதிலிருந்து வரும் புகையில் கலந்து காற்று மண்டலத்தில் பரவுகின்ற முந்தரி எண்ணெய் துகல்களால் மரங்களும் மனிதர்களும் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புகையால் மனிதர்களின் நுரையீரல், லிவர் மற்றும் இருதயம் பாதிப்பதாக சில மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நோய்யால் பாதிக்கப்பட்ட பலர் இன்று மருத்துவமனைகளில் சிகிட்சை பெற்று வருகிறhர்கள். இந்த எண்ணெய் படலத்தால் தாவரங்களின் வளர்ச்சியிலும் காய்ப்புத்தறின்களிலும் பாதிப்புகள் உருவாக்கியுள்ளன. ஏனவே இவைகளின் மீது கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.
ரப்பர்பூங்கா தொடங்குவதை தவிர்க்கவேண்டும்
செண்பகராமன்புதூரில் ஒரு “ரப்பர் பூங்கா” தொடங்குவதாக பல காலங்கள் பேசப்படுகின்றன. பூங்கா நிறுவப்பட்டால் பல்வேறு பொருட்கள் உற்பத்திக்கான தொழில்நுட்பங்களால் இயற்கைச் Nழலை மாசுப்படவைக்கின்ற கந்தகம் (ளரடphரச) கரித்தூள் (ஊயசbடிn னுரளவ) அமிலங்கள் (Aஉனைள) மற்றும் ரசாயணங்கள் (ஊhநஅiஉயடள) உபயோகப்படுவதால் அவைகள் அனைத்தும் காற்று மண்டலத்தையும் நீர் ஆதாரங்களையும் நிலத்தின் தன்மைகளையும் மாசுபடுத்தும். எனவே இந்த ரபபர் பூங்காவிற்கு பதிலாக ஒரு ஐ.கூ. தொழிற்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும். இம் மாவட்டக்காரர்களுக்கு இங்கேயே வேலை கிடைப்பதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும். எனவே அரசு இந்த ரப்பர் பூங்காவிற்குப் பதிலாக அதே வளாகத்தில் ஐ.கூ. தொழிற்நுட்ப பூங்கா தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
உணவு பதனிடும் தொழில்
இம்மாவட்டத்தில் உற்பத்தியாகின்ற பல்வேறு காய்கனிகளை மூலப்பொருளாக பயன்படுத்தி உணவு பதனிடும் தொழில்கள் உருவாக்குவதற்கு தொழில் முனைவோரை ஊக்குவிக்க வேண்டும்.
ஆகையால் கீழ்குறிக்கின்ற தொழில்களை ஊக்குவிக்க திட்டங்கள் வகுக்கப்படவேண்டும்.
1. காற்று மண்டலத்தை மாசு படுத்துகின்ற விதத்தில் பழைய தொழில்நுட்பத்தில் புதிதாக தொடங்கும் முந்திhpப் பருப்பு ஆலைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
2. சென்பகராமன்புதூரில் பல காலங்களான தொடங்ப்படாமலிருக்கின்ற ரப்பர் பூங்காவை ரத்து செய்துவிட்டு அவ்விடத்தில் ஐ.கூ. தொழிற்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும்.
3. காய்கனிகளை பதனிடும் தொழிற்சாலைகள் தொடங்கப்படவேண்டும்.
4. தேங்காய் பவுடர் தயாhpக்கும் தொழில் மேலும் தொடங்கலாம்.
விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் தொடங்க வேண்டும்
குமரி மாவட்டம் முழுக்கவும் விவசாயத்தைச்சார்ந்த ஒரு மாவட்டமாகும். இங்கே பயிரிடப்படாத பயிர்களோ, காய்கனிகளோ செடி கொடிகளோ இல்லை என்று தான் கூறவேண்டும். ஆனால் நவ{னதொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதில்லை. பழைய முறைகளையும், புதிய ரசாயன உரங்களையும் பயன்படுத்தித்தான் விவசாயம் நடக்கிறது. எனவே இம்மாவட்டத்தில் விவசாய ஆராய்ச்சிக்காக ஒரு விவசாயக் கல்லூரி தொடங்க வேண்டும். விவசாயத்தில் முனைவர் படிப்பை முன்னிறுத்தி, ரப்பர் ஆராய்ச்சி, தோட்டக்கலை ஆராய்ச்சி, வனவள ஆராய்ச்சி, போன்ற ஆரய்ச்சி பிரிவுகளைக் கொண்ட ஒரு விவசாயக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும். மீன் வள கல்வி ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசரி செய்து தரவேண்டும்
குமரி மாவட்டத்தில் திரும்புகிற இடமெல்லாம் தண்ணீர் தெற்கே பார்த்தால் கடலில் தண்ணீர், மேற்கே பார்த்தால் அங்கேயும் தண்ணீர். கிழக்கே நாஞ்சில் நாடு. திரும்புகிற இடமெல்லாம் தண்ணீர், வடக்கே செல்ல வேண்டாம். தண்ணீரைத் தேக்கி வைக்கின்ற நான்கு அணைகள். அங்கேயும் தண்ணீர். ஆனால் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை. ரசாயனத் தண்ணீர்தான் குடிக்க வேண்டும். பாதுகாப்பில்லாத தண்ணீர் தான் குடிப்பதற்கு நமக்கு அது தருகிறது. அனைத்திலும் யூரியா கரைத்த தண்ணீர். கால்வாயில் யூரிய கலந்த தண்ணீர் குளத்தில் யூரிய தண்ணீர். குழாயில் யூரியா கலந்த தண்ணீர். எப்படி இவைகளில் எல்லாம் யூரியா கலக்கிறது?.
ரப்பர் தோட்டங்களுக்க போடப்படுகின்ற யூரியா கலவை (ரப்பர் உரம்) மழைத் தண்ண{ரில் கலந்து கால்வாய், குளம், குட்டைகள் மற்றும் ஆற்று நீரில் கலந்து விடுகிறது. இந்த தண்ணீரையே நகராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் குழாய் மூலம் மக்களுக்கு வினியோகிக்கிறார்கள். அப்படி விநியோகிக்கின்ற தண்ணீரைச் சுத்தம் செய்து ய+ரியா போன்ற மற்ற ரசாயனங்களை பிரித்தெடுத்து பாதுகாக்கப்பட்ட தண்ணீராக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பல்வேறு உடல் கோளாறுகள் உருவாகி மக்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு திருவிழாக்கூட்டமாக கூடிக்கிடக்கிறார்கள்.
எனவே, நகராட்சிகளில், பேரூராட்சிகளில் மற்றும் ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் வினியோக அமைப்புகளை திருத்தி அமைத்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகித்திட வேண்டும்.
நாகர்கோவில் நகராட்சியைப் பொறுத்த மட்டில் அங்கே அமைக்கப்பட்டிருக்கின்ற சுத்திகரிப்பு நிலையம் உதவியுடன் ஓரளவுக்கு பாதுகாக்கப்பட்ட தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆயினும் நகராட்சிக்கு தண்ணீர் தருகின்ற முக்கடல் அணை முற்றிலும் தூர்ந்த நிலையில் இருப்பதால் அதன் நீர் கொள்ளளவு கணிசமான அளவிற்கு குறைந்து விட்டது. தவிரவும் இந்த அணை 1981-ம் ஆண்டு குமரித்தந்தை மார்ஷல் எ. நேசமணி அவர்கள் நாகர்கோவில் நகராட்சித் தலைவராக இருக்கும் வேளையில் திவான் சர். சி. பி. ராமசுவாமி ஐயரிடம் முறையிட்டு பெற்றதாகும். அன்று காலப்பட்ட மக்கள் குடியிருப்புக்களுக்கு தேவைப்படும் அளவுக்கு மட்டும் உருவாக்கப்பட்டதாகும். இன்று மக்கள் பெருக்கமும் குடியிருப்பு பெருக்கமும் பல மடங்கு பெருகிவிட்டாலும், தண்ணீர் வழங்குகின்ற அமைப்பு அவ்வாறே தான் உள்ளது. அந்த அணையை விரிவுப்படுத்தவோ, ஆழப்படுத்தவோ, தூர்வாரவோ அல்லது நவீனப்படுத்தவோ செய்யாத நிலையில் நகரின் தண்ணீர் தேவையை சுத்தமில்லாத தண்ணீர் வினியோகத்தில் சமாளிக்கின்றனர்.
இந்த நகராட்சியின் குடிநீர் ஆதாரத்தைப் பெருக்கும் வகையில் உலக்கை அருவி நீர் சேமிப்புத்திட்டம் ஒன்று வரையப்பட்டது. ஆனால் அந்த திட்டம் நஉழழெஅiஉயடடல ழெவ கநயளiடிடந என்றுக் கூறிக்கைவிடப்பட்டது.
அதனால் நகர மக்கள் கோடை காலங்களில் தண்ணீருக்காக பேயாய் அலைகின்ற அவல நிலை உருவாகியுள்ளது. எனவே இந்த உலக்கை அருவித் திட்டத்துக்கு மாற்றுத் திட்டம் தீட்டப்படவேண்டும் தவிரவும் முக்கடல் அணையை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, தூர்வாரி சுத்தப்படுத்தி அதன் கொள்ளளவை மும்மடங்காக்கி மக்களின் தண்ணீர் பஞ்சத்தை அரசு உடனே களைந்திடவேண்டும்.
இதே போன்று பத்மனாபபுரம் நகராட்சி, குளச்சல் நகராட்சி மற்றும் குழித்துறை நகராட்சிகளுக்கு பாதுகாக்கப்பட்ட நீர்த்திட்டங்கள் உருவாக்கிட வேண்டும். பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளிலும் கூட்டு குடிநீர்த்திட்டங்கள் அறிமுகப்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வினியோகிக்க வேண்டும்.
ரெயில்வே துறை வளர்ச்சி
குமரி மாவட்டத்தில் உள்ள ரயில் வழித்தடங்கள் அனைத்தும் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் வருகின்றன. திருவனந்தபுரம் கோட்டத்தில் 650கி.மீ தொலைவுக்கு வழித்தடங்கள் உள்ளன. இதில் குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் கன்னியாகுமரி - திருவனந்தபுரம் வழித்தடம் 87கி.மீட்டரும் மற்றும் நாகர்கோவில் - திருநெல்வேலி வழித்தடம் 74கி.மீ என மொத்தம் 161.கி.மீ தொலைவு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் பாதை அமைக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்து விட்ட நிலையில் அதன் வளர்ச்சிப் பணிகளில் உத்வேகம் இல்லை. இன்னும் சில காரியங்களில் குமரி மாவட்ட மக்கள் மலையாளி ஆதிக்கத்திலிருந்து விடுபட வில்லை. அவைகளில் முக்கியமானது, குமரி மாவட்ட ரயில் சேவை நிர்வாகம். இது மலையாளி ஆதிக்கத்தில் இருப்பதால் குமரிமாவட்ட மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். குமரி மாவட்டத்திலுள்ள ரயில் நிலையங்களில் போதிய வசதிகள் செய்து தரப்பட வில்லை. ஆனால் இங்குள்ள நிலையங்கள் ஈட்டித்தரும் வருமானம் வானளாவி நிற்கிறது.
இரண்டாவதாக இங்கிருந்து புறப்படும் ரயில்கள் அனைத்தும் குமரி மக்களின் பயன்பாட்டை நிராகரித்து, மலையாளிகளின் வசதியை மையமாக வைத்து பட்டியலிடப்பட்டுள்ளது. ரயில்கள் புறப்படும் மற்றும் வந்து சேரும் நேரங்கள் மற்றும் செல்லும் திசைகள் குமரிமக்களுக்குப் பாதகமாகவும் கேரளா (மலையாளி) மக்களுக்கு சாதகமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் குமரி மாவட்டத்துக்குள் வந்து ரயில் நிலையங்களில் ரயில்கள் தங்கி கேரளத்தவரின் வசதிக்காக ஓடுகின்றன. காரணம் திருவனந்த புரத்தில் நிறுத்தி வைக்க இடம் இல்லை.
இந்நிலையை சீர் செய்ய ரயில் பயணிகள் இணைந்து சங்கம் அமைத்தார்கள். சங்கங்கள் மற்றும் பொது தொண்டு நிறுவனங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. குமரி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒரு பிளாட்பாம் மாற்றத்துக்கு எடுத்த முயற்சி கூட தோல்வியில் முடிந்தது. குமரி மாவட்டத்தைப் பிரித்து தமிழகத்துடன் இணைக்க வேண்டிய கால கட்டம் வந்தது போல குமரி மாவட்ட ரயில் நிர்வாகத்தை கேரளாவிலிருந்து பிரித்து மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டிய காலம் வந்து விட்டது. பயணிகள் சங்கங்களும், எம்.எல்.எ., எம்.பி.யும், தொண்டு நிறுவனங்களும் இணைந்து போராடாமல் எதுவும் நடக்கப் போவதில்லை. போராடுவார்களா?
கூடுதல் ரயில்கள்
1) நாகர்கோவில் - பெங்களுர் 6538 / 6537 வராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்குதல்
2) கொச்சுவேலியிலிருந்து நாகர்கோவில், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மைலாடுதுறை, சிதம்பரம், கடலூர் வழியாக தினசரி புதிய ரயில் இயக்குதல்
3) கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம் , நாகர்கோவில் , திருநெல்வேலி, காரைகுடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகபட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு தினசரி இரவு நேர ரயில் இயக்குதல்
4) திருவனந்தபுரம் - மங்களுர் 16603/16604 மாவேலி எக்ஸ்பிரஸ் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்குதல்
5) நாகர்கோவில் - மங்களுர் ஏரநாடு இரயிலை ஒரு மார்க்கத்தை வாஸ்கோடகாமா(கோவா) வரை நீட்டிப்பு செய்தும் மறுமார்க்கத்தை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்தும் கன்னியாகுமரி - வாஸ்கோடகாமா(கோவா) எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்க கோரிக்கை
6) நாகர்கோவிலிருந்து மதுரை, சேலம், காட்பாடி(வேலூர்), அரக்கோணம் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு தினசரி ரெயில் இயக்குதல்
7) சுற்றுலா மற்றும் மாவட்ட பயணிகளுக்காக கன்னியாகுமரியிலிருந்து மதுரை, திருச்சி, சென்னை வழியாக ஹைதரபாத்துக்கு தினசரி சூப்பர் பாஸ்டு ரெயில், கன்னியாகுமரி -நியூடில்லி, கன்னியாகுமரி - ஹவுரா போன்ற வராந்திர ரெயில்களை தினசரி ரெயில்களாக இயக்குதல்
தமிழ்நாட்டின் முக்கிய வழி தடமாக கன்னியாகுமரி – சென்னை 742 கி.மி பகுதி அமைந்துள்ளது. இந்த வழி தடத்தில் தற்போது சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு 56 கி.மி மற்றும் மதுரை – திண்டுக்கல் 66 கி.மி வழி தட பகுதிகள் மட்டுமே இருவழித் தடமாக மாற்றபட்டுள்ளது. மீதமுள்ள 620 கி.மீ பகுதிகள் அனைத்தும் ஒரு வழி பாதையாகவே உள்ளன. ஆகவே உடனடியாக கன்னியாகுமரி – சென்னை 742 கி.மீ வழி தடம் இருவழிப்பாதையும் மின்சார மயமாக ஆக்கபடவேண்டும்.
பிற வளர்ச்சி திட்டங்கள்:
1) கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்ஷல் நேசமணி பெயரில் புதிய பல்கலைகழகம் அமைக்க வேண்டும்.
2) குமரி மாவட்டத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட வகையான வாழைபழ வகைகள் பயிரிடபட்டு வருகிறது. இந்த வாழை இனங்கள் அழியாமல் பாதுகாக்கவும், உற்பத்தியை அதிகரிக்கும், நோய்கள் தாக்காமல் இருக்கவும், பொருட்டு குமரி மாவட்டத்தில் வாழை ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும்.
3) குமரி மாவட்டம் சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் ஒரு மாவட்டம் ஆகும். சிறுபான்மையினர் மாநில மற்றும் மத்திய அரசு பணிகளில் குறைவாக காணபடுகின்றனர். இதை அதிகரிக்கும் பொருட்டு சிறுபான்மையினருக்கான மத்திய சிறுபான்மை அமைச்சகத்தின் IAS/IPS பயிற்சி மையம் அமைக்கபடவேண்டும்.
4) குமரி மாவட்டத்தில் அதினமான வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிகமாக உள்ளனா. இவர்களின் வசதிக்காக பாஸ்போட் விரிவாக்க மையம் மற்றும் சென்iயில உள்ள வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் தமிழக அரசின் நிறுவனத்தின் பிரிவை நாகர்கோவிலில் அமைக்க வேண்டும்.
5) குமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டத்தில் தேன் அதிகமான உற்பத்தி செய்யபடுகிறது. தேன் உற்பத்தி செய்யும் தொழிலை உயாத்தவும் பொருட்டு மார்த்தாண்டத்தில் தேன் ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும்
6) தேங்காய் ஆராய்ச்சி மையம் அமைத்தல்
7) மகேந்திரகிரி ISRO விரிவாக்கம் செய்து தனி பிரிவாக இயங்கவைத்தல் மற்றும் இதற்காக ராக்கேட் சம்பத்தமான படிப்புகள் கொண்ட NIT கல்வி நிறுவனம் மகேந்திரகிரியில் அமைத்தல்,
8) IRE விரிவாக்கம் செய்து அதைசார்ந்த கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைத்தல்,
9) லக்னோவில் உள்ளதை போன்ற மத்திய மருத்துவ முலிகை கல்லூரி மற்றும் ஆரய்ச்சி நிலையம் மருத்துவாள் மலை பகுதியில் அமைத்தல்,
10) குமரியில் விளையாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு சாய்சென்டர் அமைத்தல்
11) சித்தா மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைத்தல்
12) ஆகமதாபாத்தில் உள்ள NID போன்ற கல்லூரி அமைத்தல்
13) குமரியில் உள்ள மிகவம் சுவை கூடிய காய்கறிகள் மற்றும் விதைகளை பாதுகாக்கும் பொருட்டு காய்கறி ஆராய்ச்சி நிலையம் அமைத்தல்
14) ரஜாக்கமங்கலத்தில் உள்ள பல்கலைகழக பயோடெக்னாளஜி பிரிவை தனி நானோ டெக்னாளஜிக்கு என தனி பல்கலைகழகமாக மாற்றுதல்.
15) ஆரல்வாய்மொழி பகுதியில் காற்றாலை மின்உற்பத்தி அதிகமாக இருக்கதால் அதை சார்ந்த தொழில்நுட்ப கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆரல்வாய்மொழி பகுதியில் அமைத்தல்,
16) குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளையும் ஆழப்படுத்துதல்
17) சென்னையில் உள்ள கன்னிமரா நுலகத்தை போன்ற மிக பெரிய அளவில் ஒரு லைபரரி தக்கலை பகுதியில் அமைக்க வேண்டும்
18) மேற்கல்விக்கு என ஓரு அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம ( PG College and Phd. Only)
(Dr. D. Peter)
Chairman,
Kanyakumari Institute of Development Studies (KIDS),
266, Water Tank Road, Nagercoil-629001
Phone : +91 4652 279745
Mobile : +91 9043952430
Post a Comment