சந்தைகள்

சந்தைகள்

கனக மூலம் சந்தை:

ஞாயிறு, வியாழன் ஆகிய இரு நாட்களில் வடசேரியில் கூடுகிறது. நெல்லை மாவட்டத்தின் பொருட்கள் இங்கு வந்து கோட்டயம் வரை செல்கின்றன. திருவனந்தபுரம் பகுதிகளுக்கு காய்கறிகளும், மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலிக்கு தேங்காயும், கொச்சினுக்கு கருவேப்பிலையும் இங்கிருந்து செல்கின்றன.

திங்கள் சந்தை: 

திங்கட்கிழமைதோறும் இரணியலில் கூடுகிறது. இது மொத்த வியாபாரத்திற்கு பெயர் பெற்ற இரண்டாவது சந்தை.

களியக்காவிளைச் சந்தை:

திங்கள், வியாழன் கிழமைகளில் கூடுகிறது. வெற்றிலை, இலவம்பஞ்சு விற்பனைக்கு பெயர் பெற்றது.
தாலியறுத்தான் சந்தை:

மகாதானபுரத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கூடுகிறது. கால்நடைகள், காய்கறிகள், கிழங்கு வகைகள் இங்கு பெரியளவில் விற்பனையாகின்றன.

கருங்கல் சந்தை:

இங்கு புளி, மரச்சீனி, கருப்பட்டி, இறைச்சி வகைகளும் பெருமளவு கொள்முதல் செய்யப்படுகின்றன.

வெள்ளி சந்தை:

இங்கு மாங்காய், பலாப்பழம், வெல்லம், புளி வகைகளும் பெருமளவு கொள்முதல் செய்யப்படுகின்றன.

அந்திச்சந்தை:

கன்னியாகுமரி மாவட்டத்தில் மணவாளக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது அந்திசந்தை. இங்கு மாலை வேளையில் அரிசி, காய்கறிகள், மீன்கள், தேங்காய் போன்றவைகள் பெருமளவில் விற்பனை செய்யப்படுகின்றன. காலை வேளையிலும் சந்தை கூடுகிறது.

1/Post a Comment/Comments

Post a Comment

Previous News Next News
New Vision
New Vision