காவிரி நீர் போராட்டத்தால் அனுமதி மறுப்பு பெங்களூருவில் ரசிகர்கள் இல்லாமல் நடந்த கால்பந்து போட்டி
ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் கிளப் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் கால் இறுதி முதல் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு கால்பந்து கிளப்–சிங்கப்பூர் தாம்பினஸ் அணிகள் மோதும் போட்டி பெங்களூரு கண்டீவாரா ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கி மின்னொளியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் காவிரி நீர் பிரச்சினை காரணமாக கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கலவரம் நீடித்து வருகிறது. இதனால் இந்த போட்டி இரவுக்கு பதிலாக பகல் நேரத்தில் நடத்தப்பட்டது. ரசிகர்கள் யாருக்கும் போட்டியை நேரில் பார்க்க அனுமதி அளிக்கப்படவில்லை. போட்டியின் போது மைதானத்தின் நுழைவு வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. அணி வீரர்கள் மற்றும் நிர்வாகிகள், மைதான ஊழியர்கள், மருத்துவ குழுவினர், போட்டி அதிகாரிகள், குறிப்பிட்ட அளவு மீடியாக்களுக்கு மட்டுமே ஸ்டேடியத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டது.
ஸ்டேடியத்தின் அனைத்து நுழைவு வாயில்களையும் அடைத்து விட்டு ரசிகர்கள் யாரும் இல்லாமல் விளையாட்டு போட்டி அரங்கேறியது இதுவே முதல்முறையாகும்.
Post a Comment