மணவாளக்குறிச்சியை அடுத்த அம்மாண்டிவிளை பொட்டல்குழி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் திங்கள்நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயசித்ரா (வயது 37). பிள்ளைகள் படிப்பிற்காக தற்போது ஆசாரிப்பள்ளம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்துள்ளார்.
அங்கு குடியேறுவதற்காக நேற்று முன்தினம் பொட்டல்குழியில் இருந்து ஆசாரிப்பள்ளத்திற்கு வீட்டுக்கான பொருட்களை எடுத்து சென்றுள்ளார். இதற்காக ஊரில் உள்ள சிலரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். அவர்கள் பொருட்களை மாற்றிட சென்றனர். இந்நிலையில் ஜெயசித்ரா வீட்டில் இருந்த அலமாரியை திறந்து பார்த்தபோது, அங்கிருந்த நான்கரை பவுன் நெக்லஸ், ஒரு பவுன் கம்மல் ஆகியவற்றை காணவில்லை.
இதுகுறித்து ஊழியர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் தெரியாது என்று கூறியுள்ளனர். இதைதொடர்ந்து ஜெயசித்ரா மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post a Comment