செய்தி கலவை



செய்தி கலவை



ஒரு நியாயமான அநியாயம்

தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்கவைக்க விரும்புவதில்லை...


தமிழ் இளைஞர்கள் யாரும் அரசு கலை கல்லூரிகளில் படிக்க விரும்புவதில்லை..


தமிழ் மக்கள் யாரும் மருத்துவ சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு செல்வதில்லை..


தமிழ் மக்கள் யாரும் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புவதில்லை..
ஆனால்
தமிழர்கள் அனைவரும் அரசு வேலைக்கு செல்ல விரும்புவது மட்டும் ஏன்?



கிழக்கு கடற்கரை சாலை ஒரு அழகிய ஆபத்து...
வயதுப்பெண்களுக்கான எச்சரிக்கை 


நீங்கள் சென்னையில்   வசிப்பவரா? உங்கள் வீட்டில் வயதுக்கு வந்த பெண் பிள்ளை இருந்தால் இந்த கட்டுரை உங்களுக்காகத்தான்...என் வீட்டு பெண் ஒரு போதும் நான் சொன்ன சொல்லை தட்டியது இல்லை...பொய் சொல்லிவிட்டு ஊர் சுற்றியதில்லை.... அப்ப பையனுக்கு இல்லையா? அவர்களுக்கும்தான்... ஆனால் மிக முக்கியமாக பெண்களுக்கு.... எங்க வீட்டு பசங்க..நான் கிழித்த கோட்டை தாண்டுவதே இல்லை... 

அவளுக்கு நான் என்றால் உசிர் என்று நீங்கள் உங்கள் பெண்ணை விட்டுகொடுக்காமல் இருந்தால்... சந்தோஷம்....ஆனால் நாடடில் நடப்பதை தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது அல்லவா? ஒருவேளை உங்கள் பெண் அப்பாவியாக இருந்தால் இந்த செய்தியை கதை போல் சொல்லி  அவளுக்கு விஷயத்தின் தீவிரத்தை புரிய வைப்பது நலம்....

நேற்று சென்னை மகாபலிபுரத்தில் உள்ள  லாட்ஜிகளில் நடந்த ரெய்டில்...25 காதலர்கள் பிடிபட்டு இருக்கின்றார்கள்...இதில் கள்ளகாதல்களும் அடக்கம்... போலிசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்து இருக்கின்றார்கள்...எனக்கு தெரிந்து என்னதான் எச்சரித்து அனுப்பி வைத்தாலும் நேற்று நல்ல கலெக்ஷன் பார்த்து இருக்ககூடும் என்பது என் கணிப்பு.....

உங்க மேல  விபச்சார வழக்கு போட போறேன்... நீங்க இரண்டு பேரும்  விபச்சாரம் செஞ்சிங்கனன்னு  உங்க மேல கேஸ்போட போறேன் என்று  ஒரு வார்த்தை சொன்னாலே.. போதும்  நிச்சயம் அடித்து பிடித்து பணத்தை ரெடி செய்து சொன்ன தொகையை கட்டி விட்டுதான்  அந்த ஜோடிகள் வந்து இருக்க முடியும்.... அல்லது நேர்மையாக  எச்சரித்து அனுப்பி இருக்கவும் வாய்ப்பு இருக்கின்றது...ஆது போல் நடக்க 2 சதவீதம் மட்டுமே வாய்ப்பு... 

5 வருடத்துக்கு முன் காதலர்கள் அதிகம் நாடுவது சென்னை பீச்...மற்றும் பெசன்ட் நகர் பீச், கிண்டி சிறுவர் பூங்கா  போன்றவைதான்..  சென்னையில் வாகன பெருக்கம் அதிகமானதால் காதலர்களும் இட்ம் மாற தொடங்கினர்.... இங்கு இருந்து 60 கீலோமீட்டர்... தெரிந்தவர்கள் யாரும் வர வாய்ப்பில்லை.. அதனால் மகாபலிபுரம் காதலர்களின்  வேடந்தாங்கல் ஆகி வெகு நாட்கள் ஆகின்றது....

இதில் கிழக்கு கடற்கரை சாலையில் பயணிக்கும்  போது தனிமையான சவுக்கு தோப்புகளில் இவர்கள் வாகனத்தை நிறுத்தி ரிப்பிரஷ் செய்து கொள்ள  தொப்பின் உள்ளே போகும் போது.. அதை பல ஜோடிகண்கள் நோட்டம இடுகின்றன....பல கடற்கரையோர கிராமத்து  வெட்டி இளைஞர்களின் காம பசிக்கு காதலன்  கண் முன்னே பல காதலிகள் இரையாவது தொடந்து நடந்து கொண்டு இருக்கும் ஆப் த ரெக்கார்ட் கொடுமை... 

ஒரு காதலன் இரண்டு மாதங்கள் மந்திரித்து விட்டது போல் இருக்க... அவனுக்கு புல்லாக தண்ணி ஏற்றி விட்டு விஷயத்தை கேட்க அழுதுக்கொண்டே தன் காதலி தன் கண்முன் கடற்கரை  ஓர சவுக்கு தோப்பில் நான்கு பேரால் வன்கொடுமைக்கு அவனது காதலி  உள்ளாக்கபட்டு இருக்கின்றார்...யோசித்து பாருங்கள்  அது எவ்வளவு கொடுமை என்று....இதில் ஹைலைட் ஆன விஷயம் என்னவென்றால்... அந்த   பெண்ணை சின்னா பின்ன படுத்தி விட்டு கடற்கரை மணலை அள்ளி அந்த பெண்ணின் பெண்உறுப்பில் கொட்டி விட்டு போயிருக்கின்றார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு வக்கரம் நிறைந்தவர்கள் என்று யோசித்து பாருங்கள்.... அதுமட்டும் அல்ல அந்த பெண் அணிந்து இருந்த நகைகளை பிடிங்கிகொண்டு அனுப்பி இருக்கின்றார்கள்...

இந்த சம்பவங்கள்  காவல் துறை கவனத்துக்கு வரவேயில்லை.... காதலி வீட்டில் வழிப்பறியில் நகைகள் விட்டதாக சொன்னாலும்... இன்னும் இவன் முகத்தில் அவள் விழிக்க மறுக்கின்றாளாம்... இது போல் கவுரவம் கருதி  வெளி வராத விஷயங்கள் நிறைய... அதுதான் அவர்கள் திரும்ப திரும்ப அந்த தப்பை பண்ண வைக்கின்றது... தெரியத்துக்கு வழி கோலுகின்றது..

தனியாக ஒருவனிடம்  ஒரு பெண்  மாட்டினால் கூட சேதம் குறைவாக இருக்கும்... அதுவே  நான்கு பேர் எனும் போது... அது உச்சகட்டத்தை அடைந்து விடும்..அவனை விட நான் ஏதாவது  புதுமை செய்கின்றேன் பார். என்று கும்பலில்.... தன்னை முன்னிலை படுத்த எதையும் செய்வார்கள்.. அவர்கள் குடி போதையில் இருந்து விட்டால்..... கேட்கவே வேண்டாம்...வக்ரம் எல்லை மீறும்....

நானும் என் மனைவியும் பாண்டிசேரிக்கு மாலை 5 மணிக்கு கிளம்பினோம்.. மயாஜாலை  எங்கள் வாகனம் கடக்கும் போது  மணி 5,45... அதிலிருந்து ஒரு 20 கிலோமீட்டரில் இது பக்கம் ஒரு சின்ன ஓய்வு இடத்தை சின்ன பார்க் போல செய்து வைத்து இருப்பார்கள்... அங்கிருந்து பார்க்கும் போது மிக ஆழகாக கடல் இருக்கும்.....

மகாபலிபுரம் அல்லது பாண்டிக்கு போகும் வாகனங்கள் அந்த இடத்தில் நிறுத்தி விட்டு இளைப்பாறி விட்டு, ஒரு டீ குடித்து விட்டு இயற்கை உபாதைகளை முடித்துக்கொண்டு செல்ல ஒரு அற்புதமான இடம்.... அதன் எதிரில் சுனாமி அலை தாக்காம்ல் இருக்க சவுக்கு நட்டு இருந்தார்கள்... அது  ஆளுயரத்துக்கு வளர்ந்து இருந்தது...6 மணி ஆகி இருட்டும் நேரத்தில் அந்த இடத்தில் இருந்து அங்கொன்றும் ,இங்கொன்றும் ஆக மனித தலைகள் தெரிய... சொன்னால் நம்ம மாட்டிர்கள்... ஒரு 50 ஜோடிகள் மேட்டை நோக்கி டிராய் படத்தில் வரும் கப்பல்கள் போல்  நடந்து வந்து கொண்டு இருந்தார்கள்....

காதலர்களாக பைக்கில் பறந்து... போக்குவரத்து போலிசாரிடம் மாட்டிக்கொண்டு... அவர்கள் கேள்வி மேல் கேள்வி கேக்க.... அழுதுக்கொண்டும், கதறிகொண்டும் இருக்கும்  பலரை அந்த பக்கம் கல்லூரிக்கு போகும் போது  பார்த்து இருக்கின்றேன்...

இவர்கள் எல்லாம் காதலர்களே அல்ல என்று நாம் ஒதுக்கி விட முடியாது...நாம் ஒன்று பத்து அடி தூரத்தில் இருந்து கொண்டு பிரான நாதா என்று வசனம் பேசும் காலத்தில் இல்லை.... பத்தாம்  வகுப்பு கிராமத்து பெண் கழிவரையில் பிள்ளை பெற்றுகொள்ளும் காலம் இது என்பதை மறவாதீர்கள்....

உங்கள்  வீடோ அல்லது எதிர் வீடோ யார் வீட்டு பெண்ணாக இருந்தாலும்... ஒரு செய்தியை சொல்வது போல் சொல்லி கிழக்கு கடற்கரை சாலையை பற்றி ஒரு எச்சரிக்கை மணியை அடித்து வைப்பது நல்லது....

கவுண்டமணி - செந்தில் ஜோக்

கவுண்டமணி:- (செந்தில் கன்னத்தில் 'பளார்' என்று அறைந்து...) ஏன்டா...என்னை பாத்து அந்த கேள்வி கேட்ட?

செந்தில்:- அண்ணே.. மன்னிச்சிடுங்க..

கவுண்டமணி:- என்னடா நொன்னே.. அது ஏன்டா என்னை பாத்து மட்டும் அந்த கேள்வி கேட்ட? இத்தனை பேர் இருக்காங்க கேக்க வேண்டியது தானே..?

செந்தில்:- தெரியாம கேட்டுட்டேன்னே..

கவுண்டமணி:- என்னை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு? என்னால தாங்க முடியலியே.. (மறுபடியும் 'பாளர்' என்று செந்தில் கன்னத்தில் அறைகிறார்)

ராமராஜன்:- ஏண்ணே.. சும்மா அவனை அடிச்சிட்டு இருக்கீங்க.. அப்படி என்ன தான் கேட்டான் அவன்..?

கவுண்டமணி:- என்ன கேட்டானா? ஊழல் பண்ணின ராஜாவா ஜெயில்ல வச்சிருக்காங்க..அவரு வச்சிருந்த கனிமொழியை இப்போ யாரு வச்சிருக்காங்கன்னு கேக்குறான்..

ராமராஜன்:- ?????????????????

கருணாநிதி : இந்த ஊர்ல ராஜா ராஜான்னு ஒரு மந்திரி இருந்தான் , அவன் என் மக "கனி மொழி" ய வச்சுருக்கன்னு ஒரே பேச்சு , இத கேட்டதும் நான் பயங்கர கோபமாகி , அவன் கிட்ட போய் "டேய் என் மக கனி மொழிய நீ வச்சுருக்கியா ? " அப்படின்னு கேட்டேன் ...... ஆனா அவன் ரொம்ப கூலா "ஸ்பெக்ட்ரம்" ஊழல்ல அடிச்ச "MONEY" ய நீ வச்சுக்க உன் மக "கனி" ய நான் வச்சுக்குறேன் அப்படின்னு சொன்னான் . BUT அந்த DEAL எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது.

தமிழ்நாட்டில் ஊடகங்களின் கேவலங்கள்

ஒரு சினிமா நடிகனுக்கு உடல் நலக்குறைவு என்றால், அவன் வாந்தி எடுத்தால் உங்களுக்கு ஏன் இத்தனை ஆர்பாட்டம்? ஒரு சினிமா நடிகன் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக உள்ள ஒருவரை சந்திக்கிறான் என்றால் நீங்கள் எல்லாம் ஏன் இப்படி கூப்பாடு போடுகிறீர்கள்? இவர்களைத்தவிர நாட்டில் வெறும் ஒன்றுமே நிகழ்வுகள் இல்லையா? ஒரு நடிகன் தன் ரசிகர் மன்றத்தை கலைதுவிட்டதாக கூறினால் அது மகா பெரிய செய்தி.  சினிமாகாரர்கள் என்ன விண்ணில் இருந்து இறங்கிவந்த தேவ தூதர்களா? அவர்கள் மனித பிறவிகள் இல்லையா?  ஆணும் பெண்ணும் கலவியில் இணைந்து இந்த சினிமா காரர்களை பிள்ளைகளாக பெற்றுஎடுக்க வில்லையா? இவர்கள் எல்லாம் என்ன சுயம்புவா? இவர்கள் சாகா வரம் பெற்றுவந்த சிரஞ்சீவிகளா?

ஒரு குறிப்பிட்ட நடிகனின் திரைப்படம் வெளிவர போகிறது என்றால் அதற்கு முன்பாகவே திட்டமிட்டு வித விதமான பரபரப்பு செய்திகளை வெளியிட்டு அந்த நடிகனை உச்சந்தலையில் வைத்து ஆடுவது ஏன்? காசு வரும் என்றால் எதையும் செய்வீர்களா? வடக்கில் ஆங்கில தினசரிகளும், தொலைக்காட்சிகளும் மக்களுக்கு செய்யும் அதே கேடு கெட்ட வியாபார யுக்திகளை அப்படியே இந்த தெற்கு பகுதி ஊடகங்களும் பத்திரிகையும், தொலைக்காட்சிகளும் கொஞ்சமாம் மாறாமல் காப்பி அடித்து காசாக்கி மக்களை சுரண்டி பிழைகின்றீகளே ! இதில் தாங்கவொணாத பெருமைவேறு உங்களுக்கு!  
ஹைடெக் சாமியார்களையும், ஹைடெக் விபசாரிகளையும் கொண்டாடி அவர்களை வளர்த்துவிடும் அனைத்து பத்திரிக்கை, தொலைகாட்சி ஊடங்களே! நீங்கள் மக்களுக்கு என்ன தருகிறீர்கள் என்பதில் கவனம் வேண்டாமா? உங்கள் சரக்கை அவர்களிடம் காசுக்கு விற்கும் நீங்கள், அவர்கள் உங்கள் சரக்கை என்றுமே வாங்கி அவைகளுக்கு மட்டும் அடிமையாக வேண்டும் என்ற எண்ணம் இன்றி வேறு நல்ல நோக்கம் உண்டா உங்களுக்கு?  
ஒரு திரைப்படம் வெளிவருகிறது என்றால் சில தினங்களுக்கு முன்பு அந்த படத்தின் போஸ்டர்கள் அச்சடிக்கப்பட்டு விளம்பரங்களாக வருவது இயல்பு. ஆனால் இப்போது வரும் படங்களுக்கு விளம்பர போஸ்டர் வெளியிடுவதே ஏதோ ஒரு நாட்டின் தேசிய விழா போல அல்லவா நடத்துகிறீர்கள்? இது வியாபார யுக்தியாம். . வரிந்து வரிந்து சினிமாகாரர்களை பற்றி போற்றி எழுதி எழுதி அவர்களுக்கு " கூஜா " தூக்கும் அல்பங்களும் இங்கு நிறைய இருக்கிறர்கள்.

தமிழ்நாட்டில் இன்று நான்காவது தூண் என்று அழைக்கப் படும் பத்திரிக்கை உலகம் எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியுமா ? 



சவுக்குக்கு கிடைத்துள்ள பிரத்யேக தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. 2006ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழக பத்திரிக்கை உலகில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 


பத்திரிக்கைகளின் கருத்துக்களை மிகுந்த கவனத்தோடு பரிசீலித்தும், தன்னையே ஒரு பத்திரிக்கையாளர் என்று அழைத்துக் கொள்ளும் கருணாநிதி, ஏறக்குறைய அனைத்து பத்திரிக்கைகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் நாட்டில் வெளிரும் ஆங்கில பத்திரிக்கைகள் நான்கு. தி ஹிந்து, டெக்கான் க்ரானிக்கிள், டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.

இந்த பத்திரிக்கைகளில் தி ஹிந்து, முரசொலியின் ஆங்கிலப் பதிப்பாக மாறி, பல ஆண்டுகள் ஆகின்றன. 



இதற்கு குறிப்பான காரணம், 2003ம் ஆண்டில் ஹிந்து நாளிதழ் எழுதிய தலையங்கம், தமிழக சட்டசபையின் உரிமை மீறியதாக ஆணையிட்டு, அப்போதைய சபாநாயகர் காளிமுத்து, ஹிந்து நாளேட்டின் ஆசிரியர் மற்றும் உரிமையாளர் மற்றும், அந்த தலையங்கத்தை மொழி பெயர்த்து வெளியிட்ட முரசொலியின் நிர்வாகிகளையும் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதையொட்டி, அப்போது ஜெயலலிதாவுக்கு மிகுந்த விசுவாசமாக இருந்த காவல்துறை, உடனடியாக ராம், முரளி உள்ளிட்ட ஹிந்து நிர்வாகிகளை கைது செய்ய முனைந்தது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, முன் பிணை பெற்றவுடன், அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது. இந்த சம்பவத்தின் பின்னணியில், ஜெயலலிதா மீது கடும் கோபம் கொண்ட ஹிந்து குழுமம், அந்நாள் முதல், ஹிந்து பத்திரிக்கை, பத்திரிக்கை தர்மத்தை மறந்து, கருணாநிதியின் ஊதுகுழல்களில் ஒன்றாக ஆனது.

இந்நாளேடு, ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி எவ்வாறு செய்தி வெளியிட்டது என்பதும், இதற்காக, ஹிந்து ராமுக்கு இலங்கை அரசு லங்கா ரத்னா விருது வழங்கி கவுரவித்ததும் வரலாறு.



அடுத்து டெக்கான் க்ரானிக்கிள் நாளேடு. இந்நாளேடு, ஓரளவுக்கு நியாயமாக, பொதுமக்களின் பிரச்சினைகளையும், அரசின் தவறுகளையும் சுட்டிக்காட்டும் பத்திரிக்கையாகத்தான் இருந்து வந்தது. 2008 ஏப்ரல் 14 அன்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டின் சென்னை பதிப்பு வெளிவந்தது. இந்நாளில், டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டை விட வியாபார ரீதியில் பிரபலமாக வேண்டும் என்ற உந்துதலில், முன்னாள் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி,ஐஏஎஸ் மற்றும் முன்னாள் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் எஸ்.கே.உபாத்யாய் ஆகிய இருவருக்கிடையே நடைபெற்ற உரையாடலை வெளியிட்டது.


இந்த உரையாடல் வெளியாகி, சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பரபரப்பை ஒட்டி, டெக்கான் க்ரானிக்கிள் நாளேட்டின் சர்குலேஷன் பன்மடங்கு கூடியது. ஆனால், அந்த புகழுக்கு இந்த நாளேடு அளித்த விலை மிக அதிகம்.

முதலில், இந்நாளேட்டின் அலுவலகத்தை காவல்துறையை விட்டு சோதனை செய்து, எடிட்டரை கைது செய்யத் உத்தேசித்திருந்த கருணாநிதி, பத்திரிக்கைகளின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்று சமயோசிதமாக யோசித்து, டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழுக்கு அரசு விளம்பரங்களை நிறுத்தினார். அரசு விளம்பரத்தை நிறுத்தினால், ஒரு செய்தித் தாள், தள்ளாடி தடுமாறும் என்பதை அறிந்த கருணாநிதி இவ்வாறு செய்தார். அதைப் போலவே, அந்நாளேடு தள்ளாடத் தொடங்கியது. விளம்பரத்தை நிறுத்தினால், ஒரு நாளுக்கு ஒரு செய்தித் தாளுக்கு ஏற்படும் நஷ்டம் என்ன தெரியுமா ? 



டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழின் விளம்பரப் பலகை

குறைந்தது ரூபாய் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை. ஒரு நாளைக்கு 5 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுவதை உலகத்தில் எந்த முதலாளி பொறுத்துக் கொள்வான் ? உலகில் உள்ள அத்தனை முதலாளிகளின் நோக்கமும் மூன்று விஷயங்கள் மட்டும் தான்.

1) லாபம்
2) லாபம்
3) லாபம்

இந்த லாபத்துக்காகத்தான் முதலாளிகள் தொழிலில் இறங்குகிறார்கள். அந்த லாபம் அடிபடத் தொடங்கினால் ? அரசின் காலில் முதலாளி மண்டியிடுவான். அதுதான் டெக்கான் க்ரானிக்கிள் நாளேட்டின் கதையிலும் நடந்தது. உபாத்யாய் திரிபாதி தொலைபேசி உரையாடலை வெளியிட்ட டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழின் மூத்த நிருபர் வி.பி.ரகு, அநேகமாக வேலையை விட்டு டிஸ்மிஸ் ஆகும் நிலைக்கு தள்ளப் பட்டார். 


டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழின் விளம்பரப் பலகை

பிறகு, அரசோடு சமாதானம் ஆனபின் அரசுக்கு எதிராக செய்திகள் வருவது, ஏறக்குறைய நிறுத்தப் படும் என்ற உடன்பாட்டுக்குப் பிறகு, டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழுக்கு மீண்டும் அரசு விளம்பரங்கள் வழங்கப் பட்டன.

உடன்பாட்டுக்கு ஏற்ப, டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழும், அரசை வெகுவாகச் சாடாமல் இப்படியும் இல்லாமல், அப்படியும் இல்லாமல் தனது லாபத்துக்கு குறைவு ஏற்படாமல் இன்று செயல்பட்டுக் கொண்டு வருகிறது.

அடுத்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ். இந்த நாளிதழ், எப்பொழுதுமே முதலாளிகள் மற்றும் முதலாளி வர்க்க சார்போடுதான் இருந்து வந்திருக்கிறது. 



ஒரு பத்து பேர், உணவில்லாமல் பட்டினியால் சாக நேரிடும் ஒரு செய்தியையும், இந்திய அரசின் பொருளாதார கொள்கையால், பெரும் நிறுவனங்களுக்கு லாபத்தில் குறைவு ஏற்படும் ஒரு செய்தியையும் ஒப்பிட்டால், லாபத்தில் ஏற்படும், குறைபாட்டைத் தான் இந்நாளேடு பெரிதாக வெளியிடும்.

இது போல, தன்னுடைய முதலாளித்துவச் சார்பை சமன் செய்வதற்காக அவ்வப்பொழுது இங்கும் அங்கும் ஒரு ஏழையின் கஷ்டத்தை பற்றிச் செய்தி வெளியிட்டு நடுநிலையான நாளேடு போல காட்டிக் கொள்ளும். இந்நாளேட்டின் உரிமையாளர், இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிறுவனத்தின் இந்தியா டைம்ஸ் இணையத் தளம், டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அனைத்திலும், இந்த முதலாளித்துவச் சார்பை காணலாம். இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில் அதிகம் பேர் விரும்பிப் பார்க்கும், கவர்ச்சிப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.

எஞ்சியுள்ளது, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு மட்டுமே. இந்நாளேடாவது நடுநிலையாக இருக்குமென்றால் இல்லை. 



எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதாவை விமர்சித்து வரும் செய்திகளை பூதக்கண்ணாடி வைத்தாலும் காண முடியாது. சரி, ஆளுங்கட்சியை எதிர்ப்பதுதான், உண்மையான பத்திரிக்கை தர்மம் என்று வைத்துக் கொண்டாலும் கூட, சமீப காலமாக, இப்பத்திரிக்கையில், அரசுக்கு எதிராக வரும் செய்திகள் குறைந்த வண்ணம் உள்ளன.

பத்திரிக்கை உலகில் விபரம் அறிந்தவர்கள், எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முதலாளி, கருணாநிதியை வெகு சமீபத்தில் சந்தித்ததாகவும், அச்சந்திப்பின் போது, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் கருணாநிதி குடும்பத்தையும், கருணாநிதியையும், விமரிசித்து, தலையங்கப் பகுதிக்கு அருகில் வரும் கட்டுரைகள் மிகக் கடுமையாக இருப்பதாகவும், கருணாநிதி அங்கலாய்த்ததாக கூறப் படுகிறது.

இந்த அங்கலாய்ப்பின் விளைவாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் அரசுக்கு எதிரான செய்திகளை குறைத்துக் கொள்ள எக்ஸ்பிரஸ் குழுமம் முடிவெடுத்திருப்பதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் உள்ள நான்கு ஆங்கிலப் பத்திரிக்கைகளும் கருணாநிதியின் பிடியில் வந்து விட்டதல்லவா ? அடுத்து தமிழ் தினசரிகளைப் பார்ப்போம். 



தினமணி நாளேட்டின் தலையங்கங்கள் கடுமையான விமர்சனத்தை தாங்கி வந்தன. கருணாநிதி அரசின் அயோக்கியத்தனங்களை தினமணி தொடர்ந்து சாடியே வந்துள்ளது.

இவ்வாறு கடும் விமர்சனங்களை அடக்கிய தலையங்கம் வந்தபோதெல்லாம் அந்நாளேட்டின் ஆசிரியரை, பார்ப்பனர் என்றும், காதில் கேட்கக் கூசும் வார்த்தைகளால், காலை 6 மணி முதல் 8 மணி வரை கருணாநிதி அர்ச்சனை செய்வதுண்டு என்று, இந்த அர்ச்சனைகளை காதில் கேட்டவர்கள் கூறுகிறார்கள்.

இப்படியெல்லாம் அர்ச்சனை செய்தாலும், கருணாநிதியை பாராட்டி வரும் செய்திகளை “தினமணி நாளேடே கூறியுள்ளது“ என்று அதை எடுத்து முரசொலியில் பெரிய செய்தியாக வெளியிட கருணாநிதி தயங்கும் அளவுக்கு அவருக்கு சுயமரியாதை இல்லை.
 



பச்சை நிறத்தில் இல்லையே ஒழிய, கருணாநிதிக்கு பச்சோந்திக்கு உண்டான அத்தனை குணநலன்களும் உண்டு. கடந்த ஆண்டு கருணாநிதி பிறந்தநாளின் போது அவரை வாழ்த்தி தினமணி எழுதிய தலையங்கத்தை, கருணாநிதி விழா மேடையில் ஒரு வரி விடாமல் படித்தது குறிப்பிடத் தகுந்தது.

தலையங்கங்களைத் தவிர, தினமணியில் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டிய விஷயம், நடுப்பக்கத்தில் வரும் கட்டுரைகள். 


பழ.கருப்பையா

கட்டுரையாசிரியர் பழ.கருப்பையாவைத் தவிர அக்கட்டுரைகளில் கருணாநிதியை கடுமையாக விமரிசனம் செய்வது அரிதிலும் அரிதான விஷயம். எக்ஸ்பிரஸ் குழுமத்திற்கும் அரசிற்கும் ஏற்பட்ட உடன் பாட்டின் விளைவுகள், அக்குழுமத்திலேயே இருக்கும் தினமணியை மட்டும் பாதிக்காதா என்ன ? 

அதன் விளைவு, சமீப காலமாக பழ.கருப்பையா காணாமல் போய் விட்டார். நேற்று எழுதிய கட்டுரையில் கூட, ஏசு பிரானைப் பற்றித் தான் பழ.கருப்பையா எழுதியிருக்கிறார். தினமணியின் தலையங்கங்கள் கூட, தமிழக அரசை தொடாமல், இந்தியாவின் மற்ற மாநிலங்களைச் சுற்றி வருகின்றன. 

கருணாநிதிக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்த தினமணியை ஒரு வழியாக சரிக்கட்டியாகி விட்டது.

அடுத்து கருணாநிதியை தொடர்ந்து விமர்சித்து, தொல்லை கொடுத்து வந்த ஒரு நாளிதழ் தினமலர். 

முதலில், தினமலர் குழுமத்தில் ஏற்பட்ட குடும்பச் சண்டையை தனது உளவுத் துறை மூலம் பெரிதாக்கி அந்நெருப்பில் குளிர் காய்ந்தார் கருணாநிதி. 


அதற்குப் பிறகும் சென்னை தினமலரின் விமர்சனங்கள் குறையாததால், சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார் பனங்காட்டு நரியான கருணாநிதி. அருமையான சந்தர்ப்பத்தை தினமலர் நாளேடே ஏற்படுத்திக் கொடுத்தது. 

ஊரில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் பற்றி எழுதிக் கிழித்து விட்டது போல, தமிழ் திரைப்படங்களின் முன்னாள் கதாநாயகிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்று, சில முன்னாள் முன்னணி நடிகைகளின் புகைப்படத்தோடு செய்தி வெளியிட்டது தினமலர். 


சர்ச்சைக்குரிய தினமலர் செய்தி

உண்மையிலேயே அந்நடிகைகள் பாலியல் தொழில் செய்தார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, அதனால் யாருடைய சோற்றில் மண் விழுந்தது ? ஆனால், இதை ஒரு மிகப் பெரிய சமுதாய பிரச்சினையாக்கி பெரிய அளவில் செய்தி வெளியிட்டிருந்தது தினமலர். 

நடிகர் சங்கத்தின் போராட்ட அறிவிப்பு

“மயிர் நீக்கின் உயிர் வாழா கவரிமான்“ குடும்பத்தைச் சேர்ந்தவர்களான திரைத் துறையினர் மிகப்பெரிய கூத்தை போராட்டம் என்ற பெயரில் நடத்தினார்கள்.

அவ்வளவுதான் கருணாநிதிக்கு வந்ததே கோபம் !

தமிழகத்தின் அத்தனை பிரச்சினைகளும் தீர்ந்து விட்டது போலவும், இனி தீர்க்க வேறு பிரச்சினைகளே இல்லை என்பது போலவும், உடனடியாக “பெண்களுக்கெதிரான வன்கொடுமை சட்டத்தின்“ கீழ் காவல்துறையை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இங்கேதான் இருக்கிறது கருணாநிதியின் தந்திரம்.

சட்டத்தின் படி, அவதூறான செய்தி வெளியிடும் பத்திரிக்கையின் ஆசிரியரும், பதிப்பாளரும் (முதலாளி) தான் வழக்கமாக கைது செய்யப் படுவார்கள்.

ஆனால், தினமலர் முதலாளிகளோடு, ஒரு “கள்ள ஒப்பந்தத்தை“ கருணாநிதி செய்து கொண்டு அந்நாளேட்டின் செய்தி ஆசிரியர் லெனினை காவல்துறையை வைத்து கைது செய்தார் கருணாநிதி. 


தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யப் படுகையில்

தினமலர் நிர்வாகமும், சந்தோஷமாக லெனினை காவல்துறையோடு அனுப்பி வைத்தது.

பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் கைதேர்ந்த கபட வேடதாரி கருணாநிதி, லெனின் கைதால் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பை சமாளிக்க, லெனின் பிணை மனுவுக்கு நீதிமன்றத்தில் அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க உத்தரவிட்டார்.

மறுநாளே லெனின் சிறையிலிருந்து வெளியே வந்தார். முதலாளியை கைது செய்யாமல் செய்தி ஆசிரியரை கைது செய்ததற்கு நன்றியாக தினமலர், இன்று தனது அரசு எதிர்ப்பு செய்திகளை ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு மற்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

வழக்கமாக, காரசாரமாக, அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தினரைப் பற்றிய செய்திகளை தாங்கி வரும் தினமலரின் “டீக்கடை பென்ச்“ பகுதி கூட, உப்புச் சப்பில்லாமல் வருகிறது.

தமிழகத்தின் மிகப் பெரிய நாளிதழான தினத்தந்தியைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. 



20 பேர் இறந்த விபத்துச் செய்தியை சின்னதாக போட்டு விட்டு, நடிகையின் உள்பாவாடை காணாமல் போன செய்தியை தலைப்புச் செய்தியாக போடும் நாளிதழ்.

இதற்கு, மக்கள் நடிகையின் உள்பாவாடை பற்றித் தான் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்ற வியாக்கியானம் வேறு.

எப்போதும் தினத்தந்தி ஒரு கட்சி சார்பாகவே இருந்து வந்திருக்கிறது. அதிசயிக்காதீர்கள். அந்த ஒரு கட்சி வேறு எந்தக் கட்சியும் அல்ல. “ஆளும் கட்சி“தான் அது.

அடுத்து எஞ்சியிருப்பது, தினகரன் தான். குடும்பம் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, தினகரன் நிருபர்கள் அரசுக்கு எதிரான செய்திகளுக்காக ஆலாய்ப் பறப்பார்கள். 

குடும்பம் ஒன்று சேர்ந்ததும், அரசுக்கெதிரான செய்திகள் அடியில் போடப்பட்டு, கருணாநிதியின் அறிக்கைகளும், பாராட்டுகளும் முதல் பக்கத்தில் வருகின்றன.

இதில் ஜெயலலிதாவின் அறிக்கைகளை சின்னதாக வெளியிட்டு நடுநிலையாக இருப்பதாக வேறு காட்டிக் கொள்கிறார்கள். குடும்பம் சண்டையில் இருந்த காலத்தில், தினகரன் நாளேடு, அரசு விளம்பரம் வருவதில்லை என்று, நீதிமன்றம் சென்றதை நினைவில் கொள்ள வேண்டும்.

எவ்வளவுதான் பணம் கொட்டிக் கிடந்தாலும், சன் டிவி குழுமத்தின் வருமானம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டினாலும், விளம்பர வருமானம் குறைந்தவுடன் நீதிமன்றம் செல்லும் பத்திரிக்கை முதலாளிகளின் கவலையை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் தமிழ் ஓசை நாளேட்டை, டாக்டர் ராமதாஸ், ஜி.கே.மணி தவிர ஒருவரும் படிப்பதில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. அன்புமணி ராமதாஸ் கூட ஹிந்து தான் படிக்கிறாராம்.

இதைத் தவிர சொல்லிக் கொள்ளும் படி ஒரு நாளிதழும் இல்லை.

வாரம் இருமுறை இதழ்களை எடுத்துக் கொண்டால், நக்கீரனை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். 



ஜெயலலிதா அரசாங்கத்தில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டதால், நக்கீரன் பத்திரிக்கையில் ஆசிரியர் நக்கீரன் கோபால் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு ஜெயலலிதா மீது ஏற்பட்ட வெறுப்பு ஜெயலலிதாவை ஹிட்லர், முசோலினி போன்ற ஒரு கொடுங்கோலர் போலவும், கருணாநிதியை ஏசு பிரான் போலவும் எண்ண வைத்தது.

இதன் விளைவு, நக்கீரன் அறிவாலயத்தில் அச்சடிக்கப் படுவது போலவே செய்திகளைத் தாங்கி வருகிறது. மேலும், இப்பத்திரிக்கை, உளவுத் துறையின் ஒரு மூத்த அதிகாரியின் பிடியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இப்பத்திரிக்கையின் இணை ஆசிரியராக இருக்கும் காமராஜ், கருணாநிதிக்கு மிக மிக நெருக்கமாக உள்ளதால், கருணாநிதியின் எண்ணங்களே நக்கீரனில் செய்தியாக வருவதாக கூறப்படுகிறது.

ஈழப் போரின் போது ஈழச் செய்திகளை வெளியிட்டு கொள்ளை லாபம் பார்த்த நக்கீரன், தற்போழுது, ஈழப் போரை வழிநடத்தியவர் போலவும், பிரபாகரனுக்கே போர் முறைகளை கற்றுக் கொடுத்தவர் போலவும் பேசி வரும், போலிச் சாமியார் ஜெகத் கஸ்பர் எழுதும் தொடரை வெளியிட்டு வருகையிலேயே நக்கீரனின் அருமை புரியும்.

அடுத்து ஜுனியர் விகடன். மக்கள் மத்தியில் ஒரு நற்பெயரை பெற்றிருந்த இந்த இதழ், காவல்துறை அதிகாரிகளின் பிடியில் சிக்கி, நடுநிலையான பத்திரிக்கை என்ற பெயரை ஏறக்குறைய இழந்து நிற்கிறது. 



குறிப்பாக, காவல்துறை அதிகாரிகளின் ஊழல்களை தைரியமாக அம்பலப்படுத்தி வந்த இந்த இதழ், தற்போது, காவல்துறை அதிகாரிகளின் புகழ் பாடும் பத்திரிக்கையாக உருமாற்றம் பெற்றுள்ளது.

மேலும், விகடன் குழுமம் திரைப்படத் தயாரிப்பில் இறங்கத் தொடங்கியதும், பத்திரிக்கையை விட, திரைப்படத்தில் இக்குழுமத்தின் முதலாளிகள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சினிமா என்ற மாய உலகம் காட்டிய கவர்ச்சியில் இக்குழுமத்தின் மேல்மட்ட நிர்வாகிகள் மயங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில ஆண்டுகளாக செக்ஸ் கதைகளை வெளியிடாமல் இருந்த ஜுனியர் விகடன், சமீப காலமாக செக்ஸ் கதைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஜுனியர் விகடன் புண்ணியத்தில், காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதனின் நீலப்படம் இல்லாத செல்போனே தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.


இலங்கை சென்று, ராஜபக்ஷேவுடன் கைகுலுக்கி, சிரித்துப் பேசி, விருந்துண்டு, பரிசுகள் அளித்து, பெற்று, இந்தியா திரும்பியுள்ள திருமாவளவனை வைத்து “முள்வலி“ என்ற தலைப்பில் கம்பி வேலிக்குள் அடைபட்டுக் கிடக்கும் ஈழத் தமிழர்களை பற்றி எழுத வைத்து, ஈழத் தமிழருக்காக இன்னும் மிச்சம் உள்ள இரக்கத்தை வியாபாரம் செய்து லாபம் பார்த்து வருகிறது இந்த இதழ்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது “வேட்பாளர் தம்பட்டம்“ என்ற தலைப்பில் விளம்பரங்கள் வெளியிட்டு, ஜுனியர் விகடன் கொள்ளை லாபம் பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு பக்க விளம்பரத்துக்காக, இரண்டு லட்சம் என்று விலை பேசி, மார்க்கெடிங் செய்ய அனைத்து அரசியல் கட்சிகளிடமும், வேட்பாளர்களிடமும், ஜுனியர் விகடன் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த வாரம் இருமுறை இதழ், “குமுதம் ரிப்போர்ட்டர்“. இந்த பத்திரிக்கை அரசு, அரசியல் செய்திகள் என்றெல்லாம் ரொம்பவும் மெனக்கிடுவதில்லை. 


எல்லா பத்திரிக்கைகளின் குறிக்கோளும் லாபம் என்றாலும், குமுதம் ரிப்போர்ட்டரின் குறிக்கோள், எப்படியாவது லாபம் என்பதுதான். இப்பத்திரிக்கை எப்போதும் கையாளும் ஒரு முக்கிய தந்திரம் “செக்ஸ்“.

செக்ஸ் தொடர்பாக எந்த செய்தி இருந்தாலும் அதை அட்டையில் போட்டு, அந்த இதழுக்கு கூடுதலாக 4 அல்லது 5 லட்ச ரூபாய் லாபம் பார்ப்பதுதான் இந்த இதழுக்கு வழக்கம்.

“பள்ளி மாணவிகளிடம் உலவும் செக்ஸ் வீடியோ“, “டேட்டிங் செய்யும் இளசுகள் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்“, “பெருகி வரும் கள்ள உறவுகள்“ “செக்ஸ் வீடியோவில் மாட்டிய எம்.எல்.ஏ“ செக்ஸ் படம் காட்டும் இணையத் தளங்கள்“ “மீண்டும் சரோஜாதேவி கதைகள் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்” என்ற ரீதியில் தான் இந்த இதழின் தலைப்புச் செய்திகள் இருக்கும்.

ஒரு வாரத்துக்கு செக்ஸ் செய்தி கிடைக்க வில்லை என்றால் “நான் ஸ்டாலினுக்கு போட்டியா ? அழகிரி அதிர்ச்சிப் பேட்டி“ அல்லது “நான் யாருக்கும் இளைத்தவன் இல்லை – விஜயகாந்த் உற்சாகப் பேட்டி“ என்று இதழை ஓட்டி விடுவார்கள்.

இது தவிர, இந்நிறுவனத்தின் முதலாளியின் 1500 ஏக்கர் நிலம் சென்னையை அடுத்து இருப்பதாகவும், இந்நிலத்தை, காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் மேற்பார்வை செய்து பிரச்சினைகள் ஏதும் வராமல் பார்த்துக் கொள்வதாகவும், இதனால், அந்த அதிகாரி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் குறித்த செய்திகள் எதுவும் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வரும் வார இதழ் “தமிழன் எக்ஸ்பிரஸ்“. இந்த இதழை டீக்கடையில் போண்டா மடிப்பதற்குக் கூட பயன் படுத்துவதில்லை என்று கூறப் படுகிறது. 



வருமான வரியில் நஷ்டம் காட்டுவதற்காகத்தான் இந்த இதழை எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஞ்சியுள்ளது, வெளிவந்து ஒரு வருடம் ஆன “தமிழக அரசியல்“ வார இதழ். அரசுக்கு எதிரான செய்திகள் ஓரளவுக்கு வந்தாலும் விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு இந்த இதழ் செயல்படுகிறதா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. 



இந்த இதழில் வெளிவரும் செய்திகள் அரசின் மீது விமரிசனம் செய்யும் தொனியில் இருந்தாலும் துணை முதல்வருக்கு, ஏறக்குறைய சாமரம் வீசும் வகையில் தான் இருக்கிறது. சமீபத்தில் ஸ்டாலின் பற்றி வெளிவந்த ஒரு கட்டுரையில், ஸ்டாலினுக்கு பக்குவம் போதாது என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

எதற்காக என்றால், ஒரு அதிகாரி ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் ஊழல் இருந்தது என்று குறிப்பிட்டாராம். உடனடியாக ஸ்டாலின் விசாரணைக்கு உத்தரவிட்டாராம். உடனடியாக இன்னொரு அதிகாரி பதறிப்போய், இந்த விஷயத்துக்கு ஒப்புதல் கொடுத்தது முதல்வர் கருணாநிதிதான், விசாரணை நடந்தால் அது அரசின் மீதே திரும்பும் என்பதால் விசாரணை வேண்டாம் என்று கூறினாராம்.

இது போல, ஒரு ஊழல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டதால் ஸ்டாலினுக்கு பக்குவம் இல்லை என்று குறிப்பிடப் பட்டிருந்தது. ஊழல்களை மூடி மறைக்க ஸ்டாலின் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை என்றுதானே பொருள் ? ஒரு வேளை எப்படியும் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான்.

இப்போதே ஸ்டாலினுக்கு ஜால்ரா போட ஆரம்பித்து நாளை ஸ்டாலின் முதல்வரானால், நாங்கள்தான் உங்களை முதல்வர் ஆக்க உத்தரவிட்டோம், அதனால் வாரம் 20 பக்கத்துக்கு அரசு விளம்பரம் தாருங்கள் என்று கேட்கலாமென, தமிழக அரசியல் நிர்வாகம் திட்டமிட்டுருக்கிறதோ என்ற சந்தேகம் இருக்கிறது.

இது போகவும், தமிழக அரசியல் நிர்வாகமும், தமிழக அரசியல் தவிர, திரிசக்தி என்ற ஆன்மீக பத்திரிக்கை, திரைப்படத் தயாரிப்பு என்று பல தொழில்கள் செய்து வருவதால் தமிழக அரசியல் பத்திரிக்கையை சீரியசாக நடத்துவது போலத் தெரியவில்லை.

முக்கிய அரசியல் பத்திரிக்கைகள் அனைத்தையும் பார்த்தாயிற்று. மற்ற வார, மாத இதழ்களுக்கு, அரசியல் ஒரு சிறு பகுதிதான் என்பதால், கருணாநிதி இவைகளை கண்டு கொள்வதில்லை.

தொலைக்காட்சி ஊடகங்கள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை விளக்கத் தேவையில்லை. தொலைக்காட்சியில் வரும் செய்திகளையும் மக்கள் அப்படியே உண்மை என்று நம்பும் காலம் மலையேறி விட்டது. பின்னே, விஜயின் வேட்டைக்காரன் படத்துக்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது என்று சன் நியூஸில் அரை மணிக்கொரு முறை சொன்னால், மக்கள் சிரிக்க மாட்டார்கள் ?

பெரும்பாலான தொலைக்காட்சிகள் அரசியல் கட்சிகளின் பின்னணியில் இயங்குவதால், அவற்றில் உண்மை செய்திகளை காண்பது கடினமாக இருக்கிறது.

இந்நிலையில், ஒரு ஜனநாயகத்துக்கு, சுதந்திரமான பத்திரிக்கைகள் எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் அறிவோம். சுதந்திரமான பத்திரிக்கைகள் இல்லையென்றால், ஹிட்லரின் தளபதி, கோயபல்ஸ் பத்து முறை ஒரு பொய்யைச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்று கூறியது, இப்பொழுது இருக்கும் பத்திரிக்கைளால் நடைமுறைக்கு வந்து விடும்.

சரி. ஆட்சி சிறப்பாக நடக்கிறது. விமர்சனங்களே அவசியம் இல்லை என்றால் அதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

சிறப்பாக நடக்கும் ஆட்சி கூட, தவறுகள் இழைக்கக் கூடும். அந்தத் தவறுகளை சுட்டிக் காட்டி, அந்த ஆட்சியை மேலும் சிறப்பாக நடத்த பத்திரிக்கைகள் அவசியம்.

அப்படிப்பட்ட சுதந்திரமான பத்திரிக்கைகள் இல்லாது போனால் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலை உருவாகும். ஜனநாயகம் என்பது, தானாக வாடி, வதங்கி, உதிர்ந்து விடும்.

தமிழ்நாட்டில், பத்திரிக்கைகள் ஏற்படுத்தியுள்ள இந்த வெற்றிடத்தை இட்டு நிரப்பும் திறன், பதிவர்களுக்கு மட்டுமே உள்ளது. இந்த பதிவுலகம் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. இங்கே எழுத்துச் சுதந்திரம் உண்டு.

நியாயமாக எழுதினால், நம்மை வேலையை விட்டு அனுப்பி விடும் முதலாளியும் இல்லை, அரசுக்கு எதிராக எழுதினால், விளம்பரம் வராதே என்று கவலைப்படும் வியாபார நெருக்கடியும் இல்லை.

நமது பதிவுலகத்தில் பெரும்பாலான பதிவுகள் செய்தித் தாள்களில் வருபவற்றை மறு பதிவு செய்பவையாகவும், சினிமா செய்திகளை பெரிது படுத்துவதாகவும் உள்ளன.

இப்பதிவுலகத்தை, இந்த அரசில் ஏற்பட்டு வரும் ஊழல்களை வெளிக் கொணர சுதந்திரமான ஒரு தளமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அரசு இயந்திரத்தின் முக்கிய பகுதியாக இருக்கும் அரசு ஊழியர்களே !. அரசுத் துறைகளில் நடக்கும் ஊழலில், புறங்கையை நக்காமல், ஊழலை எதிர்க்க திராணியும் இல்லாமல் வெளியே சொல்ல இயலாமல் புழுங்கிக் கொண்டிருக்கும் போராளிகளே.

உங்களுக்குத் தெரிந்த ஊழல்களை, இந்த பதிவுலகத்தில் வெளியிடுங்கள்.
முக்கிய செய்திகளை ஆசிரியருக்கு அனுப்பி, அது பிரசுரமாகாததால் மனம் புழுங்கும் பத்திரிக்கையாளர்களே. பதிவுலகிற்கு வாருங்கள்.

பதிவர்களே சீரியசான பதிவுகளை எழுதுங்கள். மக்கள் பிரச்சினைகளை எழுதுங்கள். இந்தப் பத்திரிக்கைகள் செய்யத் தவறுவதை நாம் செய்வோம்.

இது அற்புதமான உலகம். நமது ஜனநாயகத்தை, நமது குழந்தைகளுக்கு பத்திரமாக விட்டுச் செல்லும் பொறுப்பு நமக்கு உண்டு. அந்தப் பொறுப்பை தவற விட்டால், நம் கண் முன்னே, இந்த ஜனநாயகம் செத்து மடிவதை காணும் கொடுமைக்கு ஆளாவோம்.


மத்திய அரசு நுழைவு தேர்வுகளை தமிழுலும் நடத்த கோரிக்கை

உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான, ஐம்பெருங் காப்பியங்கள் மலர்ந்த, இலக்கிய மற்றும் இலக்கண வளம் பொருந்திய மொழியாகிய நம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் நீங்கள் உயர்கல்வி பயின்று வருவது மிகவும் பெருமைக்குரியதாகும். தாய் மொழியில் கல்விக் கற்பவர்களே நல்ல சிந்திக்கும் ஆற்றலோடும், புதியப் படைப்புகளை உருவாக்கும் திறன் பெற்றவர்களாக உருவாக முடியும் என்பதை பல அறிஞர்கள் நெடுங் காலமாகக் கூறி வருகின்றார்கள். இதை மெய்ப்பிக்கும் வகையில் வளர்ந்த நாடுகள் கல்வியினைத் தங்கள் தாய் மொழியிலேயே பயிற்றுவித்து வருகிறார்கள் (எ.காஅமெரிக்காஇங்கிலாந்து, பிரான்சு, செர்மனி, ஸ்பெயின், இத்தாலி, சீனா, கொரியா, சப்பான், கனடா, ரசியா, போலந்து….). தாய் மொழியில் கல்வி பயிலாத மாணவர்கள் மலட்டு நிலம் போல புத்தாக்க சிந்தனைகள் அற்றவர்களாகவே உருவாகி வருகிறார்கள் என்பது நிதர்சன உண்மை.
ஆனால் இந்தியாவில் இந்தி அல்லாத மற்ற மொழிகளில் பயிலும் மாணவர்களை இந்திய அரசு அங்கீகரிக்க மறுப்பதால், தாய் மொழியில் கல்வி பயில்வது இரண்டாம் தரமானது என்ற எண்ணம் மக்களிடையே திட்டமிட்டுப் பரப்பப்பட்டுள்ளது. இதன் உச்சக்கட்டமாக மத்திய அரசு நடத்துகின்ற மத்தியப் பல்கலைக்கழகங்கள், பொறியியல், மருத்துவம், சட்டம், பொருளாதாரம், மேலான்மை போன்றவற்றிற்கான கல்லூரிகளுக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றது. இக்கல்லூரிகள் அனைத்துமே அனைத்து மாநில மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டவையாகும். இந்தியாவில் மத்திய அரசால் நடத்தப்படும் சுமார் 500 கல்லூரிகளில் கிட்டத்தட்ட 1,00,000 இருக்கைகள் உள்ளன. இவ்வாறு நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தப்படுவதால் தமிழ் வழியில் கல்வி பயிலும் சுமார் மூன்றரை லட்சம் மாணவர்கள் வருடா வருடம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழ் வழியில் கல்வி பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மத்திய அரசு கல்லூரிகளின் நுழைவுத் தேர்வுகளை எழுத முடியாத சூழ்நிலை திட்டமிட்டு மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆங்கிலமும், இந்தியுமே உயர்வானது, ஆங்கில வழிக் கல்வியால் மட்டுமே பொருளாதாரத்தில் முன்னேற முடியும், உயர் அரசு கல்விக் கூடங்களில் நுழைய முடியும் என்று எண்ணம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படுகின்றது. அவர்கள் கனவுகள் கனவுகளாகவே ஆக்கப்படுகின்றன.
இந்திய அரசியல் சட்டம் கூறுவது என்ன?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த ஒரு மொழியையும் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை. இந்தியாவிற்கு என்று தேசிய மொழி கிடையாது. ஆனால் இந்தி மொழியை இந்திய அரசின் அலுவல் மொழியாக குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து மாநில மக்களும் ஏற்கும் வரையில் ஆங்கிலம் இந்தியாவின் இணைப்பு மொழியாக  இருக்கும் என்று முன்னாள் பிரதமர் நேரு நாடாளுமன்றத்தில் கொடுத்த உறுதிமொழியின் அடிப்படையில் ஆங்கிலம் இன்றும் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் மத்திய அரசு மும் மொழி கொள்கையை கடைபிடிப்பதாக உதட்டளவில் கூறி வருகின்றது.
மும்மொழிக் கொள்கையினை ஏற்றுள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி மத்திய அரசு மாநில மொழிகளிலும் நுழைவுத் தேர்வுகளை நடத்த வேண்டும். ஆனால் அதை மத்திய அரசு செய்யாமல் உள்ளது. சமுகத்தில் உயர் தட்டில் இருப்பவர்களுக்கு சாதகமாக ஆங்கில மொழியிலும், இந்தியைத் தாய் மொழியாக கொண்டவர்களுக்கு சாதகமாக இந்தி மொழியிலும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாநில மொழிகளிலும் தேர்வுகள் நடத்தினால் அதிக மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்பார்கள் என்பதாலும், அது உயர்தட்டு மக்களுக்கும், இந்தி மாணவர்களுக்கும் கடின போட்டியை உருவாக்கும் என்பதாலும் மத்திய அரசு இதற்கு தயக்கம் காட்டி வருகின்றது.
மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டம் அனைவருக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான அனைவருக்கும் சம உரிமை, சமவாய்ப்பு என்ற அடிப்படைக் கோட்பாட்டிற்கும் எதிராக உள்ளது. ஏற்கனவே மாநில அரசின் பட்டியலில் இருந்த கல்வியை மத்திய பட்டியலுக்கு நகர்த்தியதை நாம் கேட்காமல் விட்டதால் தான் இன்று இந்த நிலை நமக்கு ஏற்பட்டுள்ளது என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நடத்த முடியுமா?
மத்திய நுழைவுத் தேர்வுகளை மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்றிருக்கும் நிலையில், மத்திய அரசு மாநில மொழிகளிலும் நடத்துவது சாத்தியமில்லாதது என்று கூறி வருகின்றது. இது முழுக்க முழுக்க முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும். மக்களை திசை திருப்பவே இந்த வாதம் முன் வைக்கப்படுகின்றது.
மத்திய அரசுப்பணி தேர்வாணையம் முலம் நடத்தப்படுகின்ற இந்திய குடிமைப் பணியிடங்களுக்கான (IAS, IPS, IFS…...)  இரண்டாம் நிலைத் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் அனைத்தும் அரசமைப்பு சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளிலும் நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசால் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படுகின்ற தேசிய திறனாய்வுத் தேர்வும் (தேர்வு பெறும் மாணவர்களுக்கு முனைவர் பட்டம் வரை இலவச கல்வியும், மாதம் 500 ரூபாய் உதவித் தொகை) தமிழ் உட்பட 13மொழிகளில் நடத்தப்படுகின்றன. 2010 இரயில்வே நிதிநிலை அறிக்கையில் திருமதி மம்தா பானர்சி அவர்களின் அறிக்கையின்படி இரயில்வே தேர்வுகள் அனைத்தும் 22 மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று அறிவித்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் இன்று பல்லாயிரக்கணக்கான தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சி பெற்று வருகின்றனர்.
நுழைவுத் தேர்வு கேள்வித் தாளில் ஆங்கிலம்இந்திமற்றும் மாணவர்கள் விரும்பும் ஒரு மாநில மொழியையும் வைப்பது ஏற்கனவே மேற்குறிப்பிட்ட தேர்வுகளில் நடைமுறையில் உள்ளதுநடைமுறையில் அது சிரமமான காரியமும் இல்லை.
ஆக அனைத்து மாநில மொழிகளிலும் தேர்வு நடத்த முடியாது என்ற மத்திய அரசின் வாதம் அதற்கு நடத்த மனமில்லை என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.
நாம் என்ன செய்ய வேண்டும்?.
மத்திய அரசின் கல்வி நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் தமிழிலும் நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை வைக்க வேண்டும். தமிழிலும் நுழைவுத் தேர்வுகள் நடத்த வேண்டும் என்று பொது நல வழக்குத் தொடுக்க வேண்டும். தமிழ் வழி பயிலும் மாணவர்களிடம் உங்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன, உங்களின் எதிர்காலம் மொழியின் பெயரால் சிதைக்கப்படுகின்றன, கனவுகள் கனவுகளாகவே ஆக்கப்படுகின்றன என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி போராட தூண்ட வேண்டும். தமிழ் வழி பயிலும் மாணவர்களிடம் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தி இந்திய பிரதமருக்கும், இந்திய குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் இக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே தமிழ் மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். துண்டறிக்கைகள், தெருமுனைப் பிரச்சாரங்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். சாகும் வரை உண்ணா நிலைப் போராட்டங்களை நடத்தி மத்திய அரசுக்கு நம் எதிர்ப்பை காட்ட வேண்டும். மாவட்டந் தோறும் ஆர்பாட்டங்கள் நடத்த வேண்டும்.
மக்களின் தவறான புரிதல்கள் !!!
 அரசு இந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாலும், நுழைவுத் தேர்வுகள் மற்றும் அரசு செயல்பாடுகள் இந்தியில் அனைத்தும் இருப்பதாலும் நாமும் இந்தியை தமிழ்நாட்டில் திணிக்க வேண்டும் என்று ஒரு சாரார் கூறி வருகின்றனர். இது சரியான புரிதல் இல்லாமல் முன்னெடுக்கப்படும் கோரிக்கையாகும். இந்திய அரசு, இந்தி பேசும் மாநிலத்தவர்கள் பிற மொழி பேசுபவர்களை ஏகாதிபத்தியம் செய்வதற்காகவும், மாநில மொழிகளை அழிப்பதற்காகவும், இந்தி தவிர்த்த மொழி பேசும் மாநிலத்தவரை சிறுமைப்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்பட்ட கொள்கையே இப்போதைய மொழிக் கொள்கையாகும். இவ்விரு மொழிக் கொள்கையை எதிர்த்தும்மத்திய அரசில் மும்மொழிக் கொள்கை வேண்டியும் நம் முந்தைய தலைமுறை மாணவர்கள் 1965ல் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி வெற்றிப் பெற்றதால் தான் தமிழ் மொழியிலும் நுழைவுத் தேர்வுகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நம்மால் வலுவாக மத்திய அரசிடம் எடுத்து செல்ல முடிகின்றது. பொது நல வழக்கு தொடுக்க முடிகின்றது. தமிழ் மொழியின் மேல் ஏற்படும் இந்தியின் ஆதிக்கத்தை மட்டுப் படுத்தி வைக்க முடிந்திருக்கிறது. இருந்தும் மத்திய அரசு நம்மீது மறைமுகமாக இந்தியை திணித்து வருகின்றது. நாம் எந்த மொழியில் கல்வி கற்றாலும் தாய் மொழியில் தான் நம்மால் சிறந்த முறையில் நம் உணர்வுகளையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும். இந்தியை மொழியாக கற்பதில் தவறில்லை, யாரும் தடுக்கவும் இல்லை. ஆனால் இந்தி மொழியை இந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள் பயன்படுத்தவதற்கும், பிற மொழியினர் அதை பயன்படுத்துவதற்கும் வேறுபாடுகள் நிறைய இருக்கின்றது. மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
மத்திய அரசு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்வி நிலையங்களில் மாணவர்களின் திறமையையும்அறிவையும்சிந்திக்கும் ஆற்றலையும் தான் சோதிக்க வேண்டுமே தவிர மொழிப்புலமையை அல்லஆனால் இன்று மத்திய அரசு மொழிப்புலமையை வைத்தே மாணவர்களை இத்தகைய கல்லூரிகளில் சேர்த்து வருவது மாநில மொழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இடையூறாக இருந்து வருகின்றது
நாம் தமிழர்கள் பல தலைமுறைகளாக அடிமைப்பட்டுக் கிடந்ததால்  நம் உரிமைகளைக் கேட்கும் நிலையிலிருந்து மாற்றானிடம் சரணடையும் மனநிலையில் வாழ்ந்து வருகின்றோம். ஆகவே நுழைவுத் தேர்வுகள் ஆங்கிலத்திலும் இந்தியில் இருப்பதால் ஆங்கிலத்தை அல்லது இந்தியை கற்க வேண்டும் என்ற வாதத்தை விடுத்து நுழைவுத் தேர்வை தமிழில் வைக்க வேண்டும் என்று கூறுவதே உயர்வான ஒரு இனத்திற்கு அழகு சேர்க்க முடியும். உயர்வான ஒரு இனம் தன் உரிமைகளை என்றும் பெற்று வந்திருக்கிறது.
தமிழை விட பிற மொழியெ உயர்வாக நினைப்பது தன் வீட்டு மல்லிகையை விட அடுத்தவன் வீட்டு மல்லிகையில் மணம் அதிகம் என்று கூறுவதற்கு ஒப்பாகும்.
மாணவர்களே சிந்திப்பீர்!!!!!
உரிமைகளை பெற்றிடுவீர்!!!!
மத்திய அரசு நடத்தும் சில நுழைவுத் தேர்வுகள்
1. IIT- JEE - ( 15 IIT களில் பொறியியல் படிப்பிற்கான தேர்வு, சுமார் 10,000 இருக்கைகள்)
2. AIEEE - (30 NIT மற்றும்  5 IIIT கல்லூரிகளில் சேர்வதற்கான தேர்வு, சுமார் 25,000 இருக்கைகள்)
3. AIPMT - (மருத்துவ கல்லூரிகளில் மத்திய அரசின் பங்கை நிரப்ப ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான தேர்வு, சுமார் 2500 இடங்கள்)
4. CLAT - (இந்தியாவில் உள்ள 11 சட்ட பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான தேர்வு, சுமார் 1200 இருக்கைகள்)
5. CUCET  – (42 மத்திய பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்தும் நுழைவுத் தேர்வுசுமார் 20, 000 இருக்கைகள்)
6. AIMS ES – (AIMS கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்கான நுழைவுத் தேர்வு,சுமார் 200 இருக்கைகள்)
7. CPT – (மத்திய அரசின் ICAI என்ற Charted Accountant படிப்பிற்கான தேர்வு,சுமார் 2500 இருக்கைகள்)
8. IIST – (இந்திய விண்வெளித்துறை நடத்தும் கல்வி நிறுவன தேர்வுசுமார் 500இருக்கைகள்)
9. IISC – (IISC, பெங்களூரு நடத்தும் அறிவியல் படிப்பிற்கான தேர்வுசுமார் 2000இருக்கைகள்)
10. IISER – (மத்திய அரசின் அறிவியல் கல்லூரிகளில் சேர நடத்தப்படும் நுழைவுத் தேர்வுசுமார் 3000 இருக்கைகள்)
11. DAT – (3 National Institute of Design எனப்படும் கல்லூரிகளில் சேர்வதற்கான தேர்வுசுமார் 1500 இருக்கைகள் )
12. NIFT – (National Institute of Fashion Technology எனப்படும் கல்லூரிகளில் சேர்வதற்கான தேர்வுசுமார் 1500 இருக்கைகள்)
13. இன்னும் பல
இதில் மத்திய அரசு நுழைவுத் தேர்வுகள் அனைத்தையும் தமிழ் மொழியிலும் நடத்த வேண்டும் என்று இந்திய பிரதமருக்கு கோரிக்கை கடிதமும், மாணவர்கள் விழிப்புணர்வு துண்டறிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது.
படித்து விட்டு தக்க மேல்நடவடிக்கைக்கு பரிந்துரைக்கின்றேன்.
Regards
P.Edward Jeni
Educational Technologies Centre (ETC)
Nizwa College of Technology
Sultanate of Oman
Oman :            +968 96496527      
India  :             +919443002949      

மலையாளிகளின் ஊதுகுழல்களான 'இந்து', 'டைம்ஸ் ஆப் இந்தியா'ஏடுகளுக்கு தமிழ் மண்ணில் என்ன வேலை?

தமிழகத்தின் தலைநகராம் சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ‘இந்து' நாளிதழும், அதன் இரு வார இதழான பிரண்ட்லைன் ஏடும், டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையும் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து எழுதி வருகின்றன. ‘நடுநிலைமை', ‘நியாயமான செய்திப் பதிவு' தரமான இதழ்கள் என்று பிதற்றிக் கொண்டு அலையும் இந்தப் பத்திரிகைகளைச் சற்று கூர்ந்து படிப்பவர்கள் இவற்றின் சார்பு நிலையை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

ஏதோ அன்றன்று நிகழும் நிகழ்வுகளை அப்படியே வாசகர்களுக்கு செய்திகளாக வழங்குவது மட்டும்தான் இதுபோன்ற பத்திரிகைகளின் வேலை என்று சாதாரணமாக பத்திரிகைகளைப் புரட்டுவோர் எளிதாக எண்ணிவிட்டு போய்விடலாம். ஆனால் ‘இந்து', ‘டைம்ஸ் ஆப் இந்தியா' போன்ற பத்திரிகைகளுக்கு அன்றாடச் செய்திகளை வழங்குவது மட்டுமல்ல, அவற்றில் தமிழர்களுக்கு எதிராக நுணுக்கமான அரசியல் பண்ணுவது, அதை நோக்கி அதிகார மட்டங்களின் பல தளங்களிலும் காய்களை நேர்த்தியாக நகர்த்துவது போன்ற வேலைகளை திரைமறைவில் திட்டமிட்டு செயற்படுத்துகின்றன.

தமிழருக்கு எதிரான செய்திகளைத் தேர்வு செய்வதில் தொடங்கி, அவற்றுக்கு அன்றைய இதழில் எந்தப் பக்கத்தில் எவ்வளவு இடம் ஒதுக்குவது என்று தீர்மானிப்பது, அவற்றை நியாயப்படுத்தும் ஆய்வுக் கட்டுரைகளையும், கருத்துப் பதிவுகளையும் யார் யாரை வைத்து எழுதி, வாசகர்களுக்கு எப்படி வழங்குவது, அதற்கேற்றாற்போல தலையங்கங்களைத் தீட்டுவது போன்றவற்றை தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டிலிருந்து மிகவும் செம்மையாக வடிவமைத்து வாசகர்களுக்கு வழங்குகின்றன. இவ்விரு பத்திரிகைகளிலும் மேல்மட்டத்தில் இருந்து வடிவமைப்பதும், வழிநடத்துவதும் பெரும்பாலும் பார்ப்பனர்களாகவும், மலையாளிகளாகவும் இருப்பதால் இந்த வேலைகளை அவர்கள் ‘மிகத் திறமையாகச்' செய்ய முடிகிறது.

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் சென்னை அலுவலகம் மலையாளிகளின் ஆதிக்கத்தில் எவ்வாறு இருக்கிறது, தமிழர் நலன்களுக்கான செய்திகள், நமக்கான நியாயம் எவ்வாறு அவ்வலுவலகத்தில் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்பதை வெளிப்படையாக ராதிகா கிரி என்ற எழுத்தாளர் அண்மையில் The Weekend Leader இணைய இதழில் (டிசம்பர் 1622, 2011, Vol.2, Issue 50, Rising emotions, falling objectivity, the truth behind Mullaiperiyar coverage in Chennai newsrooms), ‘‘மேலெழும் உணர்ச்சிகள், வீழும் நடுநிலைமை; சென்னை செய்தி அறைகளில் முல்லைப் பெரியாறு செய்திப்பதிவில் மறைந்து கிடக்கும் உண்மை'' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இதற்கு டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு இந்த இணைய இதழின் ஆசிரியர் வினோஜ் குமார் மற்றும் எழுத்தாளர் ராதிகா கிரி மீதும் வழக்குத் தொடுக்கப் போவதாக மிரட்டியுள்ளது. உண்மையைச் சொல்லும்போது மலையாளிகளுக்கு எவ்வளவு கோபம் வருகிறது! முல்லைப் பெரியாறு போன்ற முக்கியமான பிரச்சனைகளில் தமிழர்களுக்கு எதிரான நிலை எடுப்பது, அதுகுறித்து தொடர்ச்சியாக கருத்துப் பரப்பல் செய்வது, பொதுமக்கள் மத்தியில் நமக்கான நியாயம் இல்லாதது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்குவது, அப்பிரச்சனையில் தமிழருக்கு எதிரான கொள்கை முடிவுகளை எடுக்க வைப்பதில் மத்திய அரசிற்கு தீவிரமாக அழுத்தம் தருவது போன்ற அனைத்து தளங்களிலும் ‘இவ்விரு' பத்திரிகைகளும் தங்களது வேலைகளைத் திட்டமிட்டு செய்து வருகின்ன.   

தில்லியிலோ, மும்பையிலோ, கொல்கொத்தா அல்லது கொச்சியிலோ இருந்துகொண்டு இவ்வாறு செய்தால் நாம் சகித்துக் கொள்ளலாம். அல்லது ஒழியட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற நான்கு பெருநகரங்களில் தங்களது பதிப்புகளை அமைத்துக் கொண்டு, நம் மக்களின் வரிப்பணத்தில் தமிழக அரசு வழங்கும் எண்ணற்ற சலுகைகளை அனுபவித்துக் கொண்டு, பெருவாரியான தமிழக வாசகர்களின் தளத்தில் அமர்ந்து கொண்டு, தமிழக வணிகர்கள், மற்றும் நம் மக்களின் விளம்பரங்களையும் பெற்று, நம்மை அண்டிப் பிழைத்துக் கொண்டே, நமக்குக் குழிதோண்டிக் கொண்டிருக்கும் இந்த இதழ்களை நாம் எப்படி தொடர்ந்து அனுமதிப்பது என்பதுதான் நமக்கு முன் எழும் கேள்வி. தமிழ் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில் நமக்கெதிராக சதி செய்து கொண்டு, நமது எதிர்காலத்தை முற்றிலுமாக முடக்க நினைக்கும் கும்பலின் சிந்தனைப்போக்கை ‘நடுநிலை நாளேடுகள் என்ற போர்வையில்' எப்படி நமது இல்லங்களில் அனுமதிக்க முடியும்?

முல்லைப்பெரியாறு? முல்லாபெரியார்?

தமிழகத்திலிருந்து அச்சாகி வெளிவரும் ‘இந்து' நாளேட்டிலும், ‘பிரண்ட்லைன்' என்ற இருவார இதழிலும், ‘டைம்ஸ் ஆப் இந்தியா' ஏட்டிலும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை குறித்து வெளிவரும் செய்திகளிலும், கட்டுரைகளிலும், Mullaiperiyar என்று ஆங்கிலத்தில் எழுதாமல், திட்டமிட்டே Mullaperiyar என்று (‘i’ இல்லாமல் ‘முல்லா பெரியார்' என்ற தெளிவான மலையாள நிலைப்பாடு எடுத்து) எழுதி வருகின்றனர். இது ஏதோ போகிற போக்கில் கணிணியில் அச்சடிக்கும் போது கவனக்குறைவாக நடந்த, யதார்த்தமான விடுபாடு என்று தமிழர்கள் நினைத்துவிட வேண்டாம். இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஆங்கில ஏடுகள் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் வெளிப்படையாக எடுக்கும் மலையாளச் சார்பான அரசியல் நிலைப்பாடு, தமிழர் விரோதச் செயல்பாடு என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெயரிலும், உச்சரிப்பிலும், சொல்லாக்கத்திலும், வார்த்தைப் பயன்பாட்டிலும் எப்படி எழுதினால் என்ன? இதில் என்ன ஆகப்போகிறது? என்று நம்மில் ஒருசிலர் நினைக்கலாம். ஆனால் கீழே இடம்பெறும் ஒருசில செய்திகளைப் படிக்கும்போது, இந்த வார்த்தைப் பயன்பாடு மேற்குறிப்பிட்ட பத்திரிகைகளின் எப்படி திட்டமிட்ட சதி என்பதை விளங்கிக் கொள்ள முடியும். (அந்த வகையில் முல்லைப் பெரியார் என்று சரியாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் பதிவு செய்யப்படுகிறது).



தமிழகத்தின்போராட்டங்களைஇருட் டடிப்புச்செய்வது
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் தமிழகத்தின் நியாயங்களையும், தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் அறவழியில் நடக்கின்ற மக்கள் எழுச்சியையும் முழுமையாக மறைத்தும், நம் மக்களின் போராட்டங்களை இருட்டடிப்புச் செய்தும், அல்லது வேண்டா வெறுப்பாக வேறு வழியில்லாமல் சிறு சிறு செய்திகளாக ஏதோ ஒரு மூலையில் மாநிலச் செய்திகளாக குறுக்கிப் போடுவதுமான வேலைகளை இந்த ஆங்கிலப் பத்திரிகைகள் (தமிழகத்திலிருந்து வெளிவரும் பதிப்புகள்) தொடர்ந்து செய்து தமிழ் மக்களுக்கு துரோகம் செய்து வருகின்றன.
       ‘முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட வேண்டும், புதிய அணை கட்டப்பட வேண்டும்' என்று கேரள அரசு மற்றும் மலையாளிகளின் பேட்டிகளையும், அவர்களுக்குச் சாதகமான செய்திகளையும் முதல் பக்கச் செய்திகளாகவும், இந்திய அளவிலான செய்திகளாகவும் இந்த பத்திரிகைகள் வெளியிடுகின்றன. ஆனால் நமது பொறியியல் அறிஞர்களின் கட்டுரைகளோ, செய்திகளோ, பதிலுரைகளோ, மாநிலச் செய்திகளாகக் குறுக்கி வெளியிடுகிறார்கள் அல்லது வெளியிட மறுக்கின்ற போக்கும் நிலவுகிறது. (விதிவிலக்காக, முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகனின் கட்டுரையை மட்டும் ‘Unwarranted fears on Mullaiperiyar’ (முல்லைப் பெரியாறு குறித்த தேவையற்ற பயங்கள் என்ற தலைப்பில், டிசம்பர் 31, 2011) இந்து ஏடு நடுப்பக்க கட்டுரையாக வெளியிட்டது.

கேரளாவில்தமிழர்கள்மீதுமலையாளவெ றியர்களின்தாக்குதல்கள்
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரளாவில் வசிக்கும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கடந்த டிசம்பர் மாத முதல் இரு வாரங்களில் மலையாளிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் வசிக்கும் தமிழ்த் தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். தமிழ்ப் பெண்கள் மிகவும் மோசமாக, கீழ்த்தரமாக, கேவலமாக மலையாள வெறியர்களால் நடத்தப்பட்டுள்ளனர்; பாலியல் வன்முறைகள் நம் பெண்கள் மீது தொடுக்கப்பட்டுள்ளன. ‘‘தண்ணி வேணுமா உங்களுக்கு?'' என்று தமிழ்ப் பெண்கள் வாயில் சிறுநீரை பீய்ச்சி அடித்தும், பீடா போட்டு வெற்றிலை எச்சிலை நம் பெண்களின் முகத்தில் துப்புவதும், ‘‘பாண்டிக்காரனுங்க'' என்று சொல்லி இழிவுபடுத்தி தமிழ்ப் பெண்கள் முன் தங்கள் ஆடைகளை அவிழ்த்துப் போட்டு ஆடுவதுமான கொடூரங்கள் அங்கே அரங்கேறியுள்ளது. செருப்புக் காலால் தமிழ்ப் பெண்களின் பிட்டத்தில் மலையாளிகள் மிதித்துள்ளனர்; அடித்துள்ளனர். தமிழக அரசுப் பேருந்துகளும், லாரிகளும் மலையாள வெறியர்களால் தாக்கப்பட்டுள்ளன. இடுக்கி மாவட்டத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான சொத்துக்கள், வீடுகள், தோட்டங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. சூறையாடப்பட்டுள்ளன; இக்கொடூரங்களை தமிழ்ப் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பேட்டி கொடுத்ததற்காக பல தமிழர்கள் அங்குள்ள மலையாளிகளால் அலைபேசியிலும், பின்னர் திரும்பிச் சென்றபோது நேரிலும் மிரட்டப்பட்டுள்ளனர் என்று அங்கு இப்போதைய சூழல் குறித்து தகவல்களைத் திரட்டச் சென்ற பல்வேறு குழுக்கள் தங்கள் அறிக்கைகளில் பதிவு செய்துள்ளனர்.

இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்கு மாலை போட்டுச் சென்ற தமிழ்ப் பக்தர்களைக் கூட இந்த மலையாள வெறியர்கள் விட்டுவைக்கவில்லை; அவர்களுக்கு செருப்பு மாலைகள் போட்டு அசிங்கப்படுத்தியுள்ளனர்; விரட்டி அடித்துள்ளனர்; இதுபோன்ற செயல்களை நாகரீகமடைந்த எந்த சமூகமும் செய்ய முன்வராது. ஆனால் படித்தவர்கள் அதிகமாக உள்ள மாநிலத்தவர் என்று மார்தட்டும் மலையாளிகள் இவ்வளவு கேவலமாக, அநாகரீகமாக, மனிதாபிமானமற்ற முறையில், அருவறுக்கத்தக்க நிலையில் செயல்பட முடியுமா என்ற வருத்தமும், ஆதங்கமும் நமக்குள் எழுகிறது. ஆக்கிரமிப்புப் போரில் ஈடுபடும் இராணுவத்தினர்கூட எதிரி நாட்டில் இவ்வளவு கீழ்த்தரமாக நடக்கமாட்டார்கள். நடந்த நிகழ்வுகளைப் பார்க்கிறபோது, சிங்கள இனவெறியர்களுக்கும், மலையாள இனவெறியர்களுக்கும் வேறுபாடு எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. இரண்டு இனத்தவர்களும் தமிழர்களை மிருகங்களைவிடக் கேவலமாக நடத்துகின்றனர் என்று உறுதியாக நம்பமுடிகிறது. தமிழர்கள் மீது நடந்த தாக்குதல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கேரள காவல்துறை, தமிழர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க எதுவும் செய்யவில்லை. கேரள காவல்துறையின் செயலற்ற தன்மையைக் கண்டித்தோ, தமிழர்கள் மீது மலையாளிகள் தொடுத்த தாக்குதல்களைக் கண்டித்தோ இந்த ‘நடுநிலை பத்திரிகைகள்' எந்தக் கண்டனக் குரலையும் எழுப்பவில்லை. இந்த நாளேடுகளுக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்றே தோன்றுகிறது.

மனித உரிமைகள் குறித்து வண்டி வண்டியாக எழுதும் ‘இந்து' பத்திரிகையோ, ‘டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகையோ இக்கொடுமைகள் பற்றி குறிப்பிடும்படியாக எந்த செய்தியையும் பதிவு செய்யவில்லை. இவற்றையெல்லாம் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்துள்ளன. ஆனால் கேரளாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டதற்கான எதிர்வினையாக தமிழ்நாட்டில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்த சம்பவங்களை மலையாளிகளுக்குச் சொந்தமான கடைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களை விரிவாக எழுதி தமிழர்களை வன்முறையாளர்களாகச் சித்தரிக்கும் போக்கு இப்பத்திரிகைகளிடம் உள்ளது. (கேரளத்தில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதல்களையும், தமிழ்ப் பெண்கள் மீது நடந்த வன்முறை வெறியாட்டங்களையும் அனைத்துத் தமிழ் ஏடுகளும் விரிவாக எழுதின. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில ஏடு இவற்றைப் பரவலாக பதிவு செய்து வெளி உலகிற்கு கொண்டு வந்தது என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டியுள்ளது.)

சபரிமலைக்குச் செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்களும், தமிழக வாகனங்களும் தாக்கப்படும் தகவல்கள் கேள்விப்பட்டு தமிழக முதல்வர் கேரள மக்களுக்கு விடுத்த வேண்டுகோளை டிசம்பர் 7ஆம் தேதி இந்து நாளேடு அன்றைய இதழின் ஒரு ஒரத்தில் சிறிய ஒரு பத்திச் செய்தியாக வழங்கியது. ஆனால் டிசம்பர் 25ஆம் தேதி நாளேட்டில் குமுளியில் ஏதோ ஓரிடத்தில் கேரள அதிகாரிகள் ஒரு சிலரும், அங்கே உள்ள ஐயப்ப சேவா சங்கத்தைச் சேர்ந்த சிலரும் சின்னமனூரிலிருந்து சென்ற சில தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு செண்டை மேளம் முழங்க, இனிப்பு வழங்கி மாலை போட்டனராம். இதைப் பெரிய நான்கு பத்திச் செய்தியாக Red - Carpet Welcome for Ayyappa devotees across border (எல்லை தாண்டி ஐயப்ப பக்தர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு) என்று தலைப்பிட்டு இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தமிழக ஐயப்ப பக்தர்கள் மலையாளிகளால் தாக்கப்பட்ட சம்பவங்கள் செய்தியாகாமல் அல்லது கவனிக்கப்படாத சிறிய செய்தியாகவும், தமிழகத்தைச் சேர்ந்த பத்து ஐயப்ப பக்தர்களுக்கு மலையாளிகள் வாழ்த்துச் சொன்னதும், வரவேற்றதும் அனைவரது கவனத்தை ஈர்க்கும் பெரிய செய்திகளாகப் போட்டு மலையாளிகளைப் பற்றிய நல்ல பிம்பத்தை உலகுக்கு எடுத்துரைக்க இந்து ஏடு எல்லா வகையிலும் முயற்சி எடுக்கிறது.

தேனிமக்கள்மீதுதமிழககாவல்துறையி ன்அத்துமீறல்கள்
தென்தமிழகத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை கேரள நயவஞ்சகர்களால் எங்கு இடிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்ச உணர்விலும், தங்களுக்கான எதிர்காலம் முற்றிலுமாக கேள்விக்குறி ஆகிவிடுமே என்ற ஆதங்கத்திலும் தன்னெழுச்சியாக ஆயிரக்கணக்கில் அமைதி வழியில் அறப்போர் புரிய திரண்டு வந்த தேனி மாவட்ட மக்களை தமிழக காவல்துறையே விரட்டி விரட்டி அடித்தது. அவர்கள் மீது தடியடி நடத்தி, கிராமப்புற விவசாயப் பெண்கள் மற்றும் அப்பகுதி தமிழ் இளைஞர்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல்களை நடத்தியது. தேனி மாவட்டத்தில் கிராமம் கிராமமாகச் சென்று அமைதியாகப் போராடும் மக்களைத் தொடர்ந்து மிரட்டும் பாணியிலும், அவர்கள் மீது பொய் வழக்குகளைப் புனைந்தும் தமிழக காவல்துறையே மிருகத்தனமாக நடந்த விபரங்களை தமிழ்ப் பத்திரிகைகள் அனைத்தும் (காலச்சுவடு போன்ற ஒருசிலவற்றைத் தவிர்த்து), அவ்வப்போது பதிவு செய்துள்ளன. பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு சற்றும் குறையாத கொடூரம் தேனி மாவட்டத்தில் நடந்துள்ளது என்று கள ஆய்வு மேற்கொண்ட பல்வேறு குழுக்களும் பதிவு செய்கின்றனர்.

தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் அப்பகுதி விவசாயப் பெருங்குடி மக்களை சாதி ரீதியாக பிளவுபடுத்தவும் தமிழகக் காவல்துறையினர் முயன்று வருவதாக செய்திகள் கசிகின்றன. முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் தென்தமிழகம் தழுவிய அளவில் எந்த வகையிலும் பெரிய மக்கள் போராட்டமாக உருவெடுத்துவிடக் கூடாது என்பதில் தமிழகக் காவல்துறை உயர் அதிகாரிகள், குறிப்பாக ஐ.ஜி. ராஜேஷ் தாஸ், காவல்துறை துணை தலைமை இயக்குனர் மலையாளி ஜார்ஜ் போன்றோர் மிகத் தெளிவாகச் செயல்படுகின்றனர். எந்தச் சூழலிலும் தமிழகத்தில் செயல்படும் ஜாய் ஆலுக்காஸ், ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடைகள், முத்தூட் நிதி நிறுவனம், கல்யாண் ஜூவல்லர்ஸ், மணப்புரம் கோல்டு, மலபார் கோல்டு போன்ற கேரள வர்த்தக நிறுவனங்களுக்கோ, மலையாளிகள் தமிழகத்தில் வாங்கிக் குவித்துள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், பண்ணைகளுக்கோ எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதில் இவர்கள் உறுதியாக உள்ளனர். இலட்சக்கணக்கான தமிழர்கள் தண்ணீர் இல்லாமல் செத்தாலும் பரவாயில்லை, தமிழகத்தில் வசிக்கும் மலையாளிகளின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் எந்தச் சேதமும் வரக்கூடாது என்பதில் தமிழர் அல்லாத தமிழக உயர் காவல்துறை அதிகாரிகள் கண்ணும்கருத்துமாக இருந்து செய்படுகின்றனர் என்ற கருத்து ஆங்காங்கே எதிரொலிக்காமல் இல்லை. இதுபோன்ற செய்திகள் இந்த ஆங்கில ஏடுகளில் எங்கேயும் பதிவாவதில்லை.

அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும் நடைபெறும் அத்துமீறல்களையும் ஏகாதிபத்தியங்களின் ஒடுக்குமுறைகளையும் புட்டுபுட்டு வைக்கும் இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற நாளேடுகள், எங்களது ஆண்டிப்பட்டிக்கு அருகே எம் விவசாயத் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட இந்தக் கொடூர தாக்குதல்களை மட்டும் ஏன் இருட்டடிப்புச் செய்கின்றன? யாருக்கு இவர்கள் சேவகம் செய்கிறார்கள்? எங்கள் மண்ணில் விளையும் சோற்றைத் தின்றுவிட்டு எவனுக்கோ விசுவாசமாக இருக்க, உங்களை எங்கள் மண்ணில் ஏன் அனுமதிக்க வேண்டும்? என்ற கேள்வி முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் உயிரைப் பணயம் வைத்துப் போராடும் எங்கள் விவாசயத் தோழர்களுக்கு எழுவதில் தப்பேதும் இல்லையே!

இதுவாகருத்துச்சுதந்திரம்?
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் 2006ல் உச்சநீதிமன்றம் தமிழகத்திற்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கிய பின்பும், உச்சநீதிமன்றம் நியமித்த உயர்நிலைக் குழுவும், மத்திய நீர்வள ஆணையமும், வல்லுநர் குழுவும் அணையின் அத்தனை அம்சங்களையும் ஆய்வு செய்துவிட்டு, அணை வலுவாகவே உள்ளது என்று உறுதிபடக் கூறிவிட்டன. இவ்வணையை வலுப்படுத்திட தமிழக அரசும், பொறியாளர்களும் அனைத்து நடவடிக்கைகளையும் இதய சுத்தியோடு எடுத்து வருகின்றனர். இவ்வாறு நமக்கான அனைத்து நியாயங்கள் இருந்தாலும், அவற்றை ஓங்கி எழுதுவதற்கு இந்த ஏடுகளிடம் உறுதிப்பாடு துளியளவும் இல்லை. ஆனால் அதே வேளையில் நியாயமே இல்லாத மலையாளிகளுக்கு ஆதரவாக வெளிப்படையாகவே கட்டுரைகளை வெளியிடுவது குறித்து இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஏடுகள் கொஞ்சம் கூட தயக்கம் காட்டுவது இல்லை; வெட்கப்படுவது கிடையாது; கேட்டால் கருத்துச் சுதந்தரம், பத்திரிகைச் சுதந்தரம், சனநாயகம் என்று வாய்கிழியப் பேசுவார்கள். இந்தக் கருத்துச் சுதந்தரத்தையும் சனநாயகத்தையும் கேரளத்தில் செய்ய வேண்டியதுதானே? 50 இலட்சம் தமிழர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் மலையாளிகளின் சதித்திட்டத்திற்கு துணை போவதும், வெறிபிடித்தலையும் கேரள அரசியல்வாதிகளுக்கு வால் பிடிப்பதும் எப்படிக் கருத்துச் சுதந்தரமாகும்? மலையாளிகளுக்குச் சாதகமாக மட்டுமே செய்திகளை வழங்குவதும், நமக்கான நியாய தர்மங்களைக் குழிதோண்டிப் புதைப்பதும் எப்படி பத்திரிகைச் சுதந்திரம் ஆகும்? தமிழர்களுக்கு ஆதரவாக செய்திகளைப் பதிவு செய்யச் சொல்லவில்லை; நடக்கின்ற விஷயங்களை விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு நியாயமாகவாவது பதிவு செய்யலாமே!

03.01.2012 செவ்வாயன்று வெளிவந்த இந்து நாளேட்டில் முதல் பக்கத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்து இரண்டு முதன்மைச் செய்திகள் வந்துள்ளன. (மூன்று பத்திகளில் பெரிய தலைப்புகளில் ஏறக்குறைய அரைப்பக்க அளவில்) கேரளத்தின் நியாயத்தை அப்படியே வெளிப்படுத்துவதாக அச்செய்திகள் அமைந்துள்ளன. ஒ.வெங்கடேசன் என்ற தில்லி நிருபர் தந்த செய்திகள். New Dam is the only solution, Says Kerala (புதிய அணை ஒன்றே தீர்வு, கேரளா கூறுகிறது) என்ற முதன்மைச் செய்தியும், Kerala slams attitude of Dam Panel’s Technical Members (உயர்நிலைக் குழுவின் வல்லுநர்களின் போக்கைக் கேரளம் கடுமையாகச் சாடுகிறது) என்ற அதற்கடுத்த செய்தியும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தத் தலைப்புகளைப் பார்த்ததுமே ‘இந்து' பத்திரிகை எந்தப் பக்கம் நிற்கிறது என்று தெரிகிறது? இந்து நாளேட்டின் அப்பட்டமான மலையாளச் சார்பை விளக்க நீண்ட ஒரு கோனார் உரை எழுத வேண்டிய தேவையிருக்காது. முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலைத் தீர்க்க உச்சநீதிமன்றம் நியமித்த உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் 02.01.2012 அன்று தமிழ்நாடும், கேரளமும் முன்வைத்த வாதப் பிரதிவாதங்கள் பற்றிய செய்தியில் இந்து ஏட்டின் ‘நடுநிலையான' பதிவுதான் இது! அதே நாளில் கேரளாவின் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் என்.கே. பிரேமச்சந்திரன் என்பவரின் The case for a new Mullaperiyar Dam (முல்லாப் பெரியாரில் புதிய அணைக்கான தேவை) என்ற தலைப்பில் (இந்திய முழுமைக்குமான 9ம் பக்கத்தில்) ஒரு கட்டுரையையும் இந்து ஏடு வெளியிட்டுள்ளது. இதேபோன்று கேரளாவில் இவர்கள் செய்ய முடியுமா? செய்யத் துணிவார்களா?

கேரளாவின் வாதத்தை ஒரு செய்திக்கான தலைப்பாக முன்வைக்க நியாயம் இருக்கும்போது, தமிழகத்திற்கான பிரதிவாதத்தை அடுத்த செய்தியாக பதிவு செய்ய மறுக்கும் இந்து பத்திரிகையின் நிலைப்பாட்டை நாம் எப்படி எடுத்துக் கொள்வது? இது அப்பட்டமான தமிழர் விரோதப் போக்கு அல்லவா? தமிழகத்தில் தனது தலைமையகத்தை வைத்துக்கொண்டு வெளிப்படையாக மலையாளிகளுக்கான நியாயத்தை மட்டுமே முன்னிறுத்தி, முதல் பக்கச் செய்திகளாக்கி தமிழகத்தின் வாதத்தை இருட்டடிப்புச் செய்வதில் இந்து ராமுக்கு எந்தச் சிரமமும் இல்லை. அவர் பேசும் பத்திரிகைத் தர்மம் இதுபோன்ற ஒருதலைப்பட்சமான செய்திப் பதிவுகளை முழுமையாக அனுமதிக்கிறது; அங்கீகரிக்கிறது. (இந்த கேடுகெட்ட ‘இந்து' நாளேட்டின் பத்திரிகைத் தர்மத்தைக் கேலிக்கூத்தாக்கும் வகையில் அதே நாள் அதே ஏட்டின் முதல் பக்கத்தில் மேற்சொன்ன இரண்டு செய்திகளுக்கிடையே மற்றொரு முரணான செய்தியும் வெளிவந்துள்ளது. ‘‘பரபரப்புச் செய்திகளைத் தவிர்த்து, நடுநிலைமையோடு செயல்பட மன்மோகன் ஊடகங்களைக் கேட்டுக் கொள்கிறார்'' (Manmohan tells media to promote objectivity, curb sensationalism) என்று பிரதமர் மன்மோகன்சிங் பத்திரிகையாளர் மத்தியில் பேசியதாக இந்த செய்தி! என்ன ஒரு நகைமுரண்! ஆனால் இந்து இதழை கூர்ந்து படிக்கும் நாம் இந்து ராமின் முரண்பாடுகளையும், ஒருதலைப்பட்சமாக எழுதும் நிலையையும், தமிழர் விரோதப் போக்கையும் எண்ணிச் சிரிக்கிறோம்.

அணை பலமாக இருப்பதால், புதிய அணை கட்டுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தமிழக அரசு தெட்டத்தெளிவாகத் தெளிவுபடுத்திக் கூறியதையும், 06.01.2012 அன்று உயர்நிலைக் குழுவில் இதுகுறித்த அறிக்கை சமர்ப்பித்ததையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு 07.01.2012, சனிக்கிழமை முதல் பக்கத் தலைப்புச் செய்தியாக Demolishes New Dam Idea (புதிய அணை என்ற கருத்தையே உடைத்தெறிந்த தமிழ்நாடு) என்று தலைப்பிட்டு பெரிய மூன்று பத்திச் செய்தியை வழங்கி சரியாகப் பதிவு செய்துள்ளது. ஆனால் 03.01.2012 அன்று கேரளாவிற்குச் சார்பாகவே இரண்டு முதன்மைச் செய்திகளை முதல் பக்கத்தில் விரிவாக எழுதிய இந்து ஏடு, தமிழகத்திற்கான நிலைப்பாடு என்று வரும்போது 07.01.2012 அன்றைய ஏட்டில் 9ஆம் பக்கத்தில் Kerala, Tamil Nadu Take Divergent Stands on New Mullaperiyar Dam (முல்லா பெரியார் புதிய அணை தொடர்பாக கேரளாவும், தமிழ்நாடும் வெவ்வேறு நிலைப்பாட்டை எடுக்கின்றன) என்று பொத்தாம் பொதுவாக ஒரு தலைப்பில் ஆறு பத்திச் செய்தியாக பதிவு செய்கிறது. கேரளாவின் புதிய அணை கட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழகம் ஏற்றுக்கொள்ளவே இல்லை என்பதுதான் சாராம்சம். உண்மை நிலைமை இவ்வாறு இருக்க, இரு மாநிலங்களுக்குமான வெவ்வேறு நிலைப்பாடுகள் இங்கே எப்படி வரும்? தமிழகத்திற்கான நியாயத்தைப் பதிவு செய்வதில் அவ்வளவு சிரமம் இந்து நாளேட்டுக்கு! தமிழர்கள் நலன் என்பது இந்து நாளேட்டுக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது! 

பெரியாறு அணை குறித்த பீதியை மலையாளிகளிடம் கேரள அரசு திட்டமிட்டு உருவாக்குவதன் ஒரு அம்சமாக மலையாள பட இயக்குனர் சோகன்ராய் வரைபடக் கலை யுக்தி மூலமாக ‘அணை 999' என்ற தலைப்பில் அண்மையில் படத்தை எடுத்து திரையிட முனையும்போது, தமிழகத்தில் திரையிட அப்படத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. ஏற்கெனவே முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் கொதித்துப் போயுள்ள தமிழ்நாட்டின் திரையரங்கங்களில் இப்படத்தை வெளியிட அனுமதி கோரி அவர் உச்சநீதிமன்றத்தை அணுகியது, உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் தமிழக அரசிடம் அவர் நேரில் வந்து விளக்கமளித்தது போன்ற செய்திகளை இந்துவும், டைம்ஸ் ஆப் இந்தியாவும் பரபரப்பிற்குப் பஞ்சமில்லாமல் பெரிய பெரிய செய்திகளாக்கி வெளியிட்டன. தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்கவைக்கப் போராடும் தமிழ் மக்களிடம் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிற மாதிரி இதுபோன்ற சோகன்ராய்களின் வன்மம் நிறைந்த, வக்கிரச் செயல்களைக் கண்டித்து எழுதும் திராணியற்றுப் போன இந்த ‘நடுநிலை ஏடுகள்' கருத்துச் சுதந்திரம், பத்திரிகை தர்மம் பற்றிப் பேச என்ன யோக்கியதை உள்ளது?

பிரண்ட்லைன்இதழில்இராமசாமிஐயர் பேட்டி
கடந்த பிரண்ட்லைன் ஆங்கில இதழில் (Any Dam has a life என்ற தலைப்பில் ஒரு பேட்டி, டிசம்பர் 30, 2011) ராமசாமி ஐயர் என்ற ஒரு ஐயனிடமிருந்து விரிவான மூன்று பக்கப் பேட்டி ஒன்றை எடுத்து பதிவு செய்துள்ளனர். தமிழர்களின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணைக்கு ஆப்பு வைக்கின்ற, ஆபத்தான, அபத்தமான கருத்துக்களை மிகச்சாதாரணமாக பேசியுள்ளான், இந்த ஐயன்! ‘தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் பகுதியில் வசிக்கும் அனைத்துத் தமிழர்களும் விவசாயத்தை விட்டுவிட்டு வேறு தொழில் செய்ய தயாராக இருக்க வேண்டுமாம்! (‘Now that the dam is 116 years old, we can start thinking of phasing it out. That means giving people [of Tamil Nadu] time to get adjusted to this idea and seek alternative sources of economic activity’). உடனடியாக இல்லையென்றாலும் பரவாயில்லை; இன்னொரு பத்தாண்டுளில் இப்பகுதி மக்கள் இதற்கு கொஞ்சம் கொஞ்சமாகத் தயாராகிக் கொள்ள வேண்டும்' என்ற அறிவுரையை நமக்கு முன்மொழிந்துள்ளார், இந்த அறிவாளி ஐயர்! அணையை இடிக்கலாம் என்ற கேரளாவுக்கு ஐடியா கொடுக்கவும், ஐந்து மாவட்டத் தமிழ் மக்களும் மாற்று வாழ்வாதாரங்களை நோக்கி தயாராக கால அவகாசம் கொடுக்கவும் இந்த ஐயர் யார்? இவருக்கு யார் இந்த அதிகாரம் கொடுத்தது?

தண்ணீர் பிரச்சனைகளில் இந்த ஐயர் வல்லுநர் என்றால், முல்லைப் பெரியாறு அணையின் பலம், பலவீனம், அணையின் உறுதித் தன்மை, அதன் தண்ணீர் கொள்ளளவு, அணையின் கீழ்மட்டக் கட்டுமானம், மேல்மட்ட அகலம், சிற்றணையின் ஸ்திரத்தன்மை, கடந்த 30 ஆண்டுகளாக தமிழக அரசு இந்த அணைகளைப் பலப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள், இவை தொடர்பான நமது பொறிஞர்களின் செயல்பாடுகள் போன்றவை குறித்து கருத்துக்களை விஞ்ஞானப்பூர்வமாகவும், அணை தொடர்பாக பொறியியல் ரீதியான தர்க்க வாதங்களையும் முன்வைக்கலாம். அதன் அடிப்படையில் தமிழகத்தின் நியாயங்களை நிராகரிக்கலாம். இதையெல்லாம் விட்டுவிட்டு, அணைக்குப் பின்னால் உள்ள அரசியலை மட்டுமே (உம்மன்சண்டி அச்சுதானந்தன் போலவே) பேசுவதற்கு இவரை யார் அழைத்தது? இவர் முன்வைக்கும் அனைத்துக் கருத்துக்கள் அத்தனையும் தமிழர் நலனுக்கு எதிரான அரசியலாகும்; மலையாளிகளுக்கு ஆதரவான நிலைப்பாடே. ‘வல்லுநர்' என்ற போர்வையில் இப்படிப்பட்ட தமிழர் விரோத அரசியலைப் பேச பிரண்ட்லைன் தளம் அமைத்துக் கொடுக்கிறது. இந்திய அளவில் கேரளத்திற்கான நிலைப்பாட்டை வலுப்படுத்தத் தேவையான ஏற்பாட்டைச் செய்து கொடுக்கிறது, இந்து ஏடு.

       ‘‘தண்ணீர், பாதுகாப்பு போன்ற விஷயங்களை எல்லாம் தாண்டி கேரளத்திற்கு மிகப்பெரிய அநீதி கடந்த ஒரு நூற்றாண்டாக இழைக்கப்பட்டிருப்பதாக இந்த ஐயர் மலையாளிகளுக்காக மாலை மாலையாக கண்ணீர் வடிக்கிறார். முல்லைப் பெரியாறு முழுக்க முழுக்க கேரளத்திற்கே சொந்தமாம்! இதில் தமிழ்நாடு உரிமை கொண்டாடுவதில் எந்த நியாயமும் இல்லையாம்! இருந்தாலும் கேரளம் பெரிய மனது பண்ணி புதிய அணை கட்டி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தருவதாகத்தான் கூறுகிறார்களாம்' என்றெல்லாம் கேரளத்திற்கு வக்காலத்து வாங்கும் இந்த ஐயர், ‘1886 ஆம் ஆண்டைய ஒப்பந்தமே அடிப்படையில் அபத்தமானது!' என்றெல்லாம் உளறுகிறார்.

       ‘இந்த அணை பாதுகாப்பானது என்று தமிழ்நாடு சொல்லலாம்; ஆனால் மலையாளிகளிடம் எழுந்துள்ள பயம் உண்மையானதாம்! அணை உடைந்தால் கேரளம்தான் முழுப் பாதிப்பையும் தாங்க வேண்டுமாம்! வல்லுநர் குழுவே அணை பாதுகாப்பானது என்று உத்தரவாதம் வழங்கினாலும், மலையாளிகளிடம் எழுந்துள்ள பய உணர்வை எளிதில் போக்க முடியாதாம்! (Whatever the expert committee might certify (about safety), you cannot change the feelings of the people (of Kerala) and they do feel frightened). மலையாளிகளின் இந்த உண்மையான பயத்தை நாம் அனைவரும் அங்கீகரிக்க வேண்டுமாம்! கேரளம் காலகாலமாக தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கிக் கொண்டிருப்பதால் இப்போதுள்ள சூழலைப் புரிந்து கொண்டு தமிழகம் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் ஒத்துழைக்க வேண்டுமாம்! முல்லைப் பெரியாறு அணை நிரந்தரமானது அல்ல என்று புரிந்துகொண்டு, மாற்றுத் தொழிலுக்கும், வேறு வாழ்வாதாரத்தை நோக்கியும் புதிய திசையில் தமிழர்கள் செல்ல வேண்டுமாம்! இதுபோன்ற ஏகப்பட்ட விஷயங்களை (விஷங்களை) முத்துக்களாகப் பொழிகிறார், இந்த ஐயர். தமிழர் நலன்களுக்கு எதிராக நிலைப்பாடு எடுப்பதிலும், தமிழர்களின் வாழ்வாதாரங்களையும், உரிமைகளையும் பறிப்பதிலும், அவற்றைக் குழிதோண்டி புதைப்பதிலும் ஐயர்களுக்குத் தான் எவ்வளவு வேகம் என்பதை இந்தப் பேட்டியை வாசிப்பவர்கள் மிக எளிதில் புரிந்துகொள்ளலாம். அந்தப் பேட்டியை சற்று சுருக்கி இந்து நாளேட்டில் ‘இரு மாநிலங்களும் ஒரு நீர்ப்பிரச்சனையும்' என்ற தலைப்பில் நடுப்பக்க கட்டுரையாகவும் (கூதீணி குtச்tஞுண் ச்ணஞீ ச் தீச்tஞுணூ டிண்ண்தஞு, டிசம்பர் 29, 2011) வெளியிட்டுள்ளனர்.

அணை பலவீனமானது என்ற கேரளத்தின் குற்றச்சாட்டு எவ்வளவு பொய்யானது என்பதை அம்மாநிலத்தின் அட்வகேட் ஜெனரல் தண்டபாணி கேரள உயர் நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் சமர்ப்பித்துள்ள அறிக்கையே எடுத்துக்காட்டுகிறது. அதனை இந்த ஐயர் படித்திருக்க நியாயமில்லை. ‘‘முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்துக்கும் அணையின் பாதுகாப்புக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அணை உடைந்தாலும் அதன் நீர் அதற்குக் கீழ் உள்ள இடுக்கி, செறுதோணி, குளம்மாவு அணைகளுக்குப் போய்ச் சேரும். இந்த அணைகள் அந்தத் தண்ணீரைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு வலிமை பெற்றவையாகும். செறுதோணி அணையின் நீரைத் திறந்துவிட்டால் நேராக அரபிக்கடலுக்குச் சென்றுவிடும்'' என்று தண்டபானி தனது அறிக்கையில் சமர்ப்பித்துள்ளார். கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவரைக் கொண்ட ஆயமும் முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரள அரசின் அட்வகேட் ஜெனரல் கேரள உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துகள் திருப்திகரமாக இருந்தன என்றும் குறிப்பிட்டுள்ளது. இதையெல்லாம் இந்த ஐயர் எவ்வளவு வசதியாக மறந்துவிட்டுப் பேசுகிறார்!

முல்லைப் பெரியாறு அணை உடையும் என்று மலையாளிகளிடம் அண்மையில் எழுந்துள்ள அச்ச உணர்வு திட்டமிட்டு அங்குள்ள அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டது என்பது ராமசாமி ஐயர் போன்றோருக்குத் தெரியாததல்ல. அனால் தமிழர்களுக்கான வாழ்வாதாரமாக அமைந்துள்ள இந்த அணையை உடைக்க வேண்டும் என்ற ஒரு பொதுக் கருத்தை இந்தியா முழுக்க ஆங்கில ஊடகங்கள் மூலமாக இவர்கள் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். Economic and Political Weekly, Tehelka போன்ற வார ஏடுகளிலும், Down To Earth போன்ற சுற்றுச்சூழல் இதழ்களிலும் இந்த விஷமப் பிரச்சாரத்தை மலையாள எழுத்தாளர்கள் இதுபோன்ற ஐயர்கள் ஐயங்கார்களின் ஆதரவோடும், அனுசரணையோடும் மிகத்தீவிரமாக கொண்டு சென்று கேரளாவிற்கான நியாயத்தை இந்திய அளவில் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். திட்டமிட்டு ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் தங்களுக்கான ஊடகத் தளத்தைக் கொண்டு அவர்களால் ஊதிப் பெரிதாக்க முடிகிறது. கடந்த பல ஆண்டுகளாக இதற்கான வலுவான தளம் இந்திய அளவில் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

        பால் சக்காரியா போன்ற மனசாட்சி உள்ள ஒன்றிரண்டு மலையாளிகளின் குரல்கள் மட்டுமே இந்தப் பிரச்சனையில் உண்மையின் பக்கம் நின்று மாறி ஒலிக்கின்றன. ‘‘கேரள அரசியல்வாதிகளும், மலையாள ஊடகங்களும் மலையாளிகளிடம் உருவாக்கி வைத்துள்ள மாஸ் ஹிஸ்டீரியாவின் (கும்பல் மனோபாவத்தின்) வெளிப்பாடுதான் முல்லைப் பெரியாறு பிரச்சனை'' என்று ஆனந்த விகடன் இதழுக்கு (28.12.2011) அளித்துள்ள பேட்டியில் இலக்கியவாதியும், சாகித்ய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளருமான பால் சக்காரியா இந்த உண்மையைப் போட்டு உடைத்துள்ளார். அதோடு அவர் நிற்கவில்லை. ‘‘40 நதிகள் ஓடும் கேரளத்தில் வெறுமனே 8 விழுக்காடுத் தண்ணீரைத் தான் மலையாளிகள் பயன்படுத்துகிறோம். வீணாக ஓடி அரபிக் கடலில் கலக்கும் மீதி 92 விழுக்காட்டுத் தண்ணீரில் முல்லைப் பெரியாறு அணை மூலம் தமிழகத்திற்குச் செல்லும் நீர் கேரளாவிற்கு ஒரு பொருட்டே அல்ல. அதுவும் அந்த நீர்தான் தமிழகத்திலிருந்து கேரளாவிற்குச் செல்லும் அரிசி, காய்கறிகள், பால், உணவுப் பொருட்களுக்கான ஜீவநாடி என்பதை மலையாளிகள் நன்றாகவே உணர்ந்துள்ள போதிலும், இவ்வாறு மலையாளிகள் பிடிவாதம் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாது'' என்று பால் சக்காரியா கூறுவதற்கு அந்த ராமசாமி ஐயர் என்ன பதில் வைத்திருக்கிறார்? 

‘மலையாளியாக' சுருங்கிப்போனமனிதஉரிமைப்போராளி வி.ஆர்.கிருஷ்ணஐயர்
உலகம் முழுவதும் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண ஐயர் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் தன்னை நூறு சதவீதம் மலையாளியாகக் காட்டத் தயங்கவில்லை; அதற்காக அவர் வெட்கப்படவில்லை; அணையை இடிக்க வேண்டும் என்று வெற்றுக் கூச்சல் போடும் உம்மன்சாண்டி, அச்சுதானந்தன் போலவே இவரும் பேசுவது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது; வருத்தப்பட வைக்கிறது. தனது கருத்துக்கு ஆதரவாக சுற்றுச்சூழல் குறித்த ரியோ பிரகடனத்தையும் எடுத்துக் காட்டி, ‘‘முல்லைப் பெரியாறு அணையின் வலு குறித்த ஐயம் எழுந்தாலோ, அவ்வணை இடிந்து விழும் வாய்ப்பு உள்ளது என்ற அச்சம் எழுந்தாலோ அதனை இடித்து விடுவதுதான் சுற்றுச்சூழலுக்கும் கேரள மக்களுக்கும் பாதுகாப்பானது. இதற்கு அறுதியான முழு அறிவியல் ஆதாரத்தை எல்லாம் கேட்கக் கூடாது'' என்றெல்லாம் கூறுகிறார். எவ்வளவுதான் மனித உரிமைக்காக குரல் கொடுத்தாலும் தன் இனம் என்று வரும்போது, கிருஷ்ண ஐயர், ஐயராகவும் மலையாளியாகவும்தான் இருக்கிறார் என்பதுதான் அடிப்படை உண்மை! நாம்தான் பெரும்பாலான வேளைகளில் இவர்களைப் புரிந்துகொள்ளத் தவறுகிறோம்.

இதைவிட ஒருபடி மேலே போய் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த நாராயண குரூப் என்ற மலையாளி, ‘‘கேரள அரசு இன்னும் தைரியமாக இருக்க வேண்டும். புதிய நிலைமை எழுந்துள்ளதை கருத்தில் கொண்டு 1886 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட 999 ஆண்டுக்கான குத்தகை ஒப்பந்தத்தை கேரள அரசு தமிழகத்தின் கருத்தைக் கேட்காமலே ஒருதலைப்பட்சமாக ரத்து செய்துவிட வேண்டும்'' என்று பரிந்துரைக்கிறார். இதுபோன்ற செய்திகளை இந்து நாளேட்டில் இந்தியா முழுவதும் செல்லக்கூடிய பகுதியில் பதிவு செய்துவிட்டு (Intervene in Dam Issue, Krishna Iyer urges PM, அணைப் பிரச்சனையில் தலையிடுங்கள், கிருஷ்ண ஐயர் பிரதமரை வலியுறுத்தினார், டிசம்பர் 11, 2011), தமிழகத்திற்கான நியாயத்தை விளக்கும் நமது வல்லுநர்கள், பொறிஞர்களின் விளக்கங்களையும், கட்டுரைகளையும் (தமிழகப் பொதுப் பணித்துறையில் நிர்வாகப் பொறியாளராக ஓய்வுபெற்ற சி.சுதந்திர அமல்ராஜ் இந்து ஏட்டுக்கு 02.12.2011 அன்று வழங்கிய கருத்துக்களும், தமிழக அரசின் நீர்வளத்துறை ஆலோசகர் மோகன் கிருஷ்ணன் எழுதிய Mullaperiyar Dam is as good as new (முல்லைப் பெரியார் அணை புதியதாகக் காட்சியளிக்கிறது என்ற தலைப்பில் 01.01.2012 அன்று இந்து பத்திரிகை வெளியிட்ட கட்டுரையும்) தமிழகச் செய்திகளாக மட்டுமே சுருக்கிப் போடுவது என்ன பத்திரிகை தர்மமோ? என்ன நடுநிலையோ?

பலவீனமானதுமுல்லைப்பெரியாறா? இடுக்கிஅணையா?
நிலநடுக்கம் நிகழக்கூடிய பகுதியில் இடுக்கி மாவட்டம் இருப்பதாக கூறும் கேரள அரசியல்வாதிகள் ஒரு விஷயத்தை வசதியாக மறந்துவிடுகிறார்கள். முல்லைப் பெரியாறு அணை உடையும் அளவிற்கு வரும் நிலநடுக்கம் இடுக்கி அணையையும் விட்டுவைக்கப் போவதில்லை. ஏனெனில் இடுக்கி அணையை விட முல்லைப் பெரியாறு அணை வலுவாகவும், புதுப்பொலிவோடும் இருப்பதாக வல்லுநர்களே கருத்துத் தெரிவிக்கின்றனர். 1980 முதல் 2001 வரை முல்லைப் பெரியாறு அணை பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டபின், இவ்வணையின் கீழ்மட்ட அகலம் 200 அடி ஆகும். இவ்வளவு அகலமான கீழ்மட்டக் கட்டுமானம் உள்ள அணை உலகிலேயே இது ஒன்றுதான் என்று பொறிஞர்கள் கூறுகின்றனர். எகிப்திலே உள்ள மிகப் பிரம்மாண்டமான அணையான அஸ்வான் அணையின் கீழ்மட்ட அகலம்கூட 116 அடிதான். 1976ஆம் ஆண்டு கேரள அரசு கட்டியுள்ள இடுக்கி அணையின் கீழ்மட்ட அகலம் வெறும் 56 அடிதான். ஆனால் இடுக்கி அணையின் உயரமோ 555 அடியாகும். முல்லைப் பெரியாறு அணையைவிட பல மடங்கு பெரிய அணையான இடுக்கி அணை உடைந்தால் பாதிப்புகள் மிக அதிகமாகும். அப்படியானால் இடுக்கி அணையைத் தான் முதலில் உடைக்க வேண்டும்.

ஒரு வாதத்திற்காக முல்லைப் பெரியாறு அணை உடைவதாக வைத்துக் கொண்டாலும்கூட, அதிலிருந்து வெறும் 8 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே வெளியேறும். அவ்வாறு வெளியேறும் நீர் நேராக இடுக்கி அணைக்குப் போகும் வகையில்தான் அணையின் அமைப்பே உள்ளது. இடுக்கி அணையின் கொள்ளளவோ 70 டி.எம்.சி. ஆகும். எனவே முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் வெளியேறும் நீர் முழுவதையும் இடுக்கி அணை தாங்கிக்கொள்ளும். இந்த உண்மை நிலவரங்களை நடுநிலையோடு மக்களுக்குச் சொல்ல இந்த ஆங்கில ஊடகங்கள் ஏன் மறுக்கின்றன?

முல்லைப் பெரியாறு தண்ணீர் முழுவதும் அணையை ஒட்டியுள்ள மிக ஆழமான பள்ளத்தில்தான் விழும். அங்கு எந்தச் சமவெளிப் பகுதியும் இல்லை; குடியிருப்புப் பகுதிகளும் இல்லை. அங்குள்ள மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. ஆனால் அணை உடைந்தால் 35 இலட்சம் மலையாளிகள் பாதிக்கப்படுவார்கள் (அண்மையில் 50 இலட்சம் என்று உம்மன்சண்டி கூறுகிறார்) என்று பீதியை மலையாள அரசியல்வாதிகள் உருவாக்கி வருகிறார்கள். ‘பாதிப்பு ஏற்பட்டால் அணைப் பகுதியில் வசிக்கும் வெறும் 450 குடும்பங்களை வெளியேற்ற வேண்டியிருக்கும்' என்று கேரள அரசு பிளீடர் ரோஷன் டி அலெக்சாண்டர் கேரள உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இச்செய்தியை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு கடந்த டிசம்பர் 3ஆம் தேதி செய்தியாகப் பதிவு செய்துள்ளது. அவர்கள் சொல்வதுபோல 35 அல்லது 50 இலட்சம் பேர் எப்படி மூழ்கடிக்கப்படுவர்? கேரளாவில் ஐந்து மாவட்டங்களைப் பாதிக்கும் அளவுக்கு தண்ணீர் எப்படி வரும்? என்ற அறிவுக்கு ஒவ்வாத கேள்விகளை இந்த ஊடகங்கள் ஏன் எழுப்ப மறுக்கின்றன?

பெரியாறு ஆற்றங்கரை ஓரம் உள்ள குடியிருப்புப் பகுதிகள் அனைத்தும் பெரியாறு அணைக்கு மேலேதான் அமைந்துள்ளன. குமுளி நகரம் கடல் மட்டத்திலிருந்து 3,350 அடிக்கு மேலும், எலாப்பரா நகரம் 4,850 அடிக்கு மேலும் உள்ளன. முல்லைப் பெரியாறு அணையோ கடல் மட்டத்திலிருந்து 2,270 அடியில் கட்டப்பட்டுள்ளது. கீழேயிருந்து தண்ணீர் எப்படி ஆயிரம் அடிகளுக்கு மேல் நோக்கிப் பாயும்? இதையெல்லாம் கேள்வி கேட்காமல் மலையாளிகளின் வாதங்களை அப்படியே ஆங்கிலத்தில் வாந்தி எடுத்துவிட்டுப் போவதற்காகவா பத்திரிகைகள் நடத்த வேண்டும்?

உண்மையில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை மலையாளிகளுக்கு ஒரு பிரச்சனையே அல்ல. தமிழர்களுக்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது என்பதுதான் அவர்களது உள்நோக்கம். இடுக்கி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள பெரியாறு அணையை தமிழ்நாடு மேலாண்மை செய்ய உரிமை பெற்றிருப்பது மலையாளிகளால் ஜீரணிக்க முடியவில்லை. இதுதான் பிரச்சனைக்கான அடித்தளம். இப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும் மலையாளிகள் புதிய அணை கட்டி தமிழர்களுக்குத் தண்ணீர் தரப்போகிறார்களாம்! வேடிக்கையாக இருக்கிறது! கேரளக் காங்கிரஸ் (ஆ) கட்சியின் பாலகிருஷ்ணபிள்ளை பாசனத்துறை அமைச்சராக இருந்தபோது கேரள சட்டமன்றத்தில், ‘ஒரு சொட்டு நீரைக்கூட தமிழகத்திற்கு கேரளா கொடுக்காது' என்று கொக்கரித்த போது கேரள ஒட்டுமொத்த சட்டமன்றமும் கரவொலி எழுப்பி ஆமோதித்தது. இதையெல்லாம் பார்க்கும்போது மலையாளிகளிடம் நிலவும் தமிழர் விரோதப் போக்கும், வன்மமும் வெளிப்படவில்லையா? இதைத் தட்டிக்கேட்க திராணி இல்லாத இந்த ஆங்கில ஏடுகள் தமிழர்களை வன்முறையாளர்களாகச் சித்தரிக்க முனைகிறது; நம்மிடம் எந்த நியாயமும் இல்லை என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கி வருகின்றன. இவையெல்லாம் ‘நடுநிலைமை, நியாயமான செய்திப் பதிவு' என்ற பதாகையின் திரைமறைவில் நடப்பவை!

சிங்களஇனவெறியன்ராஜபட்சேவின்கை க்கூலிஇந்துராம்
2009ஆம் ஆண்டு நடந்த ஈழப்போரின் போது முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சம் அப்பாவித் தமிழர்கள் சிங்கள இனவெறி அரசால் கொடூரமாகக் கொல்லப்பட்டதை உலகின் பல பகுதிகளிலிருந்தும் பத்திரிகைகளும், மனித உரிமை அமைப்புகளும் கண்டித்து எழுதியபோது, அப்படுகொலைகளை நியாயப்படுத்தி எழுதியது இந்து நாளேடு! நாஜி இட்லரைவிட கொடூரமான கொலைகாரனான சிங்கள இனவெறியன் ராஜபட்சேவை மிகப்பெரிய சனநாயகவாதியாகவும், அரசியல் சாணக்கியராகவும் தொடர்ந்து சித்திரித்தது இந்தப் பத்திரிகை! இலங்கை இனவெறி அரசுக்குத் துணை நின்று அப்பாவித் தமிழர்களைக் கொல்வதற்கு அனைத்து வகையிலும் துணைநின்ற இந்திய வல்லாதிக்க அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து, எதையும் எழுதத் துணியவில்லை. ஈழப்பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு வடிவமும் செயல்திட்டமும் அமைத்துக் கொடுத்த மலையாள அதிகாரிகளான எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், நிரூபமா ராவ் மேனன், ஐ.நா. அதிகாரி விஜய் நம்பியார் மற்றும் அவரது சகோதரர் சதீஷ் நம்பியார் போன்ற தமிழர் விரோதிகளின் சதித் திட்டங்களைக் கண்டித்தும், எதிர்த்தும் ஒரு கட்டுரையோ, செய்தியோ வெளியிடவில்லை இந்தப் பத்திரிகை. (ஈழத்தமிழருக்கு எதிரான இனப்படுகொலையில் மேற்சொன்ன மலையாள அதிகாரிகளோடு கூட்டுச் சதியில் பங்கு கொண்ட இந்து ராம் எப்படி இந்திய அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து எழுதுவார் என்று எதிர்பார்க்க முடியும்?)

2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின், ஈழப்போர் முடிவுக்கு வந்த பின்னரும் கூட வன்னி வதைமுகாம்களில் அடிப்படை உரிமைகள் ஏதுமின்றி ஆடுமாடுகள் போல் அடைத்து வைக்கப்பட்ட மூன்று இலட்சம் ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமைகள், அவமானங்கள் பற்றியோ, அங்கு தமிழ்ப் பெண்கள் சிங்கள இராணுவ வெறியர்களால் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டது குறித்தோ, தமிழ்ப் பகுதியில் தொடர்ந்து வரும் அரக்கத்தனமான சிங்களமயமாக்கல் இனவெறி இராணுவ ஆட்சி பற்றியோ எந்தக் கட்டுரையும் இந்து நாளேடு இதுவரை வெளியிடவில்லை. மாறாக சிங்கள இனவெறியன் இராஜபட்சேவை பலமுறை நேர்கண்டு அவனது ஊதுகுழலாகவே செயல்பட்டவர் இந்து ராம்!

இலண்டனிலிருந்து இயங்கும் சர்வதேச பொதுமன்னிப்புச் சபை, நியூயார்க் நகரில் செயல்படும் மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு, ஐ.நா. சபையின் மனித உரிமைக் கவுன்சில் போன்ற அமைப்புகளே வன்னி வதை முகாம்களில் நிலைமை அவ்வளவு மோசமாக உள்ளன; ஈழத்தமிழர்கள் இலங்கையில் மிகக் கொடூரமாகவும், கேவலமாகவும், இரண்டாம்தரக் குடிமக்களாகவும் நடத்தப்படுகிறார்கள் என்று தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டபோது, இராஜபட்சே உபசரித்த விருந்தை அவனோடு வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு, இலங்கை அரசின் ஹெலிகாப்டரிலே வன்னி சென்று, சிங்கள இராணுவப் படையினர் காட்டிய முகாம்களைப் பார்த்துவிட்டு, தமிழகம் வந்து வன்னி முகாம்கள் மிகச் சிறப்பாக இருந்தன என்று நம் காதில் பூ வைத்தவர் இந்து ராம்! இவர்களின் நடுநிலைமையையும், உழைக்கும் வர்க்கத்தின்பால் இவர்களுக்குள்ள நியாய உணர்வையும் பார்த்து தமிழகமே கைகொட்டிச் சிரித்தது! அப்படிப்பட்ட இந்துராம் ஆசிரியராக மேலாண்மை செய்யும் இந்து பத்திரிகையும், அதன் இருவார ஏடான ‘பிரண்ட்லைன்' இதழும் தமிழர்கள் மீது எவ்வளவு வன்மத்தோடு எழுதும் என்பதை இப்போது புரிந்துகொள்ளலாம்.

தமிழர்கள் உரிமையோடும், கண்ணியத்தோடும், மானத்தோடும், மரியாதையோடும், வளமோடும், நமக்கான சூழலில் நல்ல வாழ்வாதாரங்களோடும் வாழக்கூடாது என்று கங்கணங்கட்டி அலையும் இந்து ராம் போன்றோர், நமக்கு எதிராக அரசியல் பொருளியல் பண்பாட்டுத் தளங்களில் திட்டமிட்டு தங்களது வேலைத் திட்டத்தை மிகத் தெளிவாக தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலப் புலமை, பரந்து விரிந்த ஊடகத்தளம், மேட்டுக்குடியினர் மத்தியில் ஏற்கெனவே உருவாக்கி வைத்துள்ள ஆங்கில வாசகர்தளம், ‘பார்ப்பனர் என்ற ஒரே தகுதியிலே' கிடைக்கப் பெற்ற அகில இந்திய பன்னாட்டுத் தொடர்புகள், மத்தியமாநில அரசு அதிகார மையங்களில் செல்வாக்கு, பார்ப்பன பனியா வணிக வட்டங்களின் வலைப்பின்னல்கள் போன்றவற்றை மிக நேர்த்தியாகப் பயன்படுத்தி, தமிழர்களுக்கு எதிரான வேலைகளைச் செய்து வருகிறார்கள். காலங்காலமாக நம்மை அவர்களுக்கான எடுபிடிகளாகவும், ஏவலாட்களாகவும் வைத்திருக்க திட்டமிட்டு செயல்படுகிறார்கள். நமக்கான அரசியல் உரிமைகள் கிடைத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். நாம் ஒன்று சேரவிடாமல் நமக்குள்ளே மோதல்களை பிரிவினைகளை உருவாக்கி அல்லது இருக்கின்ற சிறுசிறு பிளவுகளை ஊதிப் பெரிதாக்கி பத்திரிகைகளில் அவற்றை வெளியிடுவதை ஒரு யுக்தியாகவும் வைத்துள்ளனர்.

தமிழர்களின்அடிமைமனோபாவம்ஆங்கில ஏடுகளின்மூலதனம்
       ‘இந்து' பத்திரிகையிலும், ‘பிரண்ட்லைன்' இருவார இதழிலும் இந்திய அகில உலகப் பிரச்சனைகள் குறித்த விரிவான பல ஆய்வுக் கட்டுரைகள் வெளிவருவதால் தரமான ஏடுகள் என்று ஆங்கிலம் பேசும் மத்திய தர மக்களில் பலர் எண்ணுகின்றனர். இந்து நாளேட்டை கையில் வைத்திருப்பதே அந்தஸ்து என்று கூட சில மெத்தப்படித்த மேதாவிகளும், நுனிநாக்கில் அரைகுறை ஆங்கிலம் பேசும் ஒரு பெருங்கூட்டமும் புளங்காகிதம் அடைவதுண்டு. இக்கூட்டத்தின் ஆங்கில அடிமைச் சிந்தனையையும், அரைவேக்காட்டு மனோபாவத்தையும் மூலதனமாகக் கொண்டு இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஆங்கில ஏடுகள் நல்ல வியாபாரம் செய்யும் யுக்திகளை கையாளுகின்றன. இதில் நடுநிலைமை, நியாயமான செய்திப் பதிவு என்று இந்த ஏடுகள் சொல்வது பொய்மையும், பித்தலாட்டமுமே! எந்த மொழியில் எழுதினாலும், எப்படிப்பட்ட பதிவுகளைச் செய்தாலும் நேர்மையும், நியாய உணர்வும், அடிமட்ட மக்களின் நலன் நோக்கிய பார்வையும்தான் பத்திரிகை தர்மத்திற்கான அடிப்படையாக இருக்க வேண்டுமே தவிர, தான்தோன்றித்தனமும், ஒருதலைப்பட்சமான பார்வையும், வணிக நோக்கும், மக்கள் விரோதப் போக்கும் எப்படி ஒரு நல்ல இதழுக்கு அழகு சேர்க்கும்? அட்டைப் படமும் தாள்களும் பளபளப்பாகவும், ஆங்கிலத்தில் செய்திகளும் அமைந்தால் மட்டும் போதாது.

இந்துராமின்முற்போக்குமுகமுடி
மத அடிப்படைவாத, இந்துத்துவ எதிர்ப்பு, மனித உரிமைகள், மதச் சிறுபான்மையினர் உரிமைகள், தனிநபர் சுதந்திரம், சனநாயகம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, மார்க்சிய சிந்தனை, தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் உரிமைகள், பெண்களின் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற தலைப்புகளில் இந்திய உலக அளவில் நடைபெறும் போக்குகள் குறித்தும், அவ்வப்போது ஒருசில கட்டுரைகளைத் தாங்கி இந்து, பிரண்ட்லைன் ஏடுகள் வெளிவருகின்றன என்று எண்ணலாம். முற்போக்குச் சிந்தனை கொண்ட வாசகர்களுக்கு இவ்வாறு கொஞ்சம் தீனிபோட்டுவிட்டு, அதன் வழியாக கிடைக்கப்பெறும் முற்போக்கு முகமுடியை அணிந்து கொண்டு வலம் வருகின்றன, இந்த ஏடுகள்.

உலகமெல்லாம் நடக்கும் போக்குகளுக்கு ஒரு நீதியை வைத்துக்கொண்டு, தமிழர் நலன் என்று வரும்போது முற்றிலுமான எதிர்நிலையை மிகச் சாதுரியமாக கையாளும் போக்கு இந்து இதழுக்குக் கைவந்த கலை! இவ்வாறு உருண்டு பிரண்டு எழுதுவதற்கு மார்க்சியச் சிந்தனைகளையும் துணைக்கு அழைத்துக் கொள்வதுதான் இந்த பூணூல் மார்க்சியவாதியின் வேலை! ‘உழைக்கும் வர்க்கம் ஒன்றுபட்டு போராட வேண்டும்' என்று குரல் கொடுத்த புரட்சியாளன் கார்ல் மார்க்ஸூக்கும், அவரது சிந்தனைகளுக்கும் கூட இவர்கள் பூணூல் போட்டு அழகு பார்த்தாலும் வியப்பதற்கு ஏதுமில்லை; இந்தியப் புவிப் பரப்பில் மார்க்சியப் புரட்சிகரச் சிந்தனை சிறிய அளவில் கூட அரும்பிவிடக் கூடாது என்று நாள்தோறும் அதற்காகவே மூளையை கசக்கி மிகக் கவனமாக வேலை செய்யும் இந்த முற்போக்குகள், இந்துத்துவம் பேசும் மதவெறியர்களைவிட ஆபத்தானவர்கள்; அவர்களை விட பல மடங்கு மோசமான பயங்கரவாதிகள்! முன்னவர்களை எளிதில் இனம் காணலாம்; எதிர்த்துக் களம் அமைக்கலாம். ஆனால் இவர்களோ முற்போக்கு, மார்க்சிய சாயம் பூசி வருவதால் நாம் ஏமாந்து போக வாய்ப்புள்ளது.

மேம்போக்காக, யதார்த்தமாக இந்து பத்திரிகையைப் படிப்பவர்களுக்கு இந்த சூட்சுமத்தைக் கண்டுணர பல ஆண்டுகள் ஆகலாம்! இவர்களின் நியாய முகமுடி ஈழப்போரின் போது அப்பட்டமாக கிழிந்து தொங்கியதை தமிழகமே கண்டு காரித்துப்பியது! இவர்களது இந்துத்துவ எதிர்ப்பு காஞ்சி சங்கராச்சாரியார் வழக்கில் சந்தி சிரித்தது! அதே வேலைகளை இப்போது முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையிலும் இந்து ஏடு துணிந்து செய்யத் தொடங்கிவிட்டது. ஈழப்போரில் அப்பாவித் தமிழர்களை பயங்கரவாதிகள், தமிழ்த் தீவிரவாதிகள், வன்முறையாளர்கள் என்றெல்லாம் முத்திரை குத்தி சர்வதேச அரங்கில் ஈழப் படுகொலைக்கு நியாயம் கற்பித்த இந்துப் பத்திரிகைக் கும்பல், இப்போது முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் அதேபோன்ற பொய்யான புனைக் கதைகளை அவிழ்த்துவிட முகாந்திரம் தேடி முச்சந்தியில் நின்று கொண்டிருக்கிறது.

இந்தியன்முதல்நிலை; தமிழர்இரண்டாம்தரம்
ஆஸ்திரேலியாவிலோ, அய்ரோப்பாவிலோ, சீனாவிலோ தமிழர் அல்லாத வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்தியன் எவனாவது தாக்கப்பட்டாலோ, அடிபட்டாலோ அப்படிப்பட்ட செய்திகளை முதல் பக்கச் செய்திகளாக்கி அல்லது இந்திய அளவிலான செய்திகளாகப் பதிவு செய்து இந்திய வெளியுறவுத் துறையின் கவனத்தை ஈர்க்குமாறு செய்வது இவர்களது வேலை. அதுபோன்ற சம்பவங்களில் இந்தியத் தூதரகங்களைத் தொடர்பு கொண்டு உடனே ஏதாவது தலையீடுகளைச் செய்யும் வகையில் பூதாகரமாக செய்திகளாக்கி பரபரப்பாக்கி விடுகின்றனர். ஆனால் மலோசியா, சிங்கப்பூர், அரேபிய நாடுகள் போன்றவற்றில் கூலித் தமிழர்கள் தாக்கப்பட்டாலோ, அல்லது இனவெறியர்களால் அந்த நாடுகளில் நம் தமிழர்கள் கொலை செய்யப்பட்டாலோ, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டாலோ சாதாரண செய்தியாகக் கூட இந்த ஏடுகளில் வெளிவராது! அப்படியே அவற்றைப் பதிவு செய்தாலும் அவற்றை மாநிலச் செய்திகளுக்கான பக்கங்களில் ஒரு மூலையில் சிறிய செய்திகளாக்கி, போகிற போக்கில் அவற்றைப் போட்டுவிட்டு போகின்ற மனோபாவம்தான் அவர்களிடம் உள்ளது.

அண்மையில் நடந்த சம்பவம் இந்த கூற்றுக்கு சரியான எடுத்துக்காட்டாக அமையும். சீனாவின் யுவு பகுதியில் இரண்டு இந்தியர்கள் (தமிழர் அல்லாத வேறு மாநிலத்தவர்கள்) ஒருசில சீனர்களோடு அவர்கள் சொந்த தொழிற்போட்டி காரணமாக தாக்கப்பட்டு பணயக் கைதிகளாக விடுதி ஒன்றில் காவலுக்கு வைக்கப்பட்டுள்ள செய்தியை ஜனவரி மாதம் முதல் வாரத்தில் மூன்று நான்கு நாட்களாக இந்து நாளேடு பெரிய தலைப்புச் செய்திகளாக வெளியிட்டு, இந்திய வெளியுறவுத் துறையின் கவனத்தை ஈர்க்க அனைத்து வழிகளையும் செய்தது. இதையொட்டி Lessons from Yiwu (யுவுவிலிருந்து படிப்பினைகள்) என்ற தலைப்பில் ஒரு தலையங்கமே இந்து நாளேடு சனவரி 7ம் தேதி தீட்டியது.

       Indian Traders Freed after days of Detention in Yiwu (யுவு நகரில் பல நாட்கள் சிறை வைக்கப்பட்ட இந்திய வணிகர்கள் விடுவிப்பு) என்று தலைப்பில் 05.01.2012ம் தேதி தலைப்புச் செய்தியும், In Chinese Trading Town, Disputes and Strains fuel mistrust of India, (சீன வணிக நகரில், வர்த்தக ரீதியான, சர்ச்சைகளும் இறுக்கங்களும் இந்தியாவின் மீது அவநம்பிக்கையை அதிகரிக்கின்றன), என்ற தலைப்பில் அதே நாளில் கடைசிப் பக்கத்தில் கொட்டை எழுத்தில் பெரிய வண்ணப் படத்தோடு வந்த எட்டுப் பத்திச் செய்தியும் இந்து நாளேட்டில் இடம்பெற்றன. இந்தியா சீனா இரு நாடுகளுக்கிடையே நடக்கும் வர்த்தகப் பரிவர்த்தனையில் எழுந்த மோதல்களோ, சர்ச்சைகளோ அல்ல, இந்து நாளேடு குறிப்பிடும் இந்தச் செய்திகள். தனிப்பட்ட இரண்டு கம்பெனிகள், தனிநபர்களுக்கிடையே இருந்த கொடுக்கல் வாங்கல் காரணமாக எழுந்த சண்டைகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து எழுதுகிறது. அதேபோல சனவரி 6ம் தேதியிலும் இந்து ஏட்டின் கடைசிப் பக்கத்தில் 8 பத்திச் செய்தியாக பெரிய எழுத்தில் Indian Traders Face Uncertain Wait as China mulls action (சீனா நடவடிக்கை எடுக்கத் தாமதிப்பதால் இந்திய வணிகர்கள் நிச்சயமற்ற சூழலில் காத்துக்கிடக்கிறார்கள்) என்று எழுதி, கோடிகோடியாக பணத்தைக் கொட்டி சீனாவில் வணிகம் செய்யும் வடஇந்திய பெரு வணிகர்களின் நிலைக்காக இந்து ஏடு கண்ணீர் வடிக்கிறது; ஒட்டுமொத்த வாசகர்களின் கவனத்தையும் இந்த வட இந்திய வணிகர்களின் தெருச்சண்டையை நோக்கித் திருப்பும் ‘தேசியக் கடமையை' திறம்பட ஆற்றுகிறது.

இதுபோன்ற வேலைகளில் நூற்றில் ஒரு பங்குகூட நம் தமிழர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்ட நிகழ்வுகளில் முனைப்புக்காட்ட மறுக்கிறதே, இந்து பத்திரிகை! தமிழர்கள் மீது அவ்வளவு வெறுப்பும், எதிர்ப்பும் இந்து ராம் கும்பலுக்கு! இலங்கை இனவெறி கடற்படையால் தொடர்ந்து கொடூரமான தாக்குதல்களுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாகும் தமிழக மீனவர்களைப் பற்றிய செய்திகளை இந்திய வெளியுறவுத் துறையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைகள் என்றாவது பெரிய செய்திகளாக்கி வெளியிட்டதுண்டா? தமிழக மீனவர்களின் உயிரும், வெளிநாடுகளில் வசிக்கும் சாதாரண நம் தமிழ்த் தொழிலாளர்களின் உயிரும் அப்படி என்ன அற்பமாகிவிட்டது?

சனவரி 7ஆம் தேதி இந்து நாளேடு 12 Diamond Traders Return after detention in China (சீனாவில் தடுப்புக் காவலில் இருந்து திரும்பிய 12 வைர வணிகர்கள்) என்று தலைப்பிட்ட படத்துடன் கூடிய ஏழு பத்திச் செய்தியை 13ஆம் பக்கத்தில் (இந்தியா முழுமைக்குமான செய்தி) வெளியிட்டது. இந்தியாவுக்காக போரில் ஈடுபட்டு அல்லது தியாகங்கள் புரிந்து சிறை சென்று திரும்பிய தியாகிகளைப் பற்றிய செய்திப் பதிவோ என்று யாரும் தவறாக எண்ணிவிட வேண்டாம். 2009ஆம் ஆண்டிலே கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள வைரங்களைக் கடத்திய குற்றத்திற்காக சீன அரசு அதிகாரிகள் கைது செய்து சிறை வைத்த மும்பையைச் சேர்ந்த வைர வணிகர்கள் இந்தியத் தூதரக அதிகாரிகளின் பெருமுயற்சியில் வெளியே வந்த கதையை விவரிக்கும் பெரிய செய்தி. எதைச் செய்தியாக்க வேண்டும், அதற்கு அன்றைய ஏட்டில் எவ்வளவு இடம் ஒதுக்க வேண்டும் என்பது அந்தந்த ஏடுகளுக்கு உள்ள உரிமை. இதில் தலையிடுவதற்கு நமக்கு உரிமை ஏதும் இல்லை. ஆனால் இப்படிப்பட்ட சார்புகளையும், விருப்பு வெறுப்புகளையும் தங்களது பத்திரிகை முழுவதும் சுமந்து கொண்டு ‘நடுநிலைமை, சார்பற்ற நியாய நிலை' என்றெல்லாம் இவர்கள் ஏன் பிதற்ற வேண்டும்?

வைரங்களைக் கடத்திய குற்றத்திற்காக சீனாவில் தடுப்பு முகாம்களில் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கும் வடஇந்திய வைர வணிகர்களுக்காக வரிந்துகட்டி பக்கம் பக்கமாக எழுதும் இந்து ஏடு, சோமாலியக் கடற்கொள்ளையர்களால் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக சிறைப்பிடிக்கப்பட்டு சித்திரவதைகளை இன்றும் அனுபவித்து வரும் ஏழு கப்பல் மாலுமிகளை மீட்டுத்தரக் கோரி தூத்துக்குடியில் சனவரி 6ஆம் தேதி மீனவப் பெண்கள் சார்பில் நடைபெற்ற மிகப்பெரிய உண்ணாவிரதத்தை அதற்கு மறுநாள் (சனவரி 7ஆம் தேதி நாளைய) தமிழ்நாட்டுச் செய்தியாக சுருக்கிப் போட்டுள்ளது. வடஇந்திய வைர வணிகர்களுக்கான ஏழு பத்திச் செய்தி 13ஆம் பக்கத்தில் இந்திய அளவிலான செய்தியாகவும், கடத்தப்பட்ட எமது தமிழக மாலுமிகளை விடுவிக்கக் கோரி தூத்துக்குடியில் நமது மீனவப் பெண்கள் நடத்திய உண்ணாவிரதச் செய்தி 4 பத்தியிலான தமிழகச் செய்தியாகவும் இடம்பெறுவதைக் காண்போர் இதற்குப் பின்னால் உள்ள அரசியலைக் கண்டுணராமலா இருப்பார்கள்?

இதில் வேடிக்கை என்னவெனில், 07.01.2012 அன்றைய இந்து நாளேட்டில் The glory and the blemishes of the Indian News Media (இந்தியச் செய்தி ஊடகங்களின் பெருமையும், தவறுகளும்) என்ற தலைப்பில் நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர் அமெர்த்தியா சென் எழுதிய முழுப்பக்க கட்டுரையை அவரது படத்தோடு பிரசுரித்துள்ளனர். சனநாயக இந்தியாவிற்கான மிக முக்கியமான சொத்தாக சுதந்திரமான ஊடகத்தைப் பற்றிய அவரது கருத்துக்கள் இதில் இடம்பெறுகின்றன. இன்றைய சூழலில் தரமான இதழியலுக்கு தடையாக இருக்கும் இரண்டு முக்கியமான சவால்களைப் பற்றி அவர் இக்கட்டுரையில் விவரிக்கிறார். துல்லியமாக செய்திகளை வழங்குவதில் எழுகின்ற குறைபாடும், செய்திப் பதிவில் இலைமறை காயாக இருக்கின்ற சார்புத் தன்மையும் என்ற இந்த இரண்டு சவால்களைப் பற்றி விவரிக்கிறார். எதைச் செய்தியாக்குவது, எவற்றை விடுவது என்ற ஊடகங்களின் ஊசலாட்டத்தில் உள்ள சார்பும், சாய்வும் வர்க்கப் பிரிவினைகளோடு தொடர்புடையதாகவே இருக்கிறது என்று அவர் தெளிவுபடுத்துகிறார். உண்மையில் இந்தியச் சூழலில் அவர் கூறும் வர்க்கப் பிரிவினைகளோடு, இன, மொழி ரீதியாக எழும் பாகுபாடுகளும் இதுபோன்ற ஊடகச் சார்பு நிலையைத் தீர்மானிக்கும் அடிப்படைக் காரணிகளாக அமைகின்றன என்பதுதான் யதார்த்தம். யாருக்குப் பொருந்துகிறதோ பொருந்தவில்லையோ, இந்தக் கட்டுரையை வெளியிட்ட இந்து ஏட்டுக்கு இது அப்படியே பொருந்தும்!

நாம்என்னசெய்யவேண்டும்?
நடுநிலை வேடம் போட்டு தமிழர் எதிர் நிலையை எடுத்து தொடர்ந்து நம் நலன்களுக்கு எதிராக எழுதி வரும் இந்த ஏடுகளின் போக்கைக் கண்டித்தோ, எதிர்த்தோ தமிழர் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் கட்சிகள், மக்கள் இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் எதுவும் செய்வதில்லை. குறைந்தது ஆசிரியர் கடிதங்கள் வாயிலாகக் கூட நமது எதிர்ப்பைப் பதிவு செய்வது கிடையாது. (ஈழப் பிரச்சனைக்குப் பின், இந்து ஏடு படிப்பதையே நம்மில் பலரும் விட்டுவிட்டோம் என்பது நல்ல அம்சம்). ஆனால் நம்முடைய மவுனத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மலையாள ஆங்கில பத்திரிகையாளர்களும், ‘இந்து' ராம் போன்ற பூணூல் புரட்சியாளர்களும் தமிழர் நலன்களுக்கு எதிராக எழுதுவதைத் தங்கள் பணியாகவே தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர். இதற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டாமா?
* முல்லைப் பெரியாறு அணையை உடைக்கத் துடிக்கும் மலையாளிகளின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் ஆங்கில ஏடுகளுக்கு மதுரையிலும், சென்னையிலும் என்ன வேலை? என்ற கேள்வியை நம் மக்கள் மத்தியில் எழுப்ப வேண்டும்.
* டைம்ஸ் ஆப் இந்தியா, இந்து போன்ற ஆங்கில பத்திரிகைகளின் அப்பட்டமான மலையாளச் சார்பு, தமிழர் விரோத போக்கைக் கண்டித்து, தமிழர் நலனில் அக்கறையோடு போராடும் அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் வெளிப்படையாக இப்பத்திரிகைகளுக்கு எதிராக அறிக்கைகள் விடவேண்டும்; அவற்றுக்கு பேட்டிகள், செய்திகள் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். நமக்கான நியாயத்தைகூட எழுதாதவர்களுக்கு நாம் ஏன் செய்தி தர வேண்டும்; நம்மை வைத்து அவர்கள் பிழைப்பு நடத்த நாம் ஏன் அனுமதிக்க வேண்டும்?
*இந்தப் பத்திரிகைகளில் மலையாள நிருபர்களின் ஆதிக்கம், அவர்களது வெளிப்படையான தமிழர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து அப்பத்திரிகை அலுவலகங்களுக்கு முன் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக்கள் நடத்த வேண்டும்;
*தமிழக அரசு இந்த ஏடுகளுக்குத் தரும் விளம்பரங்கள், சலுகைகளை நிறுத்துமாறு தமிழக அரசுக்கு நிர்பந்தம் தரவேண்டும்; நமது வரிப்பணத்தில் இதுபோன்ற பத்திரிகைகளுக்கு ஏன் விளம்பரங்களும் சலுகைகளையும் வழங்க வேண்டும்?
*முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் இந்தப் பத்திரிகைகளின் மலையாள ஆதரவுப் பிரச்சாரத்திற்கு எதிராக தமிழக மக்கள் மத்தியில் வலுவான கருத்துப் பரப்பல் செய்ய வேண்டும். குறிப்பாக, தேனி, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் சங்கங்கள், மாணவர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், வழக்கறிஞர் சங்கங்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புகள் போன்றவை மதுரையில் செயல்படும் இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை அலுவலகங்களுக்கு எதிரே அறவழியில் போராட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும். இப்பத்திரிகைகளின் அப்பட்டமான தமிழர் விரோத போக்கைக் கண்டித்து தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் சுவரொட்டிப் பிரச்சாரம் செய்ய வேண்டும். இப்பத்திரிகைகள் பேசும் ‘போலியான நடுநிலை' முகமுடியை நம் மக்கள் முன் கிழித்து எறிய வேண்டும்.

*முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் அணை என்பதைத் தாண்டி, இடுக்கி மாவட்டத்தை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது என்ற விவாதம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லப்பட்டு, அதிகமாக தமிழர்கள் வசிக்கும் இடுக்கி மாவட்டம் தமிழகத்தோடு இணைக்கப்பட வேண்டும் என்ற ரீதியில் தமிழகத்தில் போராட்டங்கள் தொடங்கப்பட்டால்தான் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு! அதை நோக்கிய நகர்வுகளே இப்பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்.




திருவனந்தபுரம் ஸ்ரீபத்மனாபர் திருக்கோவில்
பாதாள நிலவறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பொக்கிஷம்
தமிழ் நாட்டுக்கு உரிமப்பட்டதாகும்

கேரள உயர்நீதிமன்றத்தின் ஆணையால் ஸ்ரீபத்மநாபர் கோயிலில் பாதாள இரகசிய நிலவறைகளைத் திறந்து பார்த்ததில் (ஒரு அறை நீங்கலாக) இதுவரையிலும் சுமார் இரண்டு லட்சம் கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளும், இதர பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திறக்காமல் இருக்கின்ற ஆறாவது அறையைத் திறந்தால் அதில் விலை மதிப்பற்ற தங்கத்தினால் ஆன சாமி சிலைகள் ஏராளம் இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.

“C” பாதாள அறையில் இருந்த தங்க நகைகள், பாத்திரங்களில் குறிப்பிடத்தக்கவை, கழுத்துக்குடம், தங்க எழுத்தாணி, இதுகள் தவிர சிறியதும் பெரியதுமான ஏராளமான மோதிரங்கள், தங்க வளையல்கள், நெற்றிச்சுட்டி ஆகியவைகளும் கிடைத்தன. இந்த அறையின் ஒரு மூலையில் தங்கக்கட்டி, தங்க்கயிறு, நெல்மணி அளவிலான தங்க குண்டுமணிகள். நூற்றுக்கணக்கான தங்கச் செயின்கள், தங்கச் கம்பிகள், 50 பைசா அளவிலான தங்க நாணயங்கள், ஒரு பைசா அளசவிலான தங்க நாணயங்கள் காணப்பட்டன. 18 அடி நீளம் கொண்ட 214 கிலோ எடை கொண்ட 4 ராசட்த தங்கச் செயின்கள் இருந்தன. ஒரு சாக்கு நிறைய பெல்ஜியம் ரத்தினங்கள் இருந்தன”. (தினகரன் - 02.07.2011 – பக்.12)

இந்த நகைகளைப் பார்ககும் போது வேணாட்டுப் பெண்களோ, அல்லது வேணாட்டு தெய்வங்களோ அணிகின்றவைகளாகத் தோன்றவில்லை. இத்தகைய நகைகள் தமிழர்கள் மட்டுமே அணிகின்றவைகளாக உள்ளன. சிலப்பதிகாரக் காவியத்தில் தமிழ்ப் பெண்கள் அணிகின்ற அணிகலன்கள் குறித்த விவரம் காணப்படுகிறது.“கால்விரல் மோதிரம், பரியகம், நூபுரம், அரியகம், பாடகம், சதங்கை, அரையில் அணியும் முத்துவடம், முப்பத்திரண்டு வடத்தாலான முத்து மேகலை, மாணிக்கமும் முத்தும் இழைத்ததோள் வளையங்கள், மாணிக்கமும் வைரமும் அழுத்திய சூடகம், செம்பொன்வளை, நவமணிகள், சங்கவளை, பவழவளை, மாணிக்க மோதிரம், ஆகியவைகளே”.

“யவனம் ஏற்றி வந்து இறக்கிய பொன்னும் பகைவர்களிடமிருந்து கவர்ந்து கொண்டு வந்த பொன்னும், நாட்டிலேயே மண்ணைத் தோண்டியும், அரித்து எடுத்த பொன்னும், தமிழகத்தில் எங்கும் மலிந்து கிடந்தன”. (டாக்டர் கே.கே. பிள்ளை – தமிழக வரலாறு–1972 – பக் 142, 143)

ஸ்ரீபத்மனாபர் கோயில் இரகசிய அறைகளில் காணப்படுகின்ற நகைகள் மேலே சொல்லப்படுகின்ற நகைகளைப் போன்றே காணப்படுகிறபடியால், அவைகள் தமிழர்களுக்குச் சொந்தமானவைகள் என்பதில் வேறு கருத்திருக்க முடியாது.



இத்தங்க நகைகளுக்குப் பின்னால் பாண்டிய நாட்டு வரலாறு ஒன்று மறைந்து காணப்படுகின்றது. இத்தகையத் தங்க நகைக் குவியல் ஸ்ரீபத்மனாபசுவாமிக் கோவிலில் இருப்பதற்கு எக்காரணமும் இல்லையென்பது வரலாற்று ஆய்வாளர்களிடம் கணிப்பு. ஏனெனில் திருவிதாங்கூர் அரச பரம்பரையினர் சாத்வீகத்தில் பற்றுடையவர்களும், பிறநாடுகளின் சொத்துக்களை கொள்ளை அடித்து தங்கள் கருவூலகத்தை நிறைக்க வேண்டும் என்ற பேராசை உடையவர்களும் அல்லர். இறைபக்தி மிக்கவர்களான இக்குடும்பம் தங்களது நாட்டை “தர்மபூமி”யாக கோலோச்சி வந்தவர்களும் ஆவர். அகண்ட திருவிதாங்கூரை உருவாக்கிய மார்த்தாண்டவர்மா மகாராஜாவும் சிறு நாடுகளின் மீது படை நடத்துகின்ற வேளைகளில் அந்நாட்டு செல்வங்களை கவர்ந்து வரவில்லை. அவரக்குப் பிறகு நாட்டை ஆண்ட மன்னர்களும், ராணிமார்களும் ஆங்கில அரசின் பாதுகாப்பில் இருந்தமையால் ஆங்கிலேயர்களுக்கு கட்ட வேண்டிய திறையைக்கூட உரிய காலத்தில் கட்ட இயலாமல் திக்குமுக்காடியதாக வரலாறு கூறுகிறது. 

வேலுத்தம்பிதளவாய் திறை செலுத்த இயலாததால் ஆங்கிலேயர்களுடன் போர் செய்து தோல்வியைத் தழுவினார். இப்பேர்பட்ட இக்கட்டான நிதி நெருக்கடிகளிலும் இக்குவியல் குறித்து அவர்களுக்கு ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் நிச்சயமாக அதை எடுத்து வேலுத்தம்பிதளவாய் கப்பம் கட்டுவதற்காகப் பயன்படத்தியிருப்பார். ஆங்கிலேயருக்கு இவ்வாறு புதையல் இருப்பது தெரிந்திருந்தால் அவர்கள் இதை கைப்பற்ற முயன்றிருக்கலாம். ஆனால் இவர்களுக்குத் தெரியாமல் இந்த நகைப் புதையல் இருந்தமையால் அவைகள் இவர்கள் காலங்களுக்கு முன்பே இங்கே பத்திரமாக இருந்துள்ளன என்பது உறுதியாகிறது. கர்னல்மன்றோ அவர்கள் திருவிதாங்கூருக்கு ஆங்கிலப் பிரதிநிதியாகவும், திவானாகவும் பணியாற்றிய காலத்தில் இராணி லட்சுமிபாய் அம்மையாருக்கு தங்கக் குடை ஒன்றை அன்பளிப்பாக அளித்தார் என்று வரலாற்றுப் புத்தகங்களில் குறிக்கபட்டுள்ளதாக செய்தி வெளியானது (தினகரன்- 02.07.2011- பக். 12) ஆனால் இந்த தங்கக்குடை மேற்படி புதையல்களில் காணப்படவில்லை. ஆகையால் இந்த தங்கப் புதையலுக்கு வேறு வரலாறு உண்டு என்பது உறுதியாகிறது. எனவே தங்கக் குவியலுக்கும் வேணாட்டிற்கும் சம்பந்தமில்லை என்பது உறுதியான ஒன்றாகிறது.

பாண்டிய நாடு தெற்கே கன்னியாகுமரி முதல் கிழக்கே காவிரி ஆற்றங்கரை வரையிலும், வடக்கே கோயம்புத்தூர், நெல்லூர் வரையிலும் பரந்து கிடந்தது. அதன் தலைநகர் மதுரைப் பட்டணம் ஆகும்.

மதுரையை சடையவர்மன் சுந்தரபாண்டியனையடுத்து மாறவர்மன் குலசேகர பாண்டியன் முடிசூட்டிக் கொண்டான். (கி.பி. 1268 – 1310) “ …... பாரசீக வளைகுடாவின் மேல் உள்ள தீவுகள் துருக்கி, ஈராக்கு, குராசான் ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றில் காணப்படும் செல்வங்கள் பாண்டிய நாட்டினின்றும் பெற்றவையாம். அவனுடைய ஆட்சியும், நாட்டுவளமும் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து வந்துள்ளன. இவ்வாட்சி காலத்தில் அன்னிய நாட்டு மன்னரின் படையெடுப்பு ஒன்றேனும் நிகழ்ந்ததில்லை. பாண்டிய மன்னனும் ஒரு முறையேனும் நோய்வாய்ப்பட்டிலான். மதுரை அரசு பண்டாரத்தில் ஆயிரத்து இருநூறு கோடிப் பொன் சேர்ப்புக்கட்டி வைக்கப்பட்டுள்ளது. அஃதன்றி மத்து, மாணிக்கம், நீலம், பச்சை போன்ற நவரத்தினங்கள் அங்கு குவிந்து கிடக்கின்றன. மேலும் விளக்குவதற்கு சொற்கள் இல்லை…”. எனறு வெனீஸ் நாட்டு வழிப்போக்கனான மார்கோ பாலே பாண்டிய நாட்டு செல்வக் கொழிப்பை குறித்து எழுதுகிறார். (டாக்டர் கே.கே. பிள்ளை – தமிழக வரலாறு, மக்களும் பண்பாடும் - 1975- பக். 375, 377)

    மார்க்கோபோலோ மேலும் குறிப்படுகையில், “பாண்டியநாடு இந்தியாவிலேயே, மிகச் சிறந்த நாடு என்றும், அது பண்பும் மாண்பும் வாய்ந்ததென்றும், அந்நாட்டை ஐந்து பாண்டியர்கள் அரசாண்டு வந்தனர் என்றும், அவர்களுள் ஒருவன் சொண்டர் பாண்டாவர் (சுந்தரபாண்டி வேர்) என்பவன் முடிசூடிய மன்னன் என்றும், பாண்டி நாட்டில் மிகப் பெரிய வனப்புமிக்க முத்துக்கள் கிடைத்தனவென்றும், தாமிரபருணியின் கூடல் முகத்தில் இருக்கும் காயலபட்டணம் மிகப் பெரிய நகரம் என்றும், ஹார்மோஸ், கிரீஸ், ஏடன் அரேபியா ஆகிய நாடுகளிலிருந்து குதிரைகளையும், வேறு பலபண்டங்களையும் ஏற்றிக்கொண்டு வந்த மதக்கலகங்கள் அனைத்தும் காயலுக்கு வந்துதான் போகின்றன என்றும், காயல் பட்டினத்தில் வாணிகம் செழித்தோங்கி நடைபெற்று வந்ததாயும், பாண்டிய மன்னனிடம் அளவு கடந்த பொன்னும், மணியும் குவிந்து கிடந்ததெனவும், அவன் நீதியுடனும், நேர்மையுடனும் ஆட்சி புரிந்து வந்தான் எனவும், அவன் அயல் நாட்டு வணிகருடன் மிகுதியும் கண்ணோட்டம் உடையவன் என்றும் மார்கோ பொலோவின் குறிப்புகள் தெரிவிக்கின்றன”. (அதே புத்தகம்-பக் 376)

இதனைப் போன்றே பேராசிரியர் கே. இராஜைய்யன் அவர்களும் எழுதுகிறார்கள், காண்க:
 “ The foreign travelers who visited the pandya empire during the reign of Maravarman gives an account of the country. Marco polo, the Italian traveler, has stated”, the king possesses vast treasures and wears upon his person great store of rich jewells… An Arab traveler by name wassaf too visited the country . According to him the king was healthy and wealthy. His treasury was filled with gold and pearls.(Dr.K.Rajayyan – History of Tamil Nadu, past to present – 1995 – page 103).

இக் குறிப்புகளிலிருந்து பாண்டிய நாட்டின் மிகுதியானச் செல்வச் செழிப்பை அறிய முடிகிறது. அன்றைய மதிப்பில் 1200 கோடிப்பொன் சேர்ப்புக்கட்டி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிகின்றது. பொற்கட்டிகளின் மதிப்பு மட்டுமாக இது கருதப்படுகிறது. அதற்கு மேல் நவரத்தினங்கள். அதற்கு மேலும் விளக்குவதற்கு சொற்கள் இல்லை என்று டாக்டர் கே.கே. பிள்ளை எழுதுகிறார்.

வெளிநாடுகளில் இருந்து இத்தனைச் செல்வங்களும் பாண்டிய நாட்டுக்கு எப்படி வந்தடைந்தது? பாண்டியநாடு மேற்கத்திய மற்றும் சீனாவுடன் வியாபாரத் தொடர்பு வைத்திருந்தது. அதன் மூலமாக கிடைத்த திரவியங்களால் நாடு செழித்தது என்பதுதான் நிலை. அதற்காக இந்நாட்டிலிலுந்து என்ன என்னப் பொருட்கள் ஏற்றுமதியாயின என்பதற்கும் குறிப்புகள் உண்டு.

“மேற்கே கிரீஸ், ரோம், எகிப்து முதல் கிழக்கே சீனம் வரையில் கடலோடிப் பிழைத்தார்கள். எகிப்து, பாலஸ்தீனம், மெசப் பொட்டோமியா, பாபிலோனியா, சீனம் ஆகிய நாடுகளுடன் பண்டைத் தமிழர்கள் வாணியத் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தனர். தமிழகத்துப் பண்டங்களான ஏலம், இலவங்கம், இஞ்சி, மிளகு ஆகியவற்றிற்கு மேற்காசிய நாடுகளில் பண்டைய நாட்களிலேயே வேட்மையுண்டு.” (கே.கே. பிள்ளை – தமிழக வரலாறு – பக். 50)
“தமிழகம் ஏற்றுமதி செய்த சரக்குகளில் சாலச் சிறந்தவை இலவங்கம், இஞ்சி, மிளகு, ஏலம், அரிசி, நுண்வகைக் கலிங்கங்கள், தேக்கு, கருங்காலி, நூக்கு, சந்தனம் ஆகிய கட்டமரவகைகள் முதலியன” (கே.கே. பிள்ளை-தமிகை வரலாறு-1973 – பக். 5, 59)

அரிக்கமேட்டில் ஏராளம் உரோமானிய தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உரோமா புரியோடு வாணியம் இருந்தழமையால் மேலை நாட்டு வைரங்களும் கிடைத்தன. அவைகளும், பெற்காசுகளும் இப்பொழுது திறக்கப்பட்ட தங்கக்குவியல்களில் காணக் கிடைக்கின்றன. பாண்டிய நாட்டுடன் வாணியம் செய்ய நியமிக்கபட்டிருந்த உரோமானியர் ‘யவனர்’ எனப்பட்டனர். முதலாம் நூற்றாண்டில் அகஸ்டஸ் சீசர் தமிழ்நாட்டுடன் வாணியத் தொடர்பு கொண்டிருந்தார். முதலாம் நூற்றாண்டின் இடைப்பாகத்தில் பொறுப்பேற்ற ரோமைச் சக்கரவர்த்தி டைபிரியாஸ், கிரேக்கஸ் வாணிப்பத்தால் ரோமாபுரிச் செல்வம், ரோமைப் பெண்களின் வாசனைப் பொருட்கள் ஆசையால் கொடுக்கப்படுவதை தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும் என்று ரோமை சட்டமன்றமான “செனட்” சபைக்கு வேண்டுதல் விடுத்தார். அந்த அளவிற்கு ரோமிலிருந்து செல்வம் தமிழகம் வந்தள்ளது.. அவைகள் இன்று பத்மனாபர் கோயிலில் காணப்படகின்றன.

இந்த குறிப்புகளை வைத்துப் பாhக்கும்போது, மதுரையில் காணப்பட்ட நகைகள், முத்துக்கள், வைர வைடூரியங்கள், கிர்pடங்கள், போன்றவைகள் அனைத்தும் கேரளம் ஸ்ரீபத்மநாபர்கோயில் பாதாள நிலவறைகளில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்களுடன் ஒத்திருப்பதைக் காணலாம்.

இவைகள் அனைத்தும் கேரளத்தின் ஸ்ரீபத்மநாபர் கோயில் இரகசிய நிலவறைகளுக்குச் எவ்வாறு சென்றடைந்தன என்பதை விரிவாக ஆராய்ந்தால் உண்மையை அறிந்து கொள்ளலாம்.

“மாறவர்மன் குலசேகரனுக்கு இருமக்கள் இருந்தனர். ஒருவன் சடையவர்மன் சுந்தரபாண்டியன், மணந்த மனைவிக்குப் பிறந்தவன்;: மற்றவன் மாறவர்மனின் வீர பாண்டியன், மன்னனுடைய வைப்பு மனைவிக்குப் பிறந்தவன். மாறவர்மன், பட்டத்துக்குரிய சுந்தரபாண்டியனை புறக்கணத்து வீரபாண்டியனுக்கு இளவரசர் பட்டம் சூட்டினான் (கி.பி 1296). சுந்தரபாண்டியன் இந்த அநீதியைப் பொறானாய் வெகுண்டெழுந்து தன் தந்தையைக் கொன்று தானே அரியணையெறினான் (கி.பி.1310). கைக்கெட்டியது வாய்க்கெட்டாத வாய்ப்பைப் பெற்ற வீரபாண்டியன், சுந்தரபாண்டியன் மேல் போர் தொடுத்தான். சுந்தரபாணடியன் மதுரையை கைவிட்டு ஓடிவிட்டான்”. (கே.கே. பிள்ளை – பக். 377)

ஆனால் மதுரையை சுந்தரபாண்டியனிடமிருந்து திரும்பப் பிடித்துக் கொள்வதற்கு வீரபாண்டியன் வேணாட்டு அரசனான இரவிவாமன் குலசேகரனிடமிருந்து படைத்துணை பெற்றான். (பேராசிரியர் மு.இராஜய்யன் - பக். 104)
“Maravarman Kulasekara has two sons. Jathavarman Sundara Pandya and Jayavarman Veera Pandya/ of these the former was the son of the king by his lega queen/ and the latter by a mistress. Kulasekara/ with some partiality for the latter arranged for his succession after him. Enraged at this outrage, the elder Sundara Pandiya assassinated his father, drove his half brother from Madurai and ascended the throne. This led to a great civil war between the two brothers and to the interference of Malikkafur, during his invasion of Ma bar”. (A. Krishnaswamy Iyengar, Annamalai Nagar – Topics in South Indian History from Early Times upto 1565 – 1978 – Page 217)

எனவே, மதுரையில் அரசு கட்டிலுக்காக தாயாதிச் சண்டைத் தொடர்ந்தது. தன்னிடமிருந்து, வீரபாண்டியன், மதுரையை திரும்பவும் பிடித்துக் கொண்டமையாலும், அவனுக்கு வேணாட்டு அரசர் படைத்துணை அளித்து விட்டமையாலும், வேறு வழியின்றி சுந்தரபாண்டியன் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினான்: தென்னகத்தை கொள்ளையப்பதற்கான முழு முயற்சிகளில் ஈடுபட்டிருந்த அலாவுதீன் கில்ஜிக்கு இந்தப் பொன்னான வாய்ப்பை தானே உருவாக்கித் தந்தது.

அலாவுதீன் கில்ஜி, தளபதி மாலிக்கபூரிடம் மாபாரை (மலபாரை) கொள்ளையடித்து, தனது படையில் யானைப் படைப் பிரிவை வலுப்படுத்துவதற்காக ஏராளம் யானைகளை கவர்ந்து வர வேண்டும் என ஆணை பிறப்பித்தார். இந்த ஆணையை சிரமேற்கொண்டு, மாலிக்கபூர், பெரும்படையுடன் தென்னகம் புறப்பட்டான். வரலாற்று ஆய்வாளர் ஆர். சத்தியநாய்யர் இவ்வாறு குறிப்படுகிறார்.

“சுந்தரபாண்டியர் உதவிக்கு அழையாதிருப்பினும், மாலிக்கபூர் மாபாரில் படையெடுத்திருப்பாரென்பது உறுதி. ஏனெனில், அலாவுதீன் கில்ஜி, மாபாரின் வளம், செல்வம், சிறந்த யானைப்படை முதலியவற்றால் தூண்டப்பட்டு அப்பகுதியைக் கைப்பற்ற ஆர்வம் கொண்டிருந்தார்”. (இந்திய வரலாறு – பக். 112)

இதனால், மாலிக்கபூரின் முக்கிய நோக்கம் மாபாரைக் கபை;பற்றி முடிந்த அளவு யானைகளை கவர்ந்தெடுப்பதேயாகும். அந்த வேளையில் தான் மதுரையில் சுந்தரபாண்டியன் அழைப்பை ஏற்று, தனது பாதையை மதுரை நோக்கி மாற்றினால், மதுரையை மீட்டு சுந்தரபாணடியனுக்கு கொடுத்துவிட்டு, தஞ்சை, கும்பை, சிதம்பரம் போன்ற கோயில்களை கொள்ளை அடித்துவிட்டு திரும்பவும் மதுரையைக் கவருவதற்காக வந்தவனுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. மதுரைப் பொக்கிஷங்களையெல்லாம் வீராபண்டடியனும், சுந்தரபாண்டியனும், மீனாட்சி அம்மன் கோயில் பூசாரிகளும் கடத்தி மேற்கு சென்றுள்ளனர் என்று கேள்விப்பட்ட உடனே, மாலிக்கபூர் தன் படையை வேணாட்டு மீது நடத்தினான். இப்படையை வேணாட்டு அரசன் முதலில் களக்காட்டிலும், தொடர்ந்து ஆரல்வாய்மொழியிலும் எதிர்த்து பேரிட்டார். தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்த மாலிக்கபூர், ஆவணாட்டுடன் சமரசம் செய்து கொண்டு 500 யானைகளைப் பெற்று, ராமேஸ்வரம் சென்றான் என்று புலனாகிறது. மதுரைச் பொக்கிஷங்களைத் தேடி எடுக்கும் முயற்சியை கைவிட்டு, யானைகளுடன் திருப்தியடைந்து, வேணாட்டை விட்டுவிட்டான்.

“அச்சமயம் டெல்லி சுல்தன் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதியான மாலிக்கபூர் ஒரு செரும் படையுடன் தெற்கு நோக்கி வந்து கொண்டிருந்தான். சுந்தரபாண்டியன் அவனை அணுகி படைத்துணை அளிக்கும்படி விண்ணப்பித்துக் கொண்டான். மாலிக்காபூர் மதுரையை தாக்கினான். வீரபாண்டியன் மதுரையைவிட்டு வெளியேறப் பல இடங்களுக்கும் ஒளித்து மாலிக்காபூருக்கு தொல்லை கொடுத்தான்…”

“பலமுனைகளிலும் வீரபாண்டியன் மாலிக்காபூரை கடும் போர்களில் கலக்கி வந்தான்… மாலிக்காபூர் உறையூருக்கு அண்மையிலிருந்த வீரபாண்டியனின் தலைநகரான “பீர்வில்” என்ற இடத்தை நோக்கி தன் படையை செலுத்தினான். வீரபாண்டியன் படைகளில் பணிபுரிந்து வந்த 20,000 முஸ்லீம் படைவீரர்கள் தக்க சமயத்தில் தம் கடமையையும் நன்றியையும் மறந்தவர்களாய் மாலிக்காபூர் படையினருடன் சேர்ந்து கொண்டனர். வீரபாண்டியன் ஊரைவிட்டே ஓடிவிட்டான். நகரமும் மாலிக்காப+ரின் கைக்குள் விழுந்தது. அடை மழை வேறு பெய்யத்தொடங்கியது. அதனால் போரைத் தொடர இயலாதவனாய் மாலிக்காபூர் கண்ணணுரை நோக்கி விரைந்தான். அங்கே வீரபாண்டியன் காணப்பட்டான் எனச் செய்தி வந்தது. வழியில் பொன்னும் மணியும் ஏற்றிக் கொண்டு சென்ற பாண்டி நாட்டு யானைகள் நூற்றியிருபதை கைப்பற்றிக் கொண்டான்”. (கே.கே. பிள்ளை – 1975 – பக். 377 ரூ 378)

ஆனால் வேறு சில வரலாற்று ஆசிரியர்கள், வீரபாண்டியன் மதுரையை விட்டு வெளியேறுகின்ற வேளையில். அரண்மனை பொக்கிஷங்கள் அனைத்தையும் 120 யானைகளில் ஏற்றிச் சென்று, மேற்குக் காடுகளில்  சென்று காணாமற் போனான் என்று கூறுகின்றனர். பாண்டிய நாட்டின் மேற்குக் காடுகள் வேணாட்டின் கிழக்கு காடுகளாகும். அங்கிருந்;து, பாதுகாப்பு நிமித்தம் பொக்கிஷங்களை வேணாட்டிக்கு எடுத்துச் செல்வதற்கே அதிக வாய்ப்பு, ஏனெனில், மதுரையை சுந்தரபாண்டியனிடமிருந்து மீட்டு, வீரபாண்டியனுக்கு அரியணையை அளிப்பதில் படைத்துணை கொடுத்தவன் வேணாட்டு மன்னன். இரவிவர்மன் குலசேகரன் ஆவான். ஆகையால் வேணாட்டு மன்னர்கள் பாண்டியர்களுக்கு உறுதுணையாகவே என்றும் இருந்தள்ளனர். எனவே இந்த 120 யானைப் பொக்கிஷங்களும் வேணாட்டுக்கே சென்றடைந்தன என்று கருத அதிக வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையில் மாலிக்காபூர் வீரபாண்டியனைத் தேடிக்கொண்டு சிதம்பரம் சென்றடைந்தான். அங்கும் கோயில் பொக்கிஷங்களை சூறையாடினான். இடையில் காணப்பட்ட கோயில்களை இடித்து தரைமட்மாக்கினான். திருவரங்கத்தையும் அவன் விட்டு வைத்தானில்லை. அடுத்த மதுரையை குறி வைத்தான். அவன் தாக்குதலை முன்னரேயறிந்த சுந்தரபாண்டியனும் மதுரையை கைவிட்டு அரண்மனை பொக்கிஷங்களுடன் ஓடிவிட்டான்.

ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்சிலைகளையும் சாமிஆவரணங்களையும், பொக்கிஷங்களையும் கோயில் அர்ச்சர்களும், பிராமணப்பணியாளர்களும், மிகவும் இரகசியமாக எடுத்து ஆரல்வாய்மொழிக் கோட்டைக்கு வந்துவிட்டனர். அங்கே அவைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இதை வரலாற்று அறிஞர் J.H. Nelson இவ்வாறு குறிப்படுகிறார்.

“The golden idol named Mathurai – Nayana – Veittha – Perumal, which graced the festal processions of god Siva, had been carried for safety to the Malabar country, when Parakrama fled for his life and there mysteriously lost together with much treasure. (J.H. Nelson, The MaduraCountry – A. Manual – 1868 page 81)

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்கச் சிலையையும், பொக்கிஷங்களும் மலபார் நாட்டில் காணாமற் போயிற்று என்று கூறுவதிலிருந்து, அவைகள் எங்கோ அறியபடாத இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது என்பதையே காட்டுகிறது.

“The golden idols which graced the festival procession of god Siva had been carried for fafety to Kerala. The golden idols were installed and worshipped in Kilukiluppaikadu in Aramboly. Malik kfur would have come to take back the golden idols, as Aramboly was well guarded the Muslim invasion of Travancore was averted. (Prof: N. Rajappan, unpublished Ph. Dthesis Chapter IV – page 69)

ஆரல்வாய்மொழியில் கிலுகிலுப்பைக்காடு என்ற இடம் மலைச்சரிவு ஆனதினால் அங்கே ஒரு சாஸ்தா கோயில் இருந்தது. அதில் மதுரையிலிருந்து கொண்டு வரப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரை பிரதிஷ்டை செய்தமையால், அந்த கோயில் “மீனாட்சி சுந்தரேஸ்வர் கோயில்” என்று பெயர் மாற்றம் கண்டது. இக்கோயில் இன்றும் ஆரல்வாய்மொழி வடக்குத் தெருவில் பிள்ளைமார் சமூகத்தார் வாழ்விடத்தில் காணலாம். இங்கே நிறுவப்பட்டிருந்த இந்த தங்க விக்கிரகங்களும், அதன் ஆபரணங்களும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தமையால், அவைகளை அங்கிருந்து எடுத்து திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் பாதுகாப்புக்காக வைத்தனர்.

மாலிக்காபூர் மதுரையை வீரபாண்டியனிடமிருந்து மீட்டு, சுந்தரபாண்டியனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு, வேறு போர் இல்லாத நிலையில் தஞ்சை மற்றும் சிதம்பரம் கோயில்களில் படையெடுத்து செல்வங்களையும், யானைகளையும் கவர்ந்துவிட்டு மீண்டும் மதுரை திரும்பினான். அவனது நோக்கம், மதுரையையும் கொள்ளை அடித்துவிட்டு, டெல்லி திரும்ப வேண்டும் என்பதாயிருந்தது. இவனது நோக்கத்தை அறிந்து கொண்ட சுந்தரபாண்டியன், அரண்மனை மற்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பொக்கிஷங்களையும் எடுத்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டான். வீரபாண்டியனை எப்படியாவது பிடித்து, அவன் கவர்ந்து சென்ற பொக்கிஷங்களை பிடித்தெடுப்பதற்காக மாலிக்கப+ர் வனப்பகுதிகளுக்கு படையெடுத்தான்.

“Kaffur went in pursuit of Veera Pandiya, who had fled into deep forest, but soon he gave up the chase because of incessant rain and the difficult forest terrain… There after he made a sudden raid on Madura, but found that Sundara Pandya had got news in advance and has fled with all his treasure. Some Chroniclers like Firistha and Haji – ud- Dabir, mention that Kaffur reached the extreme south, of Indian Peninsula. It could be that he was able to go upto Rameswaram, for in his work entitled ‘Ashiga’ Amir Khusrav speaks of an invasion against Veera Pandya upto the coast of Ceylon”. (A History of Indian Civilization – Vol. II Part – I K.P. Bhjadur – 1980 – Page 61,62).

னவே பாண்டிய சகோதரர்களைத் தேடி மாலிக்காப+ர் தென்னகமெங்கும் ஜல்லடை போட்டு அலசியிருக்கிறான். ஆனால் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் இருவரும் வேணாட்டுக்குத்தான் தப்பியிருக்க வேண்டும். இந்த தேடுதல் வேலையில் அவன் ஆரல்வாய்மொழிக்கும் வந்திருக்கிறான். ஆனால் வேணாட்டு அரசனின் படைகள் அவனை எதிர்த்து நின்று போர் புரிந்ததனால், அவன் வேறு வழியின்றி சமாதானப் பேச்சு மூலம் 500 யானைகளைப் பெற்றுக் கொண்டு தெற்கே சென்றான். இதனால் பாண்டியநாட்டு பொக்கிஷங்களும் வேணாட்டும் தப்பித்துக் கொண்டன.
பாண்டிய நாட்டை ஒட்டு மொத்தமாகக் கொள்ளையடித்துச் சேர்த்த பொக்கிஷங்களைக் கொண்டு, மாலிக்காப+ர் 1311 – ல் டெல்லி திரும்பினான்.

“After these exploits he returned to Delhi in 1311 with enormous spoils which included 312 elephants, 20,000 horses, 2750 pounds of gold, equal in value to ten crores of tanks and chests of jewels. No such booty had ever before been brought fo Delhi”. (History of India (1000 – 1707) – Ashirbadilal Sri Vastava- 1971- Page 126 & 124) இந்த எண்ணிக்கைகளிலும் வரலாற்று ஆசிரியர்கள் ஒத்த கருத்துடன் இல்லை.

பாண்டிய நாட்டு வாரிசுகளான சுந்தரபாண்டியனும், வீரபாண்டியனும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேவஸ்தான தங்கச் சிலைகளும், நகைகளும் அவனுக்கு கிடைத்திருந்தால் அவன் கவர்ந்து சென்ற பொக்கிஷங்கள் பல மடங்கு உயர்ந்திருக்கும். ஆனால் முன் கருதலுடன் சேர நாட்டில் இவைகள் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டதால், அவைகள் தப்பித்துக் கொண்டன.

மாலிக்காப+ருக்குப் பிறகு, டெல்லி சுல்தான் முகமதுபின்துக்ளக் தனது பிரதிநிதிகளை மதுரைக்கு அனுப்பி வைத்து, இசுலாமியர்களின் ஆட்சியை பாண்டிய நாட்டில் நிறுவினான். இவர்களது ஆட்சி 1367 வரைத் தொடர்ந்தது. அவர்களை விரட்டுகிறேன் என்று கூறிக் கொண்டு விசய நகரப் பேரரசு தனது ஆட்சியை மதுரையில் (1367 முதல் 1565 வரை) நிலை நிறுத்தியது. ஆகையால் பாண்டிய மன்னர்குல வாரிசுகளால் பாண்டிய நாட்டைத் தொடர்ந்து ஆட்சிச் செய்ய இயலாமற் போகவே, அவர்களது குலம் அழிந்தது. இதனால் சேர நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பாண்டியநாட்டு பொக்கிஷங்களை பிற்காலத்தில் உரிமை கொண்டு மீட்டுச் செல்வதற்கு யாரும் வராத காரணத்தால், இன்று வரை அவைகள் கேரளாவில், ஸ்ரீ பத்மனாபர் கோயிலில் ரகசிய பாதாள அறைகளில் நிரம்பிக் கிடைக்கின்றன.

இந்த செல்வங்களை அங்கே பதுக்கிப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த ரகசியத்தை அறிந்து, பிற்காலங்களிலும் அதைக் கைப்பற்றுவதற்குப் பல முயற்சிகள் நடந்துள்ளன. 1544 – ல் விஜய நகரத் தளபதி அச்சுதராயரும், 1634 – ல் மதுரை மன்னர் திருமலை நாயக்கரும், 1680- ல் முகிலனும் திருவிதாங்கூரை தாக்கினர். 1680 – ல் படை நடத்திய முகிலன் எவ்வித எதிர்ப்புமின்றி திருவனந்தபுரம் சென்று நகைகளை கைப்பற்றுவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சியில் தோல்வியுற்றான். அவனுக்குப் பிறகு 1697–ல் ராணி மங்கம்மாளின் படைத்தலைவன் நகரசப் பையனும், 1712 – ல் அனந்தோசி நாயக்கனும் தொடர்ந்து படையெடுத்து நகைகளைப் பெற முடியாது திரும்பினர், இவனுக்குப் பிறகு திருவிதாங்கூர் வட எல்லை வழியாக, நகைகளைக் கவருதல் என்ற நோக்குடன் மைசூர் டிப்பு சுல்தானின் முயற்சியும் பயனளிக்கவில்லை. இதனால் ஸ்ரீபத்மனாபர் கோயிலில் அந்த பாண்டிய நாட்டுச் செல்வங்கள் சேதப்பாடுகள் இன்றி பாதுகாக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஸ்ரீபத்மனாபசுவாமி கோயிலில் ரகசிய நிலவறைகளில் பாதுகாக்கப்பட்டு வரும் பொரும்பாலான செல்வம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நகைகளும், பாண்டிய நாட்டின் செல்வங்களும் ஆகும். அதை திரும்ப பெறுவதற்கு தமிழக அரசுக்கு முழு உரிமையுண்டு.
மதுரையில் தாயதிச் சண்டையால் நாடு அழிந்தது. சுந்தரபாண்டியன் மதுரையை மீட்பதற்கு டெல்லி சுல்தான் படைத்தளபதி மாலிக்கப+ரை விரும்பி அழைத்தான். அதை ஏற்ற மாலிக்கப+ர் வீரபாண்டியனை விரட்டிவிட்டு சுந்தரபாண்டியனை மதுரைக்கு அரசானாக்கினான். பிறகு தென்னாடு புகுந்து அனைத்துக் கோயில்களையும் கொள்ளையிட்டான். ஆனால் மதுரையை விட்டு வெளியேறுகின்ற வேளையில் வீரபாண்டியன் 120 யானைகளில் பாண்டிய நாட்டின் பொன்னையும், தங்கத்தையும், மாணிக்கங்களையும் கூடவே எடுத்துச் சென்றான் என்று கே.கே.புpள்ளை கூறுகிறார் (பக்கம் 378) மீதமிருந்தை சுந்தரபாண்டியன்  எடுத்துக் கொண்டு தெரியாத இடத்துக்கு சென்று விட்டான் என்று பெராசிரியர் கே.இராஜய்யன் எழுதுகிறார்(பக்கம் 111)
 “While Veera Pandya fled to the woods, Sundara Pandya, collected his treasures and escaped to some unknown place. There is a tradition that Ravivarma Kulasekara, the ruler of Venad fought against the Afghans and forced them to retreat” (Prof: K. Rajayyan – History of Tamil Nadu, past to present – 1955 – page 111).
இதிலிருந்து நம் அறிவுக்கு ஒரு உண்மைப் புலனாகிறது. வேணாட்டு அரசர்கள், பாண்டிய அரசுக்கு ஆதரவும், அடைக்கலமுமாக இருந்தனர் என்பதே. அறியப்படாத இடத்துக்கு, மதுரை பொக்பிஷங்களுடன் சுந்தரபாண்டியன் சென்றுவிட்டான் என்று குறிக்கப்பட்டிருப்பது, அவைகளை வேணாட்டுக்குத்தான் சுந்தரபாண்டியன் எடுத்துக் சென்றுள்ளான் என்பதை ரகசியமாக வைத்து, அவைகளை வேணாடு பாதுகாப்பதை வெளி உலகிற்குத் தெரியாமல் இருப்பதற்குச் செய்த தந்திரம் என்றே கருத வேண்டும். எனவே ஸ்ரீபத்மநாபர் கோவில் பாதாள ரகசிய அறைகளில் காணப்படுகின்ற தங்க நகைகள், வைர வைடூரியங்கள், பொற்காசுகள், தங்க கீரிடங்கள், சிலைகள் அனைத்தும் பாண்டிய நாட்டு உடமைகளும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உரியவைகளும் ஆகும்.

இவைகளைக் குறித்த விவரங்கள் அனைத்தும் மதிலகம் ஆவணங்களில் காணலாம். ஆனால் அவைகள் அழிக்கப்பட்டிருப்பதற்கும் வாய்ப்பு உண்டு. எனென்றால் மலையாளிகள் முன் கருதலுடன்தான் எப்போதும் செயலாற்றுவர். இருப்பினும் தமிழக அரசு கேரள அரசுடன் இது குறித்து தொடர்பு கொண்டு, பாண்டிய நாட்டுக்கும், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கும் சொந்தமான இந்த நகைகள் அனைத்தையும் மீட்டெடுக்க வேண்டும். தேவைப்பட்டால், கேரள உயர்நீதிமன்றத்தில் திரு. சுந்தரராஜ் ஐயர் தொடர்ந்திருக்கின்ற நீதிமன்ற வழக்கில், தமிழக அரசம் தன்னை இணைத்துக் கொள்வது தேவையாகிறது. அல்லது தனியாக ஒரு வழக்கை டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தொடரலாம். அவ்வாறு தொடர்ந்து தமிழர்களுக்கு, குறிப்பாக பாண்டிய நாட்டிற்குச் சொந்தமான நகைகளை மீட்டெடுத்திட வேண்டும்.

(Dr. D. Peter)
Chairman,
Kanyakumari Institute of Development Studies (KIDS),
266, Water Tank Road, Nagercoil-629001
Phone :             +91 4652 279745      
Mobile :             +91 9043952430      

0/Post a Comment/Comments

Previous News Next News
New Vision
New Vision