அணைகள்

மாம்பழத்துறையாறு அணை
மாம்பழத்துறையாறு அணை கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள அணையாகும். இது வில்லுக்குறியிலிருந்துசுமார் 3 கட்டைத் (கிலோமீட்டர்) தொலைவில் ஆணைக்கிடங்கு என்னுமிடத்தில் மாம்பழத்துறையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 44.54 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.80 அடி உயரமுள்ள இவ்வணையின் மூலம் 25 குளங்களும் 905.76 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதிப் பெறுகின்றது. தமிழக அரசால் 2007ம் ஆண்டு ரூபாய் 20 கோடியே 97 லட்சம் செலவில் அணைக் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டு, 29 நவம்பர், 2010 அன்று முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது.

முக்கடல் அணை
முக்கடல் அணை வேம்பாறு குறுக்கே கட்டப்படுள்ளது. தமிழ்நாடு மாநிலத்தில் நாகர்கோவில் நகரில் இருந்து 10 கிமீ (6.2 மை)தொலைவில் அமைந்துள்ளது. நாகர்கோவில் நகரின் முக்கிய குடிநீர் ஆதரமாக விளங்குகிறது.

பெருஞ்சாணி அணை
பெருஞ்சாணி அணை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான அணையாகும். இது கன்னியாகுமரியிலிருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ஒரு சுற்றுலாத்தலமாகும். இவ்வணை 1948 இல் தொடங்கப்பட்டு 1958இல் கட்டி முடிக்கப்பட்டது. 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இந்த அணையில் உண்டாக்கப்பட்ட நீர்த்தேக்கம் 33.34 சதுர மைல் பரப்பாகும். இந்நீர்த் தேக்கம் திருவனந்தபுரத்தின் தென்கிழக்கு, 58 கி.மீ. தொலைவிலும், குலசேகரம் என்னுமிடத்திலிருந்து 10 கி.மீ. கிழக்கிலும் எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணை மூலம் சுமார் 6000 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.

0/Post a Comment/Comments

Previous News Next News
New Vision
New Vision