Kamarajar Mandabam

New Vision

காமராஜர் மண்டபம் - கன்னியாகுமரி
02.10.2000த்தில் கல்வித்தந்தை காமராஜரின் நினைவிடம் திறந்து வைக்கப்பட்டது. மூன்று கடல்கள் தழுவிக் கொள்ளும் கன்னியாகுமரிக் கடற்கரையில், காந்தி மண்டபத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. தற்காலக் கட்டிடக்கலையின் அழகு மண்டபத்தில் பிரதிபலிக்கிறது. பெருந்தலைவர் காமராஜரின் அஸ்தி கரைக்கப்படுவதற்கு முன்னால் இங்கு வைக்கப்பட்டிருந்தது. 
காந்தி மண்டபத்தைவிட இங்கு புகைப்படங்கள் அதிகம். பெருந்தலைவரின் இளமைக்காலங்கள் முதல் பல அரசியல் தலைவர்களுடன் அவரது அரிய புகைப்படங்கள் சுவரெங்கும் பொருத்தப்பட்டிருக்கின்றன. எளிமையான அரசியல்வாதிக்கு இன்றுவரை உதாரணம் காட்டப்படுபவர் காமராஜர். முதலமைச்சர் பொறுப்பில் இவரது மதிய உணவுத்திட்டம் பெரும்சாதனை. பலனடைந்த ஏழைக்குழந்தைகள் ஏராளம்.


நினைவுச்சின்னத்தின் மையத்தில் காமராஜரின் உருவச்சிலை அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தூய்மையும், அமைதியும் காக்க வேண்டியது மக்களின் கடமை.

Thanks to Enthamizh
New Vision

Post a Comment

Previous News Next News