காட்டுவளம்

காட்டுவளம்

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு அடுத்தபடியாக அதிகளவு மலையினை கன்னியாகுமரி மாவட்டம் பெறுகிறது. இதனால் இங்கு காடுகள் செழித்துக் காணப்படுகின்றன. காடுகளின் மொத்த பரப்பளவு 449 ச.கி.மீ. ஆகும். இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 4000 அடி வரை செல்கிறது. இங்கு யானை, மான், மிளாவு என்ற மான் வகை, சிறுத்தை, புலி, கரடி, பன்றி, உடும்பு, குரங்கு, செந்நாய், நரி முதலிய விலங்குகள் காணப்படுகின்றன. 
இங்கு தேக்கு, மட்டிப்பால், முன்னிலவு போன்ற மரங்கள் வளர்கின்றன. 800 ஏக்கர் பரப்பளவில் தேக்கு மரங்களும், 600 ஏக்கர் பரப்பில் தீக்குச்சி மரங்களும், 15 ஏக்கர் பரப்பில் அரக்கு உற்பத்திற்காக பூவன்மரத் தோட்டங்களும் வளர்க்கப் படுகின்றன. பல மருத்துவ மூலிகைகள் மருத்துவ மலையில் காணப் படுகின்றன.

0/Post a Comment/Comments

Previous News Next News
New Vision
New Vision