Computer Tips

வீடியோவிலிருந்து ஆடியோவை பிரித்தெடுக்க மென்பொருள்! 
நீங்கள் வைத்துள்ள படங்களில் இருந்து ஆடியோவை மட்டும் பிரித்து எடுக்க நினைக்கிறீர்களா ? உங்களுக்கு AoA Audio Extractor என்ற இலவச மென்பொருள் உதவும்.இந்த மென்பொருள் AVI, MPEG, MPG, FLV, DAT, WMV,MOV, MP4, and 3GP போன்ற வகைகளில் இருந்து MP3, WAV or AC3 போன்ற வகைகளில் மாற்றிக்கொடுக்கும். இது ஒரு இலவச மென்பொருள். இதில் நீங்கள் குறிப்பிடும் வீடியோவின் முன்னோட்டத்தை பார்க்கலாம். மேலும் நீங்கள் விரும்பிய பகுதியை மட்டும் தேர்வு செய்து சேமித்துக்கொள்ளலாம். முக்கிய விஷயம் என்ன என்றால் வீடியோவில் இருக்கும் படம் அல்லது பாடலின் தரம் நீங்கள் மாற்றிய பின்னும் ஒரே வகையில் இருக்கும். இதன் தரவிறக்க அளவு 3.8 MB மட்டுமே. Download Link Download As PDF



ஓவியம் வரைந்து பழக ஒரு சிறந்த இலவச மென்பொருள்...


மாறிப்போன இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் எல்லாம் கம்ப்யூட்டர் என ஆகிவிட்டது. அடோப் போட்டோசாப், கோரல்ட்ரா, பெயிண்ட் சாப் என வித விதமான கிராபிக் மென்பொருட்கள் மூலம் எல்லோரும் மிக எளிதாக விதவிதமான ஓவியங்களையும் போட்டோ டிசைன்களையும் உருவாக்க ஆரம்பித்துவிட்டார்கள். இருப்பினும் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் நாமும் கம்ப்யூட்டர் மூலம் ஓவியம் வரைந்து பழக வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். அப்படி ஆசை உள்ள ஓவியர்களுக்கு இலவசமாக ஒரு சிறந்த மென்பொருள் இது.

0/Post a Comment/Comments

Previous News Next News
New Vision
New Vision