Bhagavathi Amman Temple

அருள் மிகு பகவதி அம்மன் திருக்கோயில்,
கன்னியாகுமரி
வரலாறு
முன்னொரு காலத்தில்தேவர்களை அசுரர்கள் அடக்கியாண்டனர்தர்மம் அழிந்து அதர்மம் தலைதூககியது.தீமையும்பாவமும் பெருகின அறியாமையும் அநீதியும் ஆட்சி புரிந்தனஅசுரர் அரசனாகிய பாணாசுரன் மூவுலகுக்கும் முடிவு தேடினான்தேவர்களோடு அன்றி முனிவருக்கும் ஆன்றோருக்கும் தொல்லை கொடுத்து வந்தான்நிலமகளாகிய தாய்உலகை இருள் மயமாக்கும் தீய திறனை ஒழிப்பதற்குத் திருமாலை வேண்டி நின்றாள்.

தீத்திறங்கொண்ட பாணாசுரனைப் பரசக்தியால் மட்டுமே கொல்ல முடியும்” என்று கூறிய திருமால் தேவர்களைப் பராசக்தியிடம் சரண்புக வழி கூறினார்அதன்படி தேவர்கள் பராசக்தியை வேண்டி ஒர் பெரு வேள்வி செய்தனர்வேள்வி முடிவில் சக்திதேவி வெளிப்பட்டாள்பாணாசுரன் தலைமையில் நிகழும் தீய செயல்களை ஒழித்துஒழுங்கும் அறமும் உலகில் நிலைபெறச் செய்வதாக உறுதி மொழிந்தாள்.

அன்று முதல் அவள் கன்னியா குமரிக்கு வந்து கடுந்தவம் புரியலானாள்நாட்கள் கடந்தனகன்னிதேவி மணப்பருவம் அடைந்தாள்சுசீந்திரம் என்னும் இடத்திலுள்ள இறைவன் சிவபெருமான் அவள் மீது காதல் கொண்டார்அவருக்கு அவளைத் திருமணம் முடிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டனஆனால்அசுரர் தலைவன் ஒரு கன்னியால் தான் கொல்லப்படுவான் என்று பிரம்மதேவனால் விதிக்கப்பட்டிருந்ததால்இத் திருமணம் நிகழுமாயின்,பாணாசுரன் அழிவுக்குரிய வாய்ப்பு கெட்டுவிடும் என்று நாரதர் உணர்ந்தார்ஆகவே அவர் இத்திருமணம் நிகழாதிருப்பதற்கு வேண்டிய வழிவகைகளைக் கருதலானார்.
அவர் பராசக்தியையும்சிவபெருமானையும் நேரில் சென்று கண்டுதிருமணம் குறிப்பிட்ட ஒர் நாளில்நள்ளிரவில்ஒரு நல்வேளையிலேயே நிகழ வேண்டும்அதற்கு ஆயத்தமாக இருங்கள் என கூறினார்குறித்த இரவில்நல்லநேரம் தவறிவிடக் கூடாதெனக் கருதிச் சிவபெருமான் கன்னியாகுமரிக்குப் புறப்பட்டார்போகும் வழியில்,வழுக்கம்பாறை என்ற இடத்தை அடைந்தபோதுநாரதர் ஒர் சேவல் உருக்கொண்டு உரக்கக் கூவினார்பொழுது புலர்ந்து விட்டதெனத் தவறுதலாகப் புரிந்து கொண்ட சிவபெருமான் சுசீந்திரத்திற்கு வருத்தத்துடன் திரும்பினார்.தேவியும்அதன் பின் என்றும் கன்னியாகவே இருப்பதாக முடிவு செய்துதவத்தை தொடர்ந்தாள்.
திருமணத்திற்கென்று செய்யப்பட்ட உணவுப் பொருள்யாவும் வகை வகையான மணலாக மாறினஅதன் சான்றாகவே,இன்றும்குமரிக்கடல் துறையில் அரிசி போன்ற வெண் சிறுமணலும்வேறுவகையான பலவண்ண மணலும் மிகுதியாகக் கிடப்பதைக் காணலாம்இவ்வாறு தேவி கடுந்தவமிருக்கும்போதுஒரு நாள்பாணாசுரன் தேவியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டுஅவளை நேரில் காண வந்தான்தேவியைக் கண்டதும் அவளை மணந்து கொள்ள வேண்டினான்ஆனால்தேவி மறுத்து விடவே அசுரன் அவளைத் தன் உடல் வலிமையால் கவர்ந்து செல்ல எண்ணித் தன் உடைவாளை உருவினான்.
இத்தகைய தருணத்தை எதிர்நோக்கியிருந்த தேவியும் தன் போர்வாளை வீசினாள்நெடுநாட்கள் இருவரும் கடும் போர் புரிந்தனர்இறுதியில்தேவி தன் சக்கராயுதத்தால் பாணாசுரனைக் கொன்றொழித்தாள்தேவர் யாவரும் தேவிக்கு நன்றி செலுத்தினர்தேவியும் அவர்களை வாழ்த்தியருளியபின் மீண்டும் தன் தவத்தை மேற்கொள்ளத் தொடங்கினாள்குமரி முனையின் கிழக்கே கடலில் இரண்டு அழகிய பாறைகள் உள்ளனஅதில் பெரிய பாறை சுமார் ஏக்கர் பரப்பும் கடல் மட்டத்திலிருந்து 55 அடி உயரமும் உடையதுஅதில் ஓரிடத்தில் பாதம் போன்ற அடையாளம் காணப்படுகிறதுஅதை தேவியின் திருப்பாதம் என்று அழைக்கிறார்கள்.
பரசுராமர் தேவிகுமரியின் தெய்வ உருவை இங்கு அமைத்து வழிபட்ட தலம்இக் கோயில் இந்தியா முழுமையும் பரந்த புகழுடையதுகடல் முனையில் இருந்தாலும் கோயிலுக்குள் உள்ள கிணற்றில் உப்புக் கரிக்காத நல்ல தண்ணீர் கிடைக்கிறது என்பது அதிசயம்முன்பிருந்த கோயில் கடல் கொண்டு விட்டதுஇப்போதிருப்பது இரண்டாவதாக நிறுவனம் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.
விவேகானந்தர் நினைவு மண்டபம்:
1892ல் சுவாமி விவேகானந்தர் தனது யாத்திரையின் போது குமரிமுனை வந்து அம்மனை வழிபட்டுவிட்டு இப்பாறையில் உட்கார்ந்து தியானம் செய்தார்அவர் நினைவாக இம்மண்டபம் கட்டப்பட்டுள்ளதுகடலில் காணப்படும் இன்னொரு பாறையில் அதி அற்புதமாக,பிரமாண்டமாக நிற்கும் திருவள்ளுவர் சிலை இருக்கிறது.மிகவும் கலைநுணுக்கத்துடன் கூடிய இச்சிலையை அருகில் சென்று பார்க்கப் படகு போக்குவரத்து வசதி உள்ளதுகடல் அலைகளோடு போட்டிபோட்டு கம்பீரமாக காட்சி தரும் இந்த திருவள்ளுவர் சிலை காண்போர் கண்களை வியக்க வைக்கும்.
இது முக்கடல் சங்கமிக்கும் இந்திய தென் கோடியில் அமைந்த மிக சிறந்த சுற்றுலாதலம் கிழக்கே வங்கக்கடலும் தெற்கே இந்தியப் பெருங்கடலும் மேற்கே அரபிக்கடலும் கூடி அலைமோதும் அழகிய காட்சியுடையதுசில பௌர்ணமி நாளன்றுஇக்கடற்கரையில் நின்று மாலைக் கதிரவன் மேலைக் கடலில் மறைவதையும் முழுமதி கீழைக் கடலில் கிளர்ந்தெழுவதையும் ஒரு சேரக் கண்டு களிக்கலாம்.
1984ல் அண்ணல் காந்தியடிகளின் அஸ்தி இங்கு கடலில் கரைக்கப்பட்டதுகரைக்கும் முன்பு அஸ்தி வைக்கப்பட்ட கலசம் ஒரு பீடத்தின் மீது வைத்து அஞ்சலி செய்யப்பட்டது.அவ்விடத்தில் ஒரு நினைவுச்சின்னம் கட்ட காந்தியடிகளின் சீடர் கிருபளானி மேற்கொண்ட முயற்சியால் 1954ல் அடிக்கல் நாட்டி1956 ல் அழகிய மண்டபமாக கட்டி முடிக்கப்பட்டதுகாந்திஜி பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி சூரிய ஒளி பீடத்தின் மீது படும்படியாக அமைத்திருப்பது தனிசிறப்புசுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்ந்திழுக்கும் மண்டபமாக திகழ்கிறது.
திருவிழா:
புரட்டாசி நவராத்திரி திருவிழா - 10 நாள்வைகாசி விசாகம் - 10 நாள்.
தேரோட்டம்தெப்போத்சவம்:
10 ஆயிரம் பக்தர்கள் கூடுவர்இத்திருவிழா நாட்களில் காலையிலும் இரவிலும் ஊர் தெரு வழியாகத் தேவியின் திருவுருவம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்ஒன்பதாவது நாள் தேர்த்திருவிழாவும் பத்தாவது நாள் தெப்பத்திருவிழாவுமாகும்தெப்பத் திருவிழாவன்று நன்றாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் தேவியின் திருவுருவம் நீரின் மேல் வலமாக மிதப்பில் கொண்டு செல்லப்படும்கன்னிகா பூசைசுயம்வர பூசை ஆகியவை செய்தால் திருமணம் விரைவில் கைகூடும்.
காசிக்கு போகிறவர்களுக்கு கதி கிடைக்க வேண்டுமாயின் இக்கன்னியாகுமரிக்கு வரவேண்டுமென்று நம் புராணம் முறையிடுகிறதுஇது சிறந்த தீர்த்தத் துறையையுடைய புண்ணிய கடற்கரையாகும் என்பதால் இங்கு நீராடினால் பாவம் தொலைந்து புண்ணியம் கிடைக்கும்அம்மனுக்கு விளக்கு போடுதல் அம்மனுக்கு புடவை சாத்துதல்,அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான திருமுழுக்காட்டுஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்தி கடன்களாக செய்கின்றனர்.
வடஇந்தியர்கள் வருகை அதிகம் உள்ள கோயில்.
இங்குள்ள கடற்கரையில் பக்தர்கள் தங்கள் காலம் சென்ற மூதாதையர்களுக்கு காரியம் செய்ய எள்ளும் தண்ணீரும் இறைத்து பிதுர்கடன் செய்கிறார்கள்.
வழிகாட்டி:
சுற்றுலா தலம் என்பதால் தென்தமிழ்நாட்டின் முக்கிய ஊர்களிலிருந்து கன்னியாகுமரிக்கு நிறைய பேருந்து வசதி உள்ளது.
முக்கிய ஊர்களிலிருந்து தூரம்:
நாகர்கோவிலிலிருந்து -25 கி.மீ.,
திருநெல்வேலியிலிருந்து -91 கி.மீ.,
மதுரையிலிருந்து - 242 கி.மீ.,
கன்னியாகுமரி,நாகர்கோவில் ஆகிய இடங்களுக்கு புகைவண்டி இணைப்பு உள்ளது.
Thanks to koyil.siththan

0/Post a Comment/Comments

Previous News Next News
New Vision
New Vision