Training

டேலி பயன்பாட்டு மொழிகளின் பட்டியல். 
டேலி (tally) மென்பொருள் மூலம் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பில் அச்சிடலாம் என்று சொல்கிறோம். ஏனென்றால் Tally ( டேலி ) மென்பொருள் என்பது CONCURRENT MULTILINGUAL SOFTWARE ஆகும். எங்கேயாவது டேலி மென்பொருள் மூலம் தமிழில் 

( TAMIL ) அச்சிடப்பட்ட பில்லை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா...? வெகு அபூர்வமான விசயம். காரணம் யாரும் முயற்சி செய்து பார்ப்பதில்லை! நம்மில் பலருக்கு டேலி (TALLY) மென்பொருள் மூலம் ஆங்கிலத்தில் மட்டுமே கணக்குகளை நிர்வகிக்க முடியும் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். டேலியில் ஏதாவது ஒரு கம்பெனியை திறந்து கொள்ளுங்கள். ALT+ G என்ற சுருக்குவிசையை பயன்படுத்தி தமிழ் மொழியை தேர்வு செய்தால் ஒட்டு மொத்த டேலி மெனுவும் தமிழில் மாறிவிடும் என்பது தெரியுமா..
பிறகு நீங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கணக்கு நிர்வகிக்கலாம். தமிழில் பில் அச்சிடலாம். 

உங்கள் கைப்பேசியில் SETTING MENU விற்கு LANGUAGE பகுதியை திறந்து தமிழ் மொழியை தேர்வு செய்தால் மொத்த மெனுவும் தமிழில் மாறிவிடுகிறது அல்லவா. பின்பு குறுஞ்செய்தியை கூட தமிழில் அனுப்பலாம். அதுபோலத் தான் இதுவும். அப்ப டேலி மென்பொருளில் தமிழ் தவிர வேறு என்ன பயன்பாட்டு மொழிகள் இருக்குன்னு தெரிஞ்சுக்கனுமா.. Tallyல் ஏதாவது ஒரு கம்பெனியை திறந்து கொள்ளுங்கள். ALT+G என்பதை அழுத்துங்கள். இப்பொழுது என்னென்ன மொழிகளில் டேலி மென்பொருளை பயன்படுத்தலாம் என பயன்பாட்டு மொழிகளின் பட்டியல் தெரிகிறதா..

இதோ அந்த பட்டியல்.
1) ARABIC ( SAUDI ARABIA )
2) URDU (ISLAMIC REPUBLIC OF PAKISTAN )
3) ஆங்கிலம் 
4) இந்தோனேசியன் மொழி
5) கன்னடம் 
6) குஜராத்தி 
7) தமிழ் 
8) தெலுங்கு
9) பஞ்சாபி 

10) பஹாஸா மெலாயு
11) மராத்தி 
12) மலையாளம்
13) வங்காளி 
14) ஹிங்கிலிஷ் 
15) ஹிந்தி
உங்கள் தேவை எதுவோ அந்த மொழியில் டேலி மென்பொருளை உபயோகித்து பயன்பெறுங்கள்.

டேலியில் பயன்பாட்டு மொழியை மாற்ற சுருக்குவிசை
ALT+G.
டேலியில் விசைப்பலகை 
( KEY BOARD ) யின் தட்டச்சு மொழி 
( TYPING LANGUAGE ) மாற்றம் செய்ய சுருக்கு விசை
ALT+ K.

டேலி பேசிக் டிப்ஸ் 
¤ பேசிக் டேலி டிப்ஸ் ¤

புதிதாக டேலி கோர்ஸ் படித்துவிட்டு வருபவர்கள் டேலியை பயன்படுத்தும்போது துவக்க காலத்தில் சில தவறுகள் செய்ய நேரிடும்.
தவறிற்கு காரணம் புரிந்து கொள்ளாதது அல்ல. தயக்கம் தான் அவர்கள் கவனத்தை திசை திருப்புகிறது.
உதாரணத்திற்கு புதிதாக டேலி கற்றவர் டேலியில் ஒரு கம்பெனியை 
( CREATE ) துவக்குகிறார் என்று வைத்து கொள்வோம்.
இப்போது அந்த கம்பெனியின் முந்தைய வருட 
BALANCE SHEET ) பேலன்ஸ் சீட்டைப் பார்த்து ஒவ்வொரு பார்ட்டி லெட்ஜரையும் துவக்குவார்.
பார்ட்டி லெட்ஜெரை புதிதாக 

( CREATE ) துவக்கும் போதே அந்த பார்ட்டியின் ஆரம்ப இருப்பையும் 
( OPENING BALANCE ) என்ட்ரி செய்வார்.
இப்படி பேலன்ஸ் சீட்டைப் பார்த்து ஒவ்வொரு லெட்ஜராக துவக்கி கொண்டே வருவார்கள்.

குறிப்பிட்ட 2 லெட்ஜரை புதிதாக துவக்கும் போது தான் குழப்பி கொள்வார்கள்.

அந்த 2 லெட்ஜெர்கள் என்ன தெரியுமா...?
1 ) Cash in hand
2 ) Opening Stock
முதலில் Cash in hand என்ற லெட்ஜரில் என்ன பிரச்சினை என்று பார்ப்போம்.
அதற்கு முன் டேலியில் எத்தனை Pre Defined Ledgers இருக்கிறது என்று தெரியுமா..?

இரண்டு..
1 ) Cash 
2 ) Profit & Loss 

நீங்கள் புதிதாக டேலியில் ஒரு கம்பெனி துவக்கி 
( CREATE ) விட்டு எந்த என்டிரியும் 
( ENTRY ) போடாமல் Accounts infoவில் உள்ள Ledgersல் Displayவை அழுத்தி பாருங்கள்.
Cash மற்றும் Profit & loss என்ற 2 Ledgerகள் இருக்கும்.
நன்றாக நினைத்து பாருங்கள்.
நீங்கள் எந்த லெட்ஜரையும் துவக்கவில்லை.
ஆனால் 2 லெட்ஜர்கள் ஏற்கனவே துவங்கி உள்ளது. 
இப்படி டேலியே முன்கூட்டியே துவக்கி கொள்ளும் LEDGERஐ தான் Predefined Ledgers என்று சொல்கிறோம். 
ஏற்கனவே Predefind Ledgerகள் இருப்பதால் 
Cash in hand என்ற Ledgerஐ நீங்கள் துவக்க தேவையில்லை.

Accounts infoல் Ledgers சென்று Cash ledgerஐ எடிட் ( EDIT ) என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது ஒபனிங் பேலன்சை என்டிரி செய்யுங்கள். எல்லாம் சரி..
இன்னும் சுலபமாக புரிந்து கொள்ள புதிதாக ஒரு வழி இருக்கிறது.

லெட்ஜர் துவக்கும்போது 
Cash in hand என்பதற்கு பதிலாக Cash என்று லெட்ஜரை துவக்கி பாருங்கள்.
துவக்க முடியாது!
காரணம் 
Duplicate entry என்று திரையில் தெரியும். 
Predefined ledgers பற்றி இப்போது புரிகிறதா..
அடுத்து 
Opening Stock என்ற லெட்ஜரை துவக்குவதில் என்ன பிரச்சினை என்று பார்ப்போம்..
நீங்கள் 
Opening stock என்ற லெட்ஜரை 
stock in hand என்ற குரூப்பின்
( GROUP ) கீழ் துவக்கியிருப்பீர்கள்.
இப்போது 
OPENING STOCK என்பதிற்கு பதிலாக STOCK என்ற பெயரில் லெட்ஜரை 
STOCK IN HAND என்ற குரூப்பின் கீழ் துவக்கி அதில் பேலன்ஸ் சீட்டிலுள்ள 

OPENING STOCKன் ஆரம்ப இருப்பை என்டிரி செய்யுங்கள்.
இப்போது 
PROFIT & LOSSஐ ஓபன் செய்யுங்கள்.

Opening Stock மற்றும் 
Closing Stock என இரண்டும் 
Profit & Lossல் இருக்கும்.


டேலி.இ ஆர் பி 9 மென்பொருள் - 4

இந்த பதிவில் நாம் காண இருப்பது
1.நிறுவன தெரிவு. (Select Company)
2.நிறுவன வெளியேற்றம்.(Shut Company)
3.நிறுவன தகவல் மாற்றம் ( Company Alter)
4.நிறுவனம் முற்றொழித்தல் (Company Delete)
ஆகியவற்றை பற்றியதே.,

1.நிறுவன தெரிவு. (Select Company)

நிறுவன உருவாக்கம் முடிவுற்ற பின் ,நாம் தினசரி பயன்படுத்த உள்ள

செயலே இந்த நிறுவன தெரிவு.


மேலே உள்ள COMPANY INFO MENU- வில் இருந்து F1 KEY அல்லது

 (SELECT CMP)என்ற MENU-வின் HOT KEY " S" - ஐ அழுத்துவதின் மூலம் நாம் நமது நிறுவனத்தை தெரிவு செய்யலாம்.

மேல் உள்ள படத்தின்படி ,நீங்கள் தெரிவு. செய்ய வேண்டிய நிறுவன

முதலெழுத்து M - என்று கொள்வோம்.
தற்போது NAME -பகுதியில் நீங்கள் M - என்று தட்டச்சு செய்துள்ளீர்
என்றால்
டேலி M - ல் ஆரம்பிக்கும் அனைத்து நிறுவனங்களின் பெய்ர்களையும்
இளநீல வண்ணத்தில் தனித்து காண்பிக்கும்.
டேலியின் மாற்றி யோசி :
பொதுவாக கணினியில் மேல் அம்புகுறி (UP ARROW) -KEY அழுத்த 
CURSOR -மேலே செல்வதும் ,கீழ் அம்புகுறி (DOWN ARROW) -KEY அழுத்த 
CURSOR -கீழே செல்வதும் வாடிக்கை.
ஆனால் நிறுவன தெரிவின் போது நிறுவனங்களின் பெயர்களை
இளநீல வண்ணத்தில் தனித்து காண்பிக்கும் நிலையில் மட்டும் மேல் அம்புகுறி (UP ARROW) -KEY அழுத்த CURSOR -கீழே செல்லும்.
கீழ் அம்புகுறி (DOWN ARROW) -KEY அழுத்த CURSOR -மேலே செல்லும்.
அதாவது,மேல் உள்ள படத்தின்படி 
கீழ் அம்புகுறி (DOWN ARROW) -KEY அழுத்த - Model Agencies நிறுவனமும்,மேல் அம்புகுறி (UP ARROW) -KEY அழுத்த - Model Traders நிறுவனமும் தெரிவு செய்யப்படும்.
எனவே உங்கள் நிறுவனம் மேற்பகுதிக்கு அருகாமையில் உள்ளதா அல்லது கீழ்பகுதிக்கு அருகாமையில் உள்ளதா என்பதை பொருத்து எந்த அம்புகுறி KEY உபயோகிக்கலாம் என்பதை முடிவு செய்யலாம்.
எனவே நிறுவன தெரிவின்போது NAME -பகுதியில் நிறுவனத்தின் பெயர் முழுவதையும் தட்டச்சு செய்ய வேண்டாம்.ஓரிரு எழுத்துக்களை தட்டச்சு செய்து பின் ARROW KEY -மூலம் தெரிவு செய்யலாம்.

ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனங்களின் தெரிவு
பொதுவாக பிற கணக்கியல் மென்பொருளில்( Other Accounting Software) ஒரு சமயத்தில் ஒரு நிறுவனத்தை மட்டுமே OPEN செய்ய இயலும்.OPEN செய்யப்பட்ட நிறுவனத்தை மூடினால் மட்டுமே ,பிற நிறுவனத்தை OPEN செய்ய முடியும்.ஆனால் டேலி மென்பொருளில் ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனங்களை தெரிவு செய்ய இயலும்.நீங்கள் தற்போது DEMO AGENCIES -என்ற நிறுவனத்தில் இருப்பதாக கொள்வோம்,அதன் GATEWAY OF TALLY - என்ற MENU-வில் இருந்து F1 -Select Cmp என்ற -KEY அழுத்தி MODEL AGENCIES நிறுவனத்தை தெரிவு செய்யுங்கள்.

இப்போது மேலே உள்ள படத்தில் உள்ளப்படி Model Agencies மற்றும் Demo Agencies என்ற இரு நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.ஆனால் இதில் BOLD எழுத்துக்களில் உள்ள Model Agencies -CURRENT WORKING COMPANYஆகும்.  Demo Agencies - READY TO WORK COMPANY ஆக உள்ளது.
ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனங்களின் தெரிவு செய்வதால் வரும் பயன்கள்:
ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனங்களின் தெரிவு செய்வதால் இரு பயன்கள் உண்டு.

1.ENTRY SCREEN -னில் இருந்தே நிறுவனங்களை மாற்றலாம்

தற்போது நீங்கள் Model Agencies நிறுவனத்தில் VOUCHER ENTRY SCREEN -ல் இருப்பதாக கொள்வோம்.
இதன் HELP WINDOW-வில் F3 -COMPANY என்ற KEY அழுத்தி நீங்கள் Model Agencies நிறுவனத்தில் இருந்து  Demo Agencies -க்கு மாற்றிக்கொள்ளலாம். இதனால் ஒரே நேரத்தில் இரு நிறுவனங்களிலும் DATA ENTRY - செய்யலாம்.
2. நிறுவனங்களின் REPORT -களை ஒப்பிட்டு பார்க்கலாம்.
தற்போது நீங்கள் Model Agencies நிறுவனத்தில் BALANCE SHEET-ல் இருப்பதாக கொள்வோம்.இதன் HELP WINDOW-வில் ALT+C (: NEW COLUMN) என்ற KEY அழுத்தி Demo Agencies  தெரிவு செய்வதின் மூலம்
இரு நிறுவனங்களின் BALANCE SHEET -களையும் ஒரே திரையில் ஒப்பிட்டு கொள்ளலாம்.

இதனை போலவே மற்ற அறிக்கைகளையும் (PROFIT & LOSS A/C, STOCK SUMMARY ,TRIAL BALANCE ) ஒப்பீடு செய்ய இயலும்
.
2.நிறுவன வெளியேற்றம்.(Shut Company)

பொதுவாக ஒரு நிறுவனத்தில் நமது பணிகள் அனைத்தும் முடிந்தவுடன், அந்நிறுவனத்தை விட்டு தற்காலிகமாக வெளியேற நாம் பயன்படுத்துவதே

Shut Company. நிறுவனத்தின் GATEWAY OF TALLY MENU -வில் இருந்து ALT + F1

என்ற -KEY யை அழுத்தி

அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறலாம்.


3.நிறுவன தகவல் மாற்றம் ( Company Alter)
நிறுவன உருவாக்கத்தின் போது,நாம் அளித்த தகவல்களை மாற்றவோ (அல்லது) அளிக்க மறந்த தகவல்களை சேர்க்கவோ பயன்படுவது தான் நிறுவன தகவல் மாற்றம்.

நிறுவனத்தின் GATEWAY OF TALLY MENU -வில் இருந்து ALT + F3

என்ற -KEY யை அழுத்தவும்.

அதன்பின் வரும் COMPANY INFO MENU -வில் இருந்து ALTER -ஐ தெரிவு செய்யவும்.

பிறகு உங்கள் நிறுவனத்தினை தெரிவு செய்யவும்.
தற்போது நீங்கள் நிறுவன தகவல் மாற்ற திரையில் இருப்பீர்கள்.


இதில் NAME,MAILING NAME,ADDRESS,TELEPHONE,MOBILE,EMAIL.PIN CODE -என அனைத்து தகவல்களையும் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.

இதில் மாற்றக் கூடாத தகவல்கள் FINANCIAL YEAR FROM & BOOKS BEGINNING FROM  என்றவையே ஆகும்.இவற்றை மாற்ற முற்பட்டால் தகவல் இழப்பு (DATA LOSS) ஏற்படலாம்.

 தகவல்களை மாற்றியபின் ACCEPT செய்வதின் மூலம்,மாற்றியவற்றை SAVE செய்ய இயலும்.

4.நிறுவனம் முற்றொழித்தல் (Company Delete)

சில நேரங்களில் தேவையில்லாமல் உருவாக்கிய நிறுவனங்களை அழிப்பதற்காக பயன்படுவதுதான் நிறுவனம் முற்றொழித்தல்.



நிறுவனத்தின் GATEWAY OF TALLY MENU -வில் இருந்து ALT + F3

என்ற -KEY யை அழுத்தவும்.



அதன்பின் வரும் COMPANY INFO MENU -வில் இருந்து ALTER -ஐ தெரிவு செய்யவும்.

Company Alter -திரையில் இருந்து ALT + D -KEY யை அழுத்தவும்.
எச்சரிக்கை: இந்த வழிமுறைகளை பயன்படுத்தி நிறுவனத்தை அழித்தால் மீண்டும் மீட்கொணர(RECOVERY) இயலாது.அதனால் தான் டேலி மென்பொருளும் ,உங்களிடம் உறுதிபடுத்திக் கொள்ளும்.
இங்கே Y KEY யை அழுத்தியோ அல்லது ENTER ஐ அழுத்தியோ நிறுவனத்தை அழிக்கலாம்.

0/Post a Comment/Comments

Previous News Next News
New Vision
New Vision