கனிம வளம்


கனிம வளம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வேறு எங்குமே கிடைக்காத 'இல்மனைட்' மணலில் கிடைக்கிறது. இதிலிருந்து டிட்டானியம், ரூட்டைல், மோனசைட், சர்க்கான் போன்ற பிற கனிமங்கள் பெறப்படுகின்றன. இந்தக் கனிவளங்கள் மணலில் இருப்பதால் மணல் பொன்வண்ணமாக காட்சியளிக்கிறது. இது தவிர பலவித வண்ண மணல்கள் கன்னியாகுமரியில் கிடைக்கின்றன. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் இல்மனைட்டில் 8% கன்னியாகுமரியிலிருந்து கிடைக்கிறது.

இல்மனைட்டிலிருந்து டிட்டானியம் பிரித்தெடுக்கப்பட்டு டிட்டானியம் ஆக்ஸைடு வெடிமருந்து, வெள்ளை பெயின்ட் செய்ய பயன்படுகிறது. இதுதவிர கடைசல் வேலைக்கு டிட்டானியம் கலந்த எஃகு பயன்படுத்தப்படுகிறது. வர்ணங்கள் ஒளிகுன்றாமல் இருக்கவும், ரப்பர்களில் ஏற்படும் வெடிப்புகளைத் தவிர்க்கவும், பிளாஸ்டிக் பொருள்களில் பளபளப்பு ஏற்படுத்தவும், தாள் தயாரிப்பதற்கும் இது பயன்படுகிறது. தமிழகத்தில்- இங்கு மட்டுமே கிடைக்கும் மோனாக்சைட்டில் 10 விழுக்காடு தோரியம் காணப்படுகிறது. இது அணுகுண்டு செய்ய பயன்படுவதால் பாதுகாக்கப்படுகிறது. 
அதிக வெப்பத்தைத் தாங்கும் சர்க்கான், பீங்கான் எஃகு தொழிற்சாலையில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் இத்தொழில்கள் இன்னும் பெருமளவில் வளராத காரணத்தால், இந்த வளத்தை பயன்படுத்த முடியாமல் இருக்கிறது. உப்புத்தாள் தயாரிக்க உதவும் கார்னட் மணல் மண்டைக்காடு முதல் கடியபட்டினம் வரை காணப்படுகிறது. கல்குரியஸ் என்னும் கடினமான பாறை வகைகள் 

இம்மாவட்டத்தில் பல இடங்களில் கிடைக்கின்றன. இது தவிர கிராபைட், சுண்ணாம்புக் கல் போன்றவையும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இரவிப்புதூர், மருங்கூர் முதலிய ஊர்பகுதிகளில் இரும்பு கலந்த கற்களும், ஆரல்வாய் மொழியிலிருந்து வெள்ளமடம் வரை சுண்ணாம்புப் படிவங்களும் படிவுகளாக உள்ளன.
Thanks to Tamilkalanjiyam

0/Post a Comment/Comments

Previous News Next News
New Vision
New Vision