தகவல் திருட்டில் இருந்து தப்பிக்க…!

New Vision
தகவல் திருட்டில் இருந்து தப்பிக்க…!

இணையத்தால் எண்ணற்ற நன்மைகள் இருக்கின்றன. ஆனால், நன்மைக்கு அருகிலேயே தீமையும் இருக்கும் என்பதற்கு ஏற்ப இணையத்தில் ஏராளமான அபாயங்களும் உள்ளன. அவற்றில், தனிநபர்களின் தகவல்கள் திருடப்படுவது ஒரு முக்கியமான ஆபத்து.

இந்த தகவல் திருட்டு, சமீபமாக அதிகரித்து வருகிறது.இதற்காக பல்வேறு உத்திகளை, ‘ஹேக்கர்கள்’ எனப்படும் இணைய அத்துமீறல்காரர்கள் உபயோகிக்கின்றனர். தற்போது புதிய முறை ஒன்றையும் இவர்கள் பயன்படுத்துகின்றனர்.

இதன்படி, சமூக வலைத்தளங்களின் வழியாக மேற்கொள்ளப்படும் வினாடி வினாக்களுக்கு விடை அளிக்கச் செய்தல், வாக்களிக்கச் செய்தல் போன்றவற்றின் வாயிலாக தகவல்களைத் திருடுகின்றனர்.

எனவே வலைத்தளங்கள் வாயிலாக தகவல் திருடப்படுவதை தடுக்க, நம்பிக்கை வாய்ந்த வினாடி வினா மற்றும் வாக்களித்தல் செயல்முறைகளில் மட்டும் பயனாளர்கள் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
New Vision

Post a Comment

Previous News Next News