ஏர்டெல் தருகிறது 1000 GB DATA

ஜியோ வருகைக்குப் பிறகு மற்ற செல்போன் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள சலுகைகளை அள்ளித் தருகிறார்கள். குறிப்பாக ஏர்டெல்லுக்கும் ரிலையன்ஸுக்கும் இடையே வணிக யுத்தமே நடந்து வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது ஜியோ மொபைல் திட்டத்தையும் கொண்டு வர இருக்கிறது.
இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 1000 GB டேட்டா தர முடிவுசெய்துள்ளது. இந்தத் திட்டம் பிராட்பாண்ட் என சொல்லப்படும் வீட்டில் பயன்படுத்தப்படும் தொலைபேசி வழி இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே ஆகும். செல்போன் வைத்திருப்பவர்களுக்கு இத்திட்டம் பொருந்ததாது.

இந்தத்திட்டம் ஜுன் 12ம் தேதி அன்று அல்லது ஜூன் 12க்கு பிறகு பிராட்பாண்ட் இணைப்பு எடுத்தவர்கள், இனி புதிதாக இணைப்பு எடுக்க இருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இத்திட்டத்தின் படி, தற்போது மாதாந்திர கட்டணம் செலுத்தி பிராட்பாண்ட் இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் ரூ.599-ரூ 2,000 வரையிலான திட்டத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் பொருந்தும்.

வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் மாதாந்திரத் திட்டத்தில் எவ்வளவு GB டேட்டா இருக்கிறதோ அதனுடன் கூடுதலாக இந்த 1000 GB இணைக்கப்படும். இப்படி ஒருமுறை இணைக்கப்படும் டேட்டா ஒரு வருடம் முழுவதும் இருக்கும். ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளரின் திட்டத்தில் உள்ள டேட்டா அளவு தீர்ந்த பிறகு கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள 1000 GB டேட்டாவில் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த திட்டம் வணிக வளாகங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் போன்ற சிறப்புத்திட்டங்களுக்கு பொருந்தாது. இத்திட்டத்தின் படி, 899 ரூபாய்க்கு 60 GB ஒரு மாதத்திற்கும், 1000 GB ஒரு வருடத்திற்கும் வழங்கப்படும். இதேபோல், ரூ1099க்கு 100 GB (ஒரு மாதத்திற்கு) + 1000 GB (ஒரு வருடத்திற்கு) வழங்கப்படும்.

திட்டத்தில் இணைய என்ன செய்யவேண்டும்?

* தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் ஏர்டெல் இணையத்தில் பதிவுசெய்ய வேண்டும்.
* 1000 ஜி.பி திட்டத்தைப் பெற அடிப்படைத்திட்டமான ரூ.599- ரூ.1,999 வரையிலான எதாவது ஒரு மாதாந்திரத் திட்டத்தில் இணைய வேண்டும்.
* புதிதாக ப்ராட்பாண்ட் வசதி பெற நினைப்பவர்கள் இணையத்திலேயே பதிவுசெய்துகொள்ளலாம்.

0/Post a Comment/Comments

Previous News Next News
New Vision
New Vision