பயமுறுத்தும் பன்றிக் காய்ச்சல்
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை உண்டு . எச்1 என் 1 என அழைக்கப்படும் இந்த வைரஸ் தனது ஆர்.என்.ஏ. உருவஅமைப்பை அடிக்கடி மாற்றி கொள்கிறது. எனவே இது ஏ.பி.சி. என மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது.
ஏ டைப் வைரஸ்தொற்றினால் லேசான உடல் காய்ச்சல் இருக்கும். இருமல் , சளி, தலைவலி, வாந்தி , வயிற் றோட்டம் போன்றவை இருக்கும்.ஒரு சிலருக்கு வயிற்றோட்டம் வாந்தி_இருக்காது. ஏ டைப் நோய் வந்தவர்களை தனிமைபடுத்தி சாதாரண வைரஸ் காய்ச்சலுக்குரிய சிகிச்சைகளை அளித்தால் மட்டுமே போதும். இவர்களுக்கு டாமிபுளு (ஒசல்டாமிவிர்) மாத்திரை தறக்கூடாது. அது பின்விளைவை ஏற்படுத்திவிடும். இவர்களுக்கு ஆய்வக பரிசோதனைகள் தேவைஇல்லை. வீட்டில் ஓய்வேடுத்து கொண்டால் போதும்
பி டைப் நோயாளிகளுக்கு ஏ_டைப் நோயாளிகளுக்கு இருந்த அனைத்து அறி குறிகளுடன் காய்ச்சல் அதிகமாகவே இருக்கும். தொண்டைவலி அதிகமாக இருக்கும். இவர்களுக்கும் ஆய்வகபரிசோதனை தேவை இல்லை. ஆனால் பி டைப் நோயாளிகளுக்கு_உடனடியாக டாமி புளு மாத்திரை தரப்படவேண்டும் .
சி டைப் நோயாளி களுக்கு பி டைப் நோயாளிகளுக்கு இருந்த_அறிகுறி தவிர வழக்கத்தைவிட அதிக மூச்சு திணறல் ஏற்படும். ரத்ததுடன் கலந்த சளி வரும். நகம் நீல நிறமாகும். பசி எடுக்காது. இவர்களை உடனே ஆய்வக பரி சோதனை செய்து மருத்துவ மனையில் அனுமதிக்க வேண்டும். டாமி புளு மாத்திரை சாப்பிட வேண்டும்.
பொதுவாக பன்றிக் காய்ச்சலை பரப்பும் வைரஸ் கை குட்டையில் 12 மணி நேரமும், கைளில் 5 நிமிடமும், குளிர்ந்த நீரில் 30 நாட்களும் உயிர் வாழகூடியது .இது காற்றின் மூலமாகப் பரவுவதால், பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தும்மும்போது கைக்குட்டையைக் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். பாதிப்புக்கு உள்ளானவர்கள் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க இரும்புச் சத்து மற்றும் ஊட்டச் சத்து மிக்க உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சுவாச மண்டல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், ஆஸ்துமா, புற்று நோய்க்கான சிகிச்சை பெறுபவர்கள், டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்கள், மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டவர்கள், ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் .இவர்கள் எளிதில் நோய் தொற்றுக்கு ஆலகநேரிடும், பன்றிக் காய்ச்சலுக்குத் தடுப்பு ஊசி உண்டு. இதை வருடத்துக்கு ஒரு முறை போட்டுக் கொண்டால், நோய்த் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.

உட்கார்ந்தபடி வேலை பார்க்கிறீர்களா?
பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கட்டுண்டு கிடக்க வேண்டியதாகி விடுகிறது. இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்று வரிசை கட்டும் பிரச்சனைகள் ஏராளம். இவற்றைச் சரிச்செய்து கொள்ள நமக்கு சில எளிய டிப்ஸ்களை தருகிறார் சென்னையைச் சேர்ந்த ஹோமியோபதி மற்றும் நேச்சுரோபதி டாக்டர் ஜீவா சேகர்.
* காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்ததும், வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை முடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையை தொடங்கினால் பிரெஷ்ஷாக உணர்வதுடன், உங்களின் காலை நேரப் பதற்றமும் குறையும்.
* நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத ‘குஷன்’ நாற்காலிகளை பயன்படுத்தினால், ஒரு டர்க்கி டவலை நான்காக மடித்துப் போட்டு அதன் மீது அமருங்கள். சில மணி நேரங்களில் உங்கள் உடலின் வெப்பம் அதில் இறங்கிய பின், அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமருங்கள்.
* முதுகை வளைத்து, கூன் போட்டு உட்காராமல், நன்கு நிமிர்ந்து நாற்காலியில் முதுகு படும்படி உட்காருங்கள். கால்களை தரையில் வைப்பதைவிட, சற்று உயரமான ஒரு சப்போர்ட் கொடுத்து வைத்துக் கொண்டால், முதுகுவலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
* பல மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், தசைப்பிடிப்பு ஏற்படும். எனவே, அவ்வப்போது கை, கால்களை நீட்டி மடக்குவது, தலையை ரிலாக்ஸ்டாக நாலாபுறங்களிலும் சாய்த்துக் கொள்வது போன்ற செயல்களைச் செய்யுங்கள். கூடவே தண்ணீர் குடிப்பது, முகத்தைச் கழுவுவது, அருகில் சிறிது தூரம் நடந்து விட்டு வருவது... என்று ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உடலுக்கு ஏதாவது இயக்கம் கொடுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லை என்றால் குனிந்து கைகளால் பாதத்தை தொடுவது, இடுப்பில் கை வைத்துக் கொண்டு பின்புறம் வளைவது, இடது மற்றும் வலது புறம் சாய்வது போன்ற எளிமையான பயிற்சிகளை சில நிமிடங்கள் செய்யுங்கள் (முதுகு மற்றும் இடுப்பு வலி இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்த பிறகே இவற்றைச் செய்ய வேண்டும்). இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தசைப் பிடிப்பும் விலகும்.
* கணினி முன் வேலை செய்யும் போது எப்போதும் ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டிருப்பதால் தான் கண்களில் எரிச்சல் ஏற்படும். இதை தவிர்க்க அயர்ச்சியாகத் தோன்றும் போதெல்லாம் சில விநாடிகள் கண்களை முடி, அந்தக் கையின் மேல் மற்றொரு கையையும் வைத்து முடிக் கொள்ளுங்கள். இதனால் கண்களுக்கு சில நொடிகள் அடர்ந்த இருட்டுக் கிடைக்கும். இது, அதிக ஒளியினால் ஏற்படும் சோர்வை விலக்கும். தவிர, கண்களை மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக சுழற்றுகிற எளிமையான பயிற்சிகளையும் செய்யலாம். ‘ஆன்ட்டி ரேடியேஷன் கிளாஸ்’ -ஐ கம்ப்யூட்டர் திரையில் பொருத்துவதும் ஒளியினால் கண்கள் எரிச்சலடைவதைத் தடுக்கும்.
* உடல் உழைப்பு குறைவாக இருப்பதால் மாலை நேர சிற்றுண்டிக்கு எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது, அஜீரணக் கோளாறுகளை தடுக்கும். அதற்கு பதில் அவல், அவல் புட்டு, பிரெட் சாண்ட்விச், பழக்கலவை, சுண்டல், சன்னா மசாலா, முளை கட்டிய பயிறு, பொரி, மசாலா பொரி, வேர்க்கடலை, பட்டாணி... போன்றவற்றை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாவதுடன் அதில் உள்ள வைட்டமின்கள் உடலுக்கும் அதிக சக்தி கொடுக்கும்.
* இரவு வெகு நேரம் தூங்காமல் கண் விழித்து வேலை செய்வதாலும் அஜீரணக் கோளாறு ஏற்படும். இதனால் மறுநாள் காலை மலம் கழிக்க முடியாமல் சிரமப்படுவார்கள். இதை தவிர்க்க, மாலை நேரத்தில் நாட்டு சர்க்கரை சேர்த்த அவல் அல்லது காய்ந்த திராட்சை அல்லது பப்பாளிப்பழம் சாப்பிடலாம். கூடவே நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். இதனால் அஜீரண கோளாறுகள் வெகுவாகக் குறைவதுடன் உடலின் வெப்பநிலையும் சீராக இருக்கும்.
சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக,
கண்பார்வை இழப்பு ஏற்படலாம்.
சிறுநீரகத் தொழிற்பாடு குறையலாம் ( Kidney Failure )
மாறாத புண்களும் அங்கங்களை சத்திரசிகிச்சை மூலம் அகற்றலும் ( Amputation) நேரிடலாம்
மாரடைப்பு முதலான இருதயநோய்கள் ஏற்படலாம்.
பக்க வாதம் வரலாம்.
போன்ற பாதிப்புகள் எதிர்காலத்தில் ஏற்படலாம். இவை ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமாயின் உங்களது நீரிழிவை எப்பொழுதும் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்
சர்க்கரை நோயை கண்டுபிடிப்பதர்க்கான பரிசோதனைகள்
உங்கள் நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என நீங்கள் அறிய சில பரிசோதனைகள் உதவும். சிறுநீர் மற்றும் உங்கள் இரத்தத்தின் குளுக்கோஸை குறிப்பிட்ட கால இடைவெளியில் அளவிட வேண்டியது அவசியம். இவற்றை அளவிடும் முறைகள்
1. சிறுநீர் பரிசோதனை
நீரிழிவைக் கண்டுபிடிக்கவும1 கட்டுப்படுத்தவும் ஆண்டாண்டு காலமாகச் செய்யப்படுவதுதான் சிறுநீர்ப் பரிசோதனை. இது உங்கள் இரத்த குளுக்கோஸின் அளவை மறைமுகமாக அறிய ஓரளவு உதவும். ஆயினும் உங்கள் நீரிழிவு நோயின் நிலையைத் திட்டவட்டமாக அறிய இது உதவாது. சிறுநீர்ப் பரிசோதனை மூலம் இரத்த குளுக்கோஸ் எந்த அளவிற்கு கூடி அல்லது குறைந்திருக்கிறது என அறியவும் முடியாது. இரத்தப் பரிசோதனை செய்ய வசதியற்ற இடங்களில் இதைச் செய்யலாம். இதை இரண்டு வழிகளில் செய்வர்.
1. பெனடிக் பரிசோதனை
2. டிப்ஸ்டிக் பரிசோதனை
இவை செய்யப்படும் முறைகளை நீங்கள் அறிந்திருக்கலாம். இல்லையேல் உங்கள் மருத்துவருடன் கலந்து லோசியுங்கள்.
இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மட்டம் 180 mg/dl க்கு மேற் சென்றால் மட்டுமே சிறுநீரில் சர்க்கரை இருப்பது தெரிய வரும். இன்னும் சிலரில் இரத்த குளுக்கோஸ் 180 mg/dl க்கு மேற்பட்டால் கூட சிறுநீரில் சர்க்கரை வெளிப்படாது. வேறு சிலருக்கு இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்தாலும் சிறுநீரில் வெளிப்படும்.
எனவே சிறுநீர்ப் பரிசோதனையை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவருக்கு நீரிழிவு இருக்கிறதா எனச் சொல்ல முடியாது. அதே போல் சிறுநீர்ப் பரிசோதனையை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவரது நிரிழிவுக்கான சிகிச்சையை நெறிப்படுத்த முடியாது. இரத்தத்தில் சீனியின் அளவு குறைந்திருப்பதை சிறுநீர்ப் பரிசோதனை மூலம் அறிய முடியாது என்பது இதில் உள்ள முக்கிய குறைபாடு ஆகும்.
2. இரத்தப் பரிசோதனைகள்
இரத்தப் பரிசோதனைகள் இரத்த குளுக்கோஸின் அளவை துல்லியமாகக் காட்டும். இதனை நீங்கள் இரண்டு வழிகளில் செய்யலாம்.
1. குளுக்கோமீட்டர் பரிசோதனை
2. ஆய்வுகூடங்களில் செய்யப்படும் நாளக்குருதி குளுக்கோஸ் (VenousBlood )அளவிடல் பா¢சோதனை
குளுக்கோமீட்டர் பரிசோதனை வீட்டிலும் செய்யக் கூடியது. இதனால் ஒவ்வொரு பரிசோதனைக்காகவும் நீங்கள் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியதில்லை. விரல் நுனியிலிருந்து ஒரு சொட்டு இரத்தம் வலியின்றி எடுக்கப்படுகிறது. உடனடியாகவே முடிவு கிடைக்கிறது.
குளுக்கோமீட்டரில் எடுக்கப்படுவது மயிர்த் துளைக்குழாய் இரத்தம் (Capillary Blood).. இது நாடி இரத்தத்தை ஒத்தது. ஆய்வு கூடங்களில் நாளத்திலிருந்து இரத்தம் (Venous Blood) எடுத்து பரிசோதனை ெய்வார்கள்.
இதனால் குளுக்கோமீட்டாரில் செய்யும் போதும், மருத்துவ ஆய்வுகூடத்தில் செய்யும் போதும் கிடைக்கும் இரத்த குளுக்கோஸ் அளவுகளில் சிறிய வேறுபாடு இருப்பது சர்வசாதாரணம். இச் சிறிய வேறுபாடுகள் உங்கள் சிகிச்சை முறைகளைப் பாதிக்காது.
முதன் முறையாக ஒருவருக்கு நீரிழிவு இருக்கிறதா என நிர்ணயம் செய்வதற்கு ஆய்வுகூடங்களில் நாளத்திலிருந்து இரத்தம் (Venous Blood) எடுத்து பரிசோதனை செய்வார்கள். பின்பு நோயின் அவ்வப்போதைய நிலையை கண்டறிந்து நோயைக் கண்காணிக்க குளுக்கோமீட்டரில் எடுக்கப்படும் மயிர்த் துளைக்குழாய் இரத்தம் (Capillary Blood) போதுமானது.
Post a Comment