ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா அணியிடம் சென்னை தோல்வி

ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா அணியிடம் சென்னை தோல்வி
21-05-2014
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற உள்ளூர் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த சென்னை அணியின் துவக்க வீரர் ஸ்மித் 5 ரன்கள் மட்டுமே எடுத்து வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அதன்பின்னர் இணைந்த மெக்கல்லம்-ரெய்னா, கொல்கத்தா பந்துவீச்சாளர்களின் பந்துகளை நிதானமாக எதிர்கொண்டு ரன் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 60 ஆக இருந்தபோது மெக்கல்லம் ஆட்டமிழந்தார். அவர் 24 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்சருடன் 28 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் ரெய்னாவுடன், டு பிளசிஸ் இணைய ஆட்டம் மீண்டும் விறுவிறுப்படைந்தது. ரெய்னா அரை சதம் கடந்தார். ஆனால், 23 ரன்கள் எடுத்த டு பிளசிஸ், 17-வது ஓவரில் ரன் அவுட் ஆனார். அதே சமயம் மறுமுனையில் பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்சர்களாக பறக்கவிட்ட ரெய்னா, 65 ரன்களில் (52 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) அவுட் ஆனார். டோனி 21 ரன்களும், ஜடேஜா 9 ரன்களும் சேர்க்க 20 ஓவர் முடிவில் சென்னை அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ராபின் உத்தப்பா 39 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 67 ரன்னும், கம்பீர் 20 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 21 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். மனிஷ் பாண்டே 28 பந்துகளில் 18 ரன்னுடனும், ஷகில் அல்-ஹசன் 20 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 46 ரன்னும் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

0/Post a Comment/Comments

Previous News Next News
New Vision
New Vision