குமரி மாவட்டத்திற்கு 35 புதிய பேருந்துகள்: 5 ஏசி பஸ்களும் வருகிறது

தமிழகம் முழுவதும் 500 புதிய பேருந்துகளின் இயக்கத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடக்கி வைத்தார். அதில் குமரி மாவட்டத்திற்கு 35 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு வழங்கப்பட்ட பேருந்துகளில் குமரி மாவட்டத்திற்கு 22 பேருந்துகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த பேருந்துகள் திருநெல்வேலி மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர், தமிழகம் முழுவதும் 500 புதிய பேருந்துகளின் இயக்கத்தை தொடக்கி வைத்தார். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்திற்கு 13 புதிய பேருந்துகள் ஒதுக்கப்பட்டன. இதில் 6 பஸ்கள் திருவனந்தபுரத்திற்கு இயக்கப்படுகிறது. தேங்காய்பட்டணம், கொல்லங்கோடு, திற்பரப்பு, குளச்சல், நாகர்கோவிலில் இருந்து இருந்து 2 என மொத்தம் 6 பஸ்கள் திருவனந்தபுரத்திற்கு இயக்கப்பட உள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து நெடுமங்காட்டிற்கு 1 பஸ், நாகர்கோவிலில் இருந்து 4 பஸ்கள், நாகர்கோவிலில் இருந்து சேலத்திற்கு 2 பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் 14 பஸ்கள் பாடிகட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 5 பஸ்கள் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களாகும்.
இதுபோல் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 22 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 2 ஏசி பஸ்கள். கன்னியாகுமரி பணிமனைக்கு 8 பஸ்கள் ஒதுக்கப்பட்டு, அதில் இருந்து, கோழிக்கோட்டிற்கும், மூணாறுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது.

மீனாட்சிபுரம் பணிமனைக்கு 4 பஸ்கள் ஒதுக்கப்பட்டு, அது சென்னைக்கும், பெங்களூருக்கும் இயக்கப்படுகிறது. மார்த்தாண்டம் பணிமனைக்கு 6 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 2 ஏசி பஸ்கள் ஆகும். இந்த ஏசி பஸ்கள் பெங்களூருக்கு இயக்கப்படுகிறது. மற்ற பஸ்கள் பெங்களூருக்கும், சென்னைக்கும் இயக்கப்படுகிறது.

திருவனந்தபுரம் பணிமனைக்கு 4 பஸ்கள் ஓதுக்கப்பட்டு, அவை சேலத்திற்கும், பெங்களூருக்கும் இயக்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous News Next News
New Vision
New Vision