உகாண்டாவில் போடா போடா ‘Boda Boda’ என்னும் இருசக்கர வாகன சேவையின் ஓட்டுநரை, அதில் சவாரி செய்தவர்கள் கொலை செய்த சென்ற சம்பவம் தற்போது இந்தியாவில் பரவப்பட்டு வருகிறது.
உகாண்டா நாட்டு போடாபோடா ஓட்டுநர்கள் |
வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தயவு செய்து யாருக்கும் லிப்ட் கொடுக்காதீர்கள் என ஒரு வீடியோ அதிகமாக பரவிவருகிறது. அந்த வீடியோவில் 3 பேர் பைக்கில் வருகின்றனர். அப்போது திடீரென மற்ற 2 பேரும் சேர்ந்து ஓட்டுநரை கல்லால் அடித்து கொலை செய்கின்றனர். சிசிடிவியில் பதிவாகிய இந்த காட்சிகள்தான் தற்போது இந்தியா முழுவதும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்தியாவில் வைரலாகும் வாட்சஸ்ஆப் தகவல் |
இந்த சம்பவம் உண்மையில் உகாண்டா நாட்டில் நடைபெற்றது. இச்சம்பவம் தொடர்பாக உகாண்டா காவல் துறையினர் செய்து வெளியிட்டுள்ளனர். நம்மூரில் உள்ள ஓலா, உபர் போன்று அங்கு ‘போடா போடா’ எனும் இருசக்கர வாகன சேவை. இந்த சம்பவம் தொடர்பாக உகாண்டா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், இதில் ஓட்டுநரை கொன்றுவிட்டு பைக்கை அவர்கள் திருடி சென்று விட்டதாகவும், அந்நாட்டு பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பவம் நடந்த சிசிடிவி காட்சி |
இந்த சம்பபம் ஜூன் 29-ம் தேதி நடைபெற்றுள்ளது. சிசிடிவியில் பதிவாகியுள்ள அடையாளங்களை கொண்டு போலீசார் குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.
Post a Comment