தன்சானியாவில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் எம்.எச் 370 விமானத்தினுடையதுதான்: உறுதி செய்தது மலேசியா

தன்சானியாவில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் எம்.எச் 370 விமானத்தினுடையதுதான்: உறுதி செய்தது மலேசியா

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.370, கடந்த 2014–ம் ஆண்டு மார்ச் மாதம் 8–ந் தேதி கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்றது. அதில் 227 பயணிகளும், 12 சிப்பந்திகளும் இருந்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த விமானம், நடுவானில் மாயமானது. விமானத்தை தேடும் பணி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்தது.

கடந்த ஜூன் மாதம் தான்சானியா நாட்டின் கடலோரப்பகுதியான பெம்பா தீவுப்பகுதியில் சிதைவுப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நிலையில், தான்சானியா தீவுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சிதைவுப்பொருட்கள் எம்.எச் 370 விமானத்தினுடையதுதான் என்று மலேசியா உறுதி செய்துள்ளது.

அதேபோல், கடந்த 2015 ஆம் ஆண்டு பிரான்சின் ரியூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விமான சிதைவுப்பொருட்களும் எம்.எச்.370 விமானத்தினுடையதுதான் என்று விசாரணைக்குழுவினர் உறுதி செய்திருந்தது நினைவைருக்கலாம்.

0/Post a Comment/Comments

Previous News Next News
New Vision
New Vision